Sunday, September 6, 2020

மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களின் சொற்பொழிவுகள்

நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள் 
அது உங்கள் கவலைகளை நிச்சயம் நீக்கிவிடும்
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்.
நேர்மையான வியாபாரம்
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்.
 வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவைகள்

அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன. 

ஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, "வியாபாரிகளே" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து  "வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்" என்றார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

நபியவர்கள் வியாபாரிகளாக இருந்த எம்மிடம் வந்து "வியாபாரிகளே! பொய்யையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என "தபரானி"யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.

வியாபாரத்தின்போது தவிர்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள்

1. அளவை நிறுவையில் மோசடி செய்தல்

அளவை நிறுவையில் முறையாக நடந்து கொள்ளவேண்டுமென அல்லாஹ் கீழ் வரும் அல்குர் ஆன் வசனத்தின் மூலம் பணிப்புரை விடுக்கிறான்.  

"நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள்; நிறுத்தால் சரியான எடையைக் கொண்டு நிறுங்கள்......."

அளவை நிறுவையில் மோசடி செய்வதை அல்லாஹ் விலக்கியுள்ளமையைக் கீழ்வரும் அல்குர் ஆன் வசனத்திலிருந்து தெளிவாக விளங்க முடியும். 

அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும்போதும்; நிறுத்துக் கொடுக்கும்போதும் குறைத்துவிடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்த நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன்  (விசாரணைக்காக) நிற்பர். (83: 1 - 6)

விற்றல், வாங்கல் நடவடிக்கைகளில் விட்டுக்கொடுத்து நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக"  என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)

2. அபகரிக்கப்பட்ட, திருடப்பட்ட பொருட்களை வாங்குதல்

ஒருவர் மர்ரொருவரிடம் இருந்து நியாயமற்ற முறையில் பெற்ற ஒரு பொருளை விற்பாராயின் அதனை வாங்குவது ஹராமானதாகும்.

"எவர் திருடப்பட்ட ஒரு பொருளை அது திருடப்பட்ட பொருள்தான் என அறிந்திருதும் வாங்குவாராயின் அவரும் அதன் பாவத்திலும் குற்றத்திலும்  பங்கேற்றவராவார்". (அல் பைஹகீ)

அவ்வாறே மதுபானம் தயாரிப்பதற்காகத் திராட்சையை வாங்குபவருக்கு அதனை விற்பது ஹராமானதாகும். மேலும் குழப்பவதிகளுக்கும் விஷமிகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதும் கூடாது. இவ்வாறு ஒரு ஹலாலான பொருளாயினும் அதனை ஒரு ஹராத்தைச் செய்வதற்குப் பயன்படுத்துவோருக்கு விற்பது விலக்கப்பட்டதாகும்.

3. வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்தல்

அதிகமாக சத்தியம் செய்வது அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைப்பதாக அமைவதுடன் நுகர்வோரை ஏமாற்றுவதற்கான வழியாகவும் அமைய முடியும். இதனாலேயே நபியவர்கள் இதைப் பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தடுத்தார்கள்.

"சத்தியம் செய்வது பண்டத்திற்கு கிராக்கியை ஏற்படுத்தினாலும் 'பரக்கத்'தை அழித்துவிடும்" (புஹாரி) 
"நிச்சயமாக வியாபாரிகளே பாவிகள்" என நபியவர்கள் குறிப்பிட்ட போது "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி இருக்கிறான் அல்லவா" என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். எனினும், அவர்கள் சத்தியம் செய்து பாவம் செய்கின்றார்கள். பேச்சில் பொய் சொல்கிறார்கள்" என்று கூறினார்கள். (அஹ்மத்)

4. பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடல்

பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடுவதைச் சில அறிஞர்கள் அனுமதித்தாலும் அது விரும்பத்தக்கதல்ல என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

"நீங்கள் பள்ளிவாசலில் விற்பவரையோ வாங்குபவரையோ கண்டால், 'அல்லாஹ் உனது வியாபாரத்தை இலாபகரமானதாக் அமைக்காதிருக்கட்டும்' என அவனுக்குக் கூறுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

ஜும்மாவுக்காக அதான் சொல்லப்பட்டதன் பின் வியாபாரம் செய்வது ஹராமாகும். இமாம் அஹ்மத் போன்ற சில அறிஞர்கள், 'அவ்வேளையில் நடைபெற்ற வியாபாரம் செல்லுபடியாகாது' என்று கூறுகின்றனர்.

5. விலைக்கட்டுப்பாடு - அத்தஸ்ஈர்

வாங்குவோர், விற்போர் ஆகிய இரு தரப்பினதும் நலனைக் கருத்திற்கொண்டு பொருட்களுக்கு ஒரு குறித்த விலையை நிரணயிப்பதே நடைமுறையில் விலைக்கட்டுப்பாடு என வழங்கப்படுகிறது. சில நபிமொழிகளில் இச்செயற்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் சில மனிதர்கள் நபியவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! பண்டங்களின் விலை அதிகரித்து விட்டது. எனவே, விலையைக் கட்டுப்படுத்துங்கள்" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள் "விலையை நிர்ணயிப்பவனும் ரிஸ்க்கை சுருக்குபவனும்  விரித்துக் கொடுப்பவனும் வாழ்க்கை வசதிகளை அளிப்பதும் அல்லாஹ்வே. உண்மையாக, உங்களில் எவரும் உயிரிலோ பொர்ருளிலோ இழைக்கப்பட்ட ஓர் அநீதிக்காக என்னிடம் கோராத நிலையில் நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

இந்நபிமொழியை ஆதாரமாக வைத்து அரசு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது கூடாது என்ற கருத்தை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், அது அநீதியாக அமைவதோடு பொருளாதார நடவடிக்கைகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அமையும். நுகர்வோர் நலன் பேணப்பட வேண்டியது போலவே வியாபாரிகள் நலனும் பேணப்பட வேண்டும். விலைக்கட்டுப்பாட்டின் காரணமாக பொருட்கள் சந்தையிலிருந்து மறைய இடமுண்டு. இதனால் விலேய்யேற்றம் ஏற்படலாம். இது ஏழைகளைப் பாதிக்கும். ஆனால், செல்வந்தர்களோ கூடிய விலையில் கறுப்புச் சந்தையில் பொருட்களைப் பெற்றுக் கொள்வர்.

பொதுவாக விலைக்கட்டுப்பாடுக்கு இஸ்லாத்தில் அனுமதி ஈல்லாவ்விடினும், முழுச் சந்தையும் பாதிப்படையும் வியாபாரிகள் கூடிய அளவில் நியாயமற்ற முறையில் நடக்க முற்பட்டால் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பதுக்கலைத் தடுக்கவும் அநீதியை நிறுத்தவும் அரசு தலையிடும்; விலைக்கட்டுப்பாடும் அனுமதிக்கப்படும். இச்சந்தர்ப்பங்களில் விலைக்கட்டுப்பாட்டை அனுமதிக்கலாம் எனது இமாம் மாலிக் மற்றும் சில ஷாஃபிஈ அறிஞர்களின் கர்ருத்தாகும்.

6. பதுக்கல் - அல் இஹ்திகார்

விலையேற்றம் கருதிப் பண்டங்களைப் பதுக்குவது ஹராமாகும். பேராசையும் பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தீய செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் நாம் அறிந்துள்ளோம். இவற்றைக் கருத்திற்கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பின்வரும் நபிமொழிகள் இதற்கு சான்று பகர்கின்றன.

1. "பதுக்கியவன் பாவி" (முஸ்லிம், அபூதாவூத்)
2. "உணவுப் பொருட்களை 40 நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும்   
     அவானை விட்டும் நீங்கிக் கொள்கிறான்." (அஹ்மத், அல்ஹாகிம்)
3. "பதுக்கல் செய்பவ்வனே மிகக் கெட்ட அடியானாவான். வ்விலை இறக்கத்தைக் கேட்டால் அவன் கவலைப்படுகிறான். 
     வில்யேற்றத்தைக் கேள்வியுற்றால் மகிழ்ச்சியடைகிறான்." (றஸீன்)

அனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவை. பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர்.

அவையாவன: 

1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும்  அவனது பராமரிப்பிலிருப்போரினதும் ஒரு வருடத்தேவையின் அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒரு வருடத்துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.

2. குறித்த பொருளின் மீது மக்களுக்குள்ள அத்தியாவசியத் தேவையைக் கருத்திற் கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில் பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.

3. பதுக்கப்பட்ட பொருளின் மீது மக்களுக்குத் தேவையான வேளையில் பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக, பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து மக்களுக்கு அதன் மீது தேவையில்லாத போது அதனைத் தேக்கி வைப்பதும் சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்டதல்ல. ஏனெனில், இதனால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எத்தகைய பொருளைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ, உற்பத்திகளைய்யோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான் ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப்பொருட்களில் மாத்திரமே பதுக்கள் ஹராமானதாகக் கொள்ளப்படும். மற்றும் பல அறிஞர்கள் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) அனைத்துப் பண்டங்களிலும் பதுக்கள் ஹராமானதாகும் எனக் கூறுகின்றனர்.

7. வட்டி - (அர் ரிBபா)

வட்டி சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது ஹராமானதாகும். அல்குர் ஆன் வட்டி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

"விசுவாசிகளே! நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியதுபோக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டுவிடுங்கள்"

"இவ்வாறு நீங்கள் நடந்துகொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும்யுத்தம் செய்யச் சித்தமாகிவிடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியமைக்காக மனம் வருந்தி ) மீண்டிவிட்டால் உங்கள் செல்வத்தின் அடிப்படைத் தொகை உங்களுக்குரியது.  நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்கள் அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (2: 278, 279)

"ஓர் ஊரில் வட்டியும் விபச்சாரமும் பரவிவிட்டால் அவ்வ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தங்கள் மீது இறக்கிக் கொண்டோராவர்"  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம்)
"அல்லாஹ் வட்டி உண்பவனையும், அதனை உண்ணக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சியாக இருப்போரையும், அதனை எழுதுபவனையும் சபித்துள்ளான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத், திர்மிதி)

இஸ்லாத்தில் மட்டுமன்றி முன்னைய வேதங்களான யூத, கிறிஸ்தவ வேதங்களிலும் தடை செய்யப்பட்டே இருந்தது.

அதேவேளை, வட்டியின் வகைகளை நோக்கும்போது அதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. ரிbபா - அந் நஸீஆ
2. ரிbபா - அல் பழ்ல்

   ரிbபா - அந்நஸீஆ 
ரிbபா - அந்நஸீஆ என்பது கடன் கொடுத்தவர் கடன் பெற்றவ்ரிடமிருந்து கால தாமதத்திற்கான பிரதியீடாக பெறக்கூடிய தீர்மானிக்கப்பட்ட மேலதிகத் தொகையைக் குறிக்கும்.

   ரிbபா - அல் பழ்ல்
ரிbபா - அல் பழ்ல் என்பது குறைந்த பணத்தைக் கூடிய பணத்திற்கும் குறைந்த உணவைக் கூடிய உணவிற்கும் கைமாற்றிக் கொள்வதைக் குறிக்கும்.

முதலாவது வகையைப் போன்றே இரண்டாவது வகை வட்டியும் ஹராமாகும். இதுவும் உண்மையான வட்டிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் விலக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். "ஒரு தங்க நாணயத்தை இரண்டு தங்க நாணயத்திற்கும், ஒரு வெள்ளி நாணயத்தை இரண்டு வெள்ளி நாணயத்திற்கும் விற்காதீர்கள். ஏனெனில், நான் வட்டியையிட்டும் அஞ்சுகிறேன்." (முவத்தா மலிக்)

ஆறு பொருட்களிலிருந்து இவ்வகை வட்டியைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளதை ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது. தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தப்பழம், உப்பு என்பனவே அந்த ஆறு பொருட்களுமாகும்.

"தங்கத்திற்குத் தங்கமும், வெள்ளிக்கு வெள்ளியும், உப்புக்கு உப்புமாக சம அளவில் உடனுக்குடன் கைமாறிக் கொள்ள வேண்டும். மாறாக அளவைக் கூட்டினால் அல்லது அளவைக் கூட்டுமாறு கூறினால் பெற்றவர், கொடுத்தவர் ஆகிய இருவரும் வட்டியில் ஈடுபட்டோராவர்." (புஹாரி)

ஹதீஸ்களில் குறிப்பாக இந்த ஆறு பொருட்கள் மாத்திரம் கூறப்பட்டுள்ளமைக்குக் காரணம் யாதெனில், இவை மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக அமைந்துள்ளமையே ஆகும். தங்கமும் வெள்ளியும் கொடுக்கல் வாங்கல் ஊடகமாகவும் விலைகளுக்கான அளவுகோல்களாகவும் காணப்படுகின்றன. ஏனைய நான்கும் பிரதான உணவுப் பொருட்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் வட்டி இடம்பெறுவதானது மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமையும். எனவே, மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே குறிப்பாக இவற்றை மேலதிகமாகப் பெறுவது விலக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி அடங்காத விலையைத் தீர்மானிக்கக் கூடியவையும் இதில் அடங்கும். (Eg:- பணம்)

எனவே தங்கம், வெள்ளி போன்றவற்றையோ அல்லது கோதுமை போன்றவற்றையோ அவற்றின் இனத்தைச் சேர்ந்தவற்றுடன் மாற்றும் போது 2 நிபந்தனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

1. இரண்டும் சம அளவாக இருத்தல்: 
இங்கு ரகத்தையோ தரத்தையோ கவனத்திற் கொள்ளக் கூடாது. 1Kg சம்பா அரிசியை 1 1/2Kg நாட்டு அரிசிக்கு மாற்றிக் கொள்வது கூடாது. அது வட்டியாக அமையும். இதே நடவடிக்கையை ஹலாலாக அமைத்துக் கொள்ள வேண்டுமாயின் முதலில் நாட்டரிசியின் சொந்தக்காரர் அதனை சம்பா அரிசியின் சொந்தக்காரரிடம் பணத்திற்கு விற்க வேண்டும். பின்னர், அப்பணத்தைக் கொடுத்து சம்பா அரிசியை வாங்க வேண்டும். இங்கு விலை வித்தியாசமாக அமைவது பாதிப்பை ஏற்படுத்தாது.

2. பண்டமாற்றத்தின் போது ஒன்றைக் கொடுத்து மற்றையதை தாமதப்படுத்திக் கொடுக்கக் கூடாது. மாறாக உடனுக்குடன் கைமாற்றிக் கொள்ள வேண்டும்.

இரு பண்டங்களும் இனத்தில் வேறுபட்டு நோக்கத்தில் ஒத்திருந்தால், அளவு வித்தியாசம் ஹராமாகாது. ஆனால், இங்கும் கால தாமதம் கூடாது. தங்கத்திற்கு வெள்ளியை மாற்றும் போது தவணையிடாது உடனுக்குடன் கைமாற்றிக் கொள்வது நிபந்தனையாகும்.  ஆனால், அளவில் வித்தியாசம் இருப்பது தவறல்ல. இங்கு குறைந்த தங்கத்துக்குக் கூடிய வெள்ளியைப் பெறலாம். இவ்வாறே கோதுமையையும் மாற்றிக் கொள்ளலாம்.

கைமாறும் இரு பண்டங்களும் இனம், நோக்கம் இரண்டிலும் வேறுபட்டால் குறித்த இரு நிபந்தனைகளும் அவசியமற்றதாகும் 

மேலும், தங்கம், வெள்ளி, பிரதான உணவுப் பொருட்கள் போன்றவை தவிர்ந்தவற்றில், அளவு வித்தியாசமோ கால தாமதமோ பிழையானதல்ல. Eg:- ஓர் ஆட்டை 2 ஆடுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

8. அல் ஈனா

இது ஒரு ஹராமான வியாபார அமைப்பைக் குறிக்கும். இது வியாபாரமாகத் தோன்றினாலும் அடிப்படையில் வட்டியாகவே காணப்படுகிறது. பணம் தேவைப்படும் ஒருவர் ஒரு பண்டத்தைத் தவணையிட்டு குறிப்பிட்ட விலையில் வாங்குவார். பின்னர் அப்பண்டத்தை எவரிடம் இருந்து வாங்கினாரோ அவருக்கே குறைந்த விலையில் கைக்காசுக்கு விற்றுப் பணத்தை பெற்றுக் கொள்வார். பின் குறித்த தவணையில் குறித்த விலையைச் செலுத்துவார். இவ்வியாபார அமைப்பை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் வேறு சில அறிஞர்களும் அனுமதித்துள்ளனர். ஆனால், ஏனைய மத்ஹப்கள் இதை ஹராமானதாகக் கொள்கின்றன.
உங்கள் ஆயுள் அதிகமாகும் ரிஸ்க் விசாலமாகவும் வேண்டுமா 
இந்த ஒன்றை செய்யுங்கள்
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களின் சொற்பொழிவு
நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா ?  
நின்று கொண்டு உண்ணலாமா ? 
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களின் சொற்பொழிவு
மீலாத் மவ்லித் ஏன் கொண்டாடப்படுகிறது
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களின் சொற்பொழிவு
உங்கள் ஆயுள் அதிகமாகும் ரிஸ்க் விசாலமாகவும் வேண்டுமா?
இந்த ஒன்றை செய்யுங்கள்
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களின் சொற்பொழிவு

1442 ஹிஜ்ரி புத்தாண்டு சிந்தனைகள்  

மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களின் சொற்பொழிவு

குலா !  என்ன அர்த்தம்
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு
 ‘தலாக்’ ‘குலா’ வித்தியாசம் என்ன? 
1.தலாக்கில் மூன்று தவணைகளுக்கு பின்னரும் இருவரும் சேரவில்லையானால் அப்பெண் மீண்டும் வேறொரு திருமணம் செய்து, பின்  அதை முறித்து கொண்ட பின்னர் தான் முதலில் தலாக் கூறப்படவரை மணந்து கொள்ள முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
‘குலா’வின் சட்டம் என்ன? அதன் தவணை முறை எத்தனை?  இரெண்டும் ஒன்று தானா?பதில் தரவும்.
தலாக் என்பது ஆண்கள் தங்களுடைய மணைவிமார்களை விட்டு பிரிவது சொல்லப்படும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு விடுவித்தல் என்று பொருளாகும். ‘
குலா என்பது பெண்கள் தங்களுடைய கவனை விட்டு பிரிவது பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும். இதற்கு தமிழில் கழற்றிவிடுதல் என்று பொருளாகும்.
ஒரு பெண் தன்னுடைய கணவனை விட்டு பிரிய நினைத்தால் ஜமாத் தலைவர் முன்னிலையில் சென்று இரண்டு சாட்சிகளுடன் நான் என்னுடைய கணவனை விட்டு பிரிந்து கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும்.
பிரியும் போது கணவன் மனைவிக்கு கொடுத்த மஹர் தொகையை திரும்ப பெண் அளித்திட வேண்டும்.
மனைவி குலா செய்யும் போது கணவனை விட்டு பிரிவதற்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மனைவி நினைக்கும் போது மீண்டும் கணவனுடன் சேர்ந்துகொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.
மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு எந்த திருணமும் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
2.குலா என்றால் என்ன தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன?
 மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு. 
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (தந்து விடுகிறேன்)'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), "தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (5273)

மேற்கண்ட செய்தியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையைஅறியலாம். ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம். 

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில்முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர்தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும்என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்களே அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்னைக் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்பந்திக்கவில்லை. 

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?'' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் "முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?'' என்று (பரீராவிடம்)கேட்டார்கள். அதற்கு பரீரா "அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள்கட்டளையிடுகின்றீர்களா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்'' என்றார்கள். அப்போது பரீரா, "(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை'' என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலி
நூல் : புகாரி (5283)

3.குலஃ உடைய சட்டங்களின் சுருக்கம்

• ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும். 

• அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக்கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும். 

• அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக்கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன்கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும். 

• கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை. 

• கணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருப்பது போல் மனைவி குலாஃ செய்து பிரியும் போது அழைத்துக் கொள்ள முடியாது. 
• தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் குலஃ அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய்க் காலம் வரை மறுமணம் செய்யக் கூடாது. 
அதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்து கொள்ளலாம். தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டார் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல் : நஸயீ (3441)..
வறுமை ஒழிய வளம் பெருகும் 
( Adyar Alim ) மௌலானா சதீதுத்தீன் பாஜில் 
பாகவி அவர்களின் சொற்பொழிவு
குர்ஆன் ஓத தெரியவில்லை என்றால்....அரபி மொழியின் அவசியம்...மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு

தற்காப்பு அவசியமே!!

மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 

அவர்களின் சொற்பொழிவு

இஃதிகாஃப்
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களின் சொற்பொழிவு
இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாஃபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.

இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாஃபுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாஃப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம். அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

1. இஃதிகாஃப் என்றால் என்ன?

பதில்: அரபு மொழியில் இஃதிகாஃப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாஃப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும்.

2. இஃதிகாஃபின் சட்டம் என்ன?

பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:“பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடதீர்கள்.” (அல்பகறா: 187)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்) இப்னுல் முன்திர், இப்னு குதாமா, நவவி(ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பது சுன்னத்தான காரியம் என்பது அறிஞர்களால் ஏகோபித்த முடிவு என்று கூறியிருக்கின்றார்கள்.

3. இஃதிகாப் இருப்பவர் தான் நாடிய போது இஃதிகாஃபை 
துண்டித்து விட்டு வெளியேறலாமா?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது இஃதிகாஃபைத் துண்டித்து விட்டு தான் நாடிய போது வெளியேறிச் செல்லலாம். இஃதிகாஃபைப் பூரணப்படுத்திய பின்பே வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

4. இஃதிகாஃப் இருப்பவர் நோன்பாளியாக இருப்பது அவசியமா?

பதில்: சுன்னத்தான இஃதிகாஃப் (ரமளான் கடைசிப் பத்து நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றத இஃதிகாஃப்) இருப்பவர் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

5. பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது அவசியமா?

பதில்: அல்லாஹுத்தஆலா பள்ளிவாசலைக் கொண்டே இஃதிகாஃபைக் குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: “பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:187)எனவே, இஃதிகாஃப் பள்ளிவாசலில் மாத்திரமே அமைந்திருக்க வேண்டும்.

6. எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்க முடியும்?

பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப் 
பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள் 
எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான். 

இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் “அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் (2:187) வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.

7. இஃதிகாஃபின் குறைந்த காலம் எவ்வளவு?

பதில்: இஃதிகாஃபின் குறைந்த காலம் ஒரு நிமிடமோ, ஒரு 
மணி நேரமோ, ஒரு நாளோ (24 மணி நேரமோ) இருக்கலாம்.

8. இஃதிகாஃப் இருப்பவர் மலம்ஜல தேவைகளுக்காகப் 
பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: மலம்ஜல தேவைகளுக்காக இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

9. ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாஃப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

10. இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃபின் நிலை என்ன?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃப் முறிந்து விடும்.

இறுதி வெற்றி ஈமானுக்கே!! 
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு 

மனித ஆற்றல் அவ்வளவே!!
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு  

விஞ்ஞானம் வெளியே இல்லை!
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு  

கடனை திருப்பி விரைவாக கொடுக்கவும் ?
 கடனை திருப்பி செலுத்த முடியவில்லை ?
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு  
 கடன் சிக்கல்... 
அவிழ்க்க 5 வழிகள்!
கடன்... எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை மட்டும் வாங்கவே கூடாது என்றுதான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால், கடனே இல்லாதவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாகவே இருக்கிறது இந்த காலத்தில். ஆபீஸில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கக் கடன், மனை மற்றும் சொந்த வீடு வாங்கக் கடன், வாகனக் கடன் என இன்றைக்கு கடன் வலையில் சிக்கியவர்கள் பலர்.

கடனை வாங்கும்போது அடுத்த சில மாதங்களில் எப்படியாவது கட்டிவிடலாம் என்று நினைத்துத்தான் வாங்குகிறோம்.

பிற்பாடு அதிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு சிக்கலில் சிக்கித் திண்டாடிப் போகிறோம்.

மோகன், சென்னையில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைக் கணக்காளர். கைநிறைய சம்பாதிக்கிறார். ஆனால், மாதக் கடைசியில் அவரிடம் பைசா மிஞ்சியதில்லை. அவரிடம் இருக்கும் கிரெடிட் கார்டுதான் மாசக் கடைசியில் அவருக்குத் தேவையான பணத்தைத் தந்துவருகிறது.

 எதிர்காலத்தில் நல்ல லாபத்தை சம்பாதித்துத் தரும் என்று ஆசை ஆசையாய் வாங்கிய வீடுதான் அவரைக் கடன் பிடியில் சிக்க வைத்தது.

வீடு வாங்குவதற்குத் தேவையான டவுன் பேமண்ட்டைக்கூட பர்சனல் லோன் வாங்கிதான் கட்டினார் மனிதர். அதோடு விட்டாரா, வீட்டின் இன்டீரியர் டெக்கரேஷன்களுக்குக்கூட கிரெடிட் கார்டை சுரண்டிச் செலவு செய்தார்.

இப்படி வாங்கிய கடன்களில் இருந்து வெளியே வர அவரும் எவ்வளவோ முயற்சிகளைச் செய்துவிட்டார். ஆனால், கடனிலிருந்து அவருக்கு விடுதலைதான் கிடைத்தபாடில்லை.

இவரைப்போல லகரங்களில் சம்பளம் வாங்குபவர்களே சொத்து வாங்கவும், வெளிநாட்டு உல்லாச சுற்றுலா செல்லவும், கார் வாங்கவும் என பல கடன்களை இஎம்ஐ-ல் வாங்கி, அசலையும் வட்டியும் எப்படிக் கட்டி முடிப்பது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

உயர் வருவாய் உள்ளவர்களின் பிரச்னை இப்படியென்றால், குறைவான மாத வருமானம் உள்ளவர்களும் சொந்தத் தொழில் செய்பவர்களும் அடிப்படைத் தேவை களுக்காக சில பல லட்சங்களைக் கடன் வாங்கி, பிற்பாடு அதைக் கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.

எங்கே தொடங்குகிறது கடன்?

நம் வாழ்க்கையில் கடன் என்கிற சமாச்சாரம் எங்கே தொடங்குகிறது என்பதை அறிவது முக்கியமான விஷயம். அத்தியா வசியத்துக்கும், அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதுதான் கடன் என்கிற பிரச்னையின் துவக்கப்புள்ளி என்கிறார்கள் நிதித் துறை நிபுணர்கள்.

உயர் பதவியிலிருக்கும் நீங்கள் அலுவலகம் சென்றுவர ஒரு கார் வாங்குவது அவசியம். இதற்கு ஆரம்ப விலையில் உள்ள ஒரு கார் போதும். ஆனால், உங்கள் வருமான எல்லையைத் தாண்டி சொகுசு கார் வாங்குவது அநாவசியம்.

நம்மூரில் இருக்கும் டாப் கல்வி நிறுவனத்தில் உங்கள் பிள்ளைகள் மேற்படிப்புப் படிப்பதற்காக அவசியம் கடன் வாங்கலாம்.

ஆனால், வாங்கும் கடனை எப்படி திரும்பச் செலுத்தப் போகிறோம், படிக்கிற படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்பதை எல்லாம் யோசித்துப் பார்க்காமல் எக்கசக்கமாக கல்விக் கடன் வாங்கி வெளிநாட்டுக் கல்லூரியில் படிக்க வைப்பது என்பது அநாவசியம்.

இதற்காக, கடன் வாங்குவதே தவறு என்று சொல்ல வரவில்லை. கடன் மூலம் நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு பல மடங்காக பெருகி வளரும் என்கிறபட்சத்தில் வீட்டுக் கடன் வாங்குவது தவறே இல்லை.

இதனால்தான் முதலில் வாங்கும் வீட்டுக் கடனுக்கு அரசாங்கமே வரிச் சலுகை தருகிறது. ஒரு வீடு வாங்கியபின், இரண்டாவது, மூன்றாவது வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்குவது நிச்சயம் தவறு.

பஸ்ஸில் ஏறி ஆபீஸுக்குப் போய் வரமுடிய வில்லை. அலுவலகத்தில் பெட்ரோல் செலவுக்கு பணம் தருகிறார்கள். எனவே, வங்கியில் கடன் வாங்கி, அதை அடுத்த சில வருடங்களில் பெரிய கஷ்டம் ஏதும் இல்லாமல் திரும்பக் கட்ட முடியும் என்கிற நம்பிக்கையும் தெளிவான திட்டமும் இருக்கிறபோது, கார் கடனையும் வாங்குவது தவறே இல்லை.

தெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் அனைத்தும் பிற்பாடு நம் கழுத்தை நெரிக்கத்தான் செய்யும் என்று நமக்கு நன்கு தெரிந்தாலும், கடன்பொறிகளான கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், தண்டல் போன்ற கடன்களில் சிக்கி, திணறத்தான் செய்கிறோம் நாம். இந்தக் கடன் சிக்கலிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகள் என்ன என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

1. இஎம்ஐ-ஆக மாற்றிக்கொள்ளுங்கள்!

கிரெடிட் கார்டு கடன்:

இன்றையத் தேதியில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மிடில் கிளாஸ் மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டித் தவிக்கிறார்கள்.ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு தற்போதெல்லாம் கிரெடிட் கார்டு கடனைத் தேடி வந்துகொடுப்பதால், எல்லோரும் இந்தக் கடனை வாங்கிவிடுகின்றனர்.

தவிர, கிரெடிட் கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதும் இன்றைக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் திடீர் ஆசையை நிறைவேற்ற கிரெடிட் கார்டை தேய்ப்பதுதான் மிடில் கிளாஸ்வாசிகளின் ஒரே வழியாக இருக்கிறது.

ஆனால், இருப்பதிலே அதிக வட்டியுள்ள கடன் என்பது கிரெடிட் கார்டின் மூலம் வாங்கும் கடன்தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் செலுத்தாவிட்டால் ஆண்டுக்கு 36% வரை நீங்கள் வட்டி கட்டவேண்டி இருக்கும். இந்தத் தொகையை வாங்கியவர்கள் குறைந்தபட்ச தொகையை செலுத்திவிட்டு மீதியைச் செலுத்தாமல் போவதினால்தான் பலரும் இந்தப் பொறியில் சிக்குவார்கள்.

மீளும் வழி:

கிரெடிட் கார்டு தரும் கெடு நாட்களுக்குள் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையைக் கண்டிப்பாகச் செலுத்திவிடுவது அவசியம். அப்படிச் செலுத்த முடியாது என உங்களுக்கு நன்கு தெரியும்பட்சத்தில் கிரெடிட் கார்டு கடனை வாங்காமல் தவிர்த்துவிடுவதே புத்திசாலித்தனம்.

ஏதோ ஒரு அவசரத்தில் கிரெடிட் கார்டு மூலம் லட்சக் கணக்கில் கடன் வாங்கிவிட்டு, அந்தக் கடனைத் திரும்ப அடைக்க முடியாமல் தவியாய் தவிக்கிறீர்கள் எனில், கடன் தந்த நிறுவனத்திடம் பேசி, நீங்கள் வாங்கிய கிரெடிட் கார்டு கடன் தொகையை பர்சனல் லோனாக மாற்றிக் கொள்வதே சரி. இதன் மூலம் கடனுக்கு நீங்கள் கட்டும் வட்டியானது கணிசமாகக் குறையும். அதாவது, கிரெடிட் கார்டு கடனுக்கு 36% வட்டி எனில், பர்சனல் லோனுக்கு 16% முதல் 20% வரை வட்டி விதிப்பார்கள். வட்டிச் சுமை குறைவதுடன், திரும்பச் செலுத்தவேண்டிய தொகையை மாதத் தவணையாகவும்(இஎம்ஐ) கட்டலாம். சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் முன்கூட்டியே முழுத் தவணையையும் கட்டி, கணக்கு முடிக்க நினைக்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை (அபராதமாக) வசூலிக்கின்றன. அந்த மாதிரி கண்டிஷன் ஏதும் உண்டா என்பதைத் தெரிந்து கொண்டு மாதத் தவணையாக மாற்றுவது நல்லது.

2. கடனை முன்கூட்டியே கட்டி முடியுங்கள்!

தனிநபர் கடன்:

ஜாமீன், அடமானம் எதுவும் இல்லாமல் இருப்பதால் நம்மவர்கள் கல்யாணம் தொடங்கி காதுகுத்து வரை எதற்கெடுத்தாலும் தனிநபர் கடன் வாங்கிக் குவிக்கிறார்கள். பொதுவாக, தனிநபர் கடன் பெறுபவர்கள் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், ‘எதிர்பார்க்கும் ஒரு தொகை வந்துவிடும். அந்தப் பணத்தைக் கட்டி, பர்சனல் லோனில் இருந்து வெளியே வந்துவிடலாம்’ என்கிற நம்பிக்கையில் கடன் வாங்குகிறார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் அசல்கூட கட்ட முடியாமல் போகும்போது, வட்டி குட்டி போட்டு ‘நாணயம் தவறிய கடன்தாரர்’ என நம் போட்டோ போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது.

திருப்பூரைச் சேர்ந்த ரமேஷ், சொந்தத் தொழில் செய்துவரும் ஒரு சிறு தொழில்முனைவர். புதிய ஆர்டர்கள் விரைவில் வரும் என்கிற நம்பிக்கையில் தனிநபர் கடன் வாங்கினார். ஆனால், எதிர்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை. சில மாதம் கழித்துத்தான் அந்த ஆர்டர் வரவே வராது என்று தெரிந்தது. அப்படி, இப்படி என்று வந்த பணத்தை எடுத்து பர்சனல் லோனைக் கட்டி கடனை முடித்து விடலாம் என்று வங்கியை அணுகியபோதுதான் ப்ரீ-குளோஸர் பெனால்டியையும் சேர்த்து அவர் கட்டவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டார்.

இந்தக் கடனை வாங்கும்போது நமக்கு சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும்பட்சத்தில், குறைவான வட்டியில் கடன் கிடைக்கும். ஆனால், புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டியே சாத்தியமுள்ளது. இந்தக் கடன்கள் பெரும்பாலும் குறைவான காலத்தில் திரும்பக் கட்டும் விதமாக வழங்கப்படுகிறது.

நிலையான வட்டி (ஃபிக்ஸட் ரேட்) விகிதத்தில்தான் தனிநபர் கடன் வழங்குகிறார்கள். ஆர்பிஐ விதிகளின்படி, மாறுபடும் (ஃப்ளோட்டிங் ரேட் இன்ட்ரெஸ்ட்) விகிதங்களுக்கு மட்டுமே இந்த அபராதம் வசூலிக்கப்படுவதில்லை.

சில வங்கிகள் 12 - 18 மாதங்களுக்குப் பிறகு ப்ரீ-குளோசர் அபராதம் வசூலிப்பதில்லை. ஆக, தேவை இல்லாமல் கடன் வாங்கி பணத்தை பொருட்களிலோ வங்கியிலோ முடக்க வேண்டாம். இப்போதெல்லாம் முன்கூட்டியே அனுமதி (ப்ரீ அப்ரூவல்) பெற்றால் 1-2 நாட்களிலே கடன் கிடைத்துவிடும்.

மீளும் வழி:

ஒருவர் ரூ.3 லட்சம் கடனை 36 மாதத் தவணையில் 18 சதவிகித வட்டியில் வாங்கியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஓராண்டு கட்டி முடித்தபின்னர், போனஸோ அல்லது வேறு வகையிலோ பணம் வரும்பட்சத்தில், யோசிக்காமல் கடன் தொகையை கட்டிவிட வேண்டும்.

முன்கூட்டியே கடனை முடிக்க பெரும்பாலும் 4% அபராத வட்டி விதிக்கப்படுகிறது. ரூ.3 லட்சத்தில் ஓராண்டு தவணை கட்டியது போக உள்ள ரூ.2.09 லட்சத்துக்கு முன்கூட்டியே செலுத்தும் தொகை ரூ.8,386. அபராத வட்டி 4% போனால் போய்த் தொலைகிறது என்று கணக்கு பார்க்காமல் கட்டிக் கடனை அடைப்பதன் மூலம் நீங்கள் 62,100 ரூபாய் வட்டியை மீதப்படுத்தலாம். கையில் பணம் இருந்தால், கடனைக் கட்டி முடிப்பது சேமிப்புக்கு ஈடான ஒன்று என்பதை மறக்கக் கூடாது.  

3. மைக்ரோ நிதி நிறுவனங்களை அணுகலாம்!

தண்டல் கடன்:

காய்கறி மார்க்கெட் போன்ற அன்றாடம் வியாபாரம் நடக்கும் இடங்களில் தண்டல் கடனை மிகச் சாதாரணமாக காணமுடியும். காலையில் 100 ரூபாய் கொடுத்தால் மாலையில் 110 ரூபாய் திரும்பச் செலுத்தவேண்டும். சில இடங்களில் வார இறுதியிலோ அல்லது மாத இறுதியிலோ கடனை வட்டியோடு திரும்பச் செலுத்தலாம்.

இந்த வட்டி ராக்கெட் வேக வட்டி என்பதால், தொகை பெரிதாக இருந்து அதை சில நாட்களுக்குள் திரும்பத் தரவில்லை எனில், கதை கந்தலாகிவிடும். இந்தக் கடனை வாங்கும் வரை சாதாரணமாகத்தான் தெரியும். வாங்கியபின் வட்டி கட்டவில்லை எனில் தொடை நடுங்க ஆரம்பித்துவிடும்.

மதுரையில் காய்கறி வியாபாரம் செய்துவரும் மாரிசாமி, ஏதோ ஒரு அவசரத்தில் தண்டல் கடன் வாங்கி, பிற்பாடு அதைத் திரும்பக் கட்டமுடியாமல் ஆளையே தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

நல்லவேளையாக, அவருக்குத் தெரிந்த சிலர் கொஞ்சம் வசதியாக இருக்க, முழுப் பணத்தையும் கட்டி அவரைக் காப்பாற்றினார்கள். ஆபத்து நிறைந்த இந்தக் கடனை வாங்கும்முன் ஒன்றுக்கு நூறு முறை யோசிக்க வேண்டும். இந்தக் கடனை வாங்காமல் இருப்பதே சாலச் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.

மீளும் வழி:

தற்போது பல்வேறு மைக்ரோ நிதி நிறுவனங்கள் குறைவான வட்டி விகிதத்தில் சிறு வியாபாரிகளுக்கு கடன் தந்து வருகின்றன. சுயதொழில் செய்பவர்கள் மைக்ரோ நிதி நிறுவனங்களை அணுகினால் தண்டல் போன்ற கொடூர வட்டிகளில் இருந்து தப்ப முடியும். இல்லையெனில் உழைக்கும் பணம் முழுவதும் வட்டிக்கே கட்டிவிட்டு வெறும் கையுடன் வீடு திரும்பவேண்டியிருக்கும்.

மைக்ரோ நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் ஆண்டுக்கு 26 சதவிகிதம் என்கிற அளவில் வட்டி விதிக்கின்றன. மேலும், கடன் பணத்தை வசூல் செய்யும் முறையும் ஏற்புடையதாகத்தான் இருக்கிறது. தற்போது சில சிறிய வங்கிகள் இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக கட்டவேண்டும் என்கிற நிபந்தனையுடன் கடன் தந்து வருகின்றன.

இதில் அதிகபட்சமாக ரூ.35,000 வரை கடன் வாங்கிக்கொள்ளலாம். மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் என அவரவர் வசதிக்கேற்ப திரும்பச் செலுத்தவும் வாய்ப்பளிக்கிறது. இன்னும் கூடுதலாக கடன் பெற்றவருக்குக் காப்பீடும் அந்த சிறு வங்கிகளே ஏற்படுத்தித் தருவதால், கடனாளியின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.

4. முதலீட்டு பத்திரங்கள் அடமானம்!

கார் கடன்:

நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கத்து மனிதர்கள் எளிதில் சிக்கும் இன்னொரு கடன்தான் கார் கடன். திருச்சியைச் சேர்ந்த முருகன், ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். ‘கார் கடன் தர நாங்க ரெடி’ என வந்த விளம்பரத்தைப் பார்த்து, ஊர்க்காரர்களை அசத்த ரூ.5 லட்சம் (12% வட்டி) கடன் வாங்கி, காரை வாங்கினார். ஆனால், அவர் கார் வாங்கிய சமயம் அவர் வேலை பறிபோனது. அலுவலகத்தில் தரும் பெட்ரோல் செலவு கிடைக்காமல் போகவே, காரை வீட்டு வாசலில் சில வாரங்கள் நிறுத்தி வைத்தார். இப்படியே போனால் வட்டியும் நஷ்டம், காரின் மதிப்பும் குறையும் என்று நினைத்து, வேறு ஒரு இடத்தில் கடன் வாங்கி, கார் கடனை அடைத்தார்.

மீளும் வழி:

இதுமாதிரியான கடன்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி, நம்மிடம் இருக்கும் சொத்து அல்லது முதலீட்டுப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் தொகையைக் கட்டி முடிப்பது நல்லது. குறிப்பாக, உங்கள் நிதி சார்ந்த முதலீடுகளான ஷேர்கள் மற்றும் பாண்டுகளை விற்பது, ஆயுள் காப்பீடு பாலிசி அடமானம் மூலம் கடன் பெறுவது அல்லது முதிர்வுக்குக் காத்திராமல் உங்கள் வைப்புத் தொகையைத் திரும்ப பெறுவதன் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டலாம்.

மேற்படி வாய்ப்புகள் எதுவும் இல்லையெனில் உங்கள் வங்கியை அணுகி, உங்கள் முந்தைய நிதிப் பரிமாற்றங்களின் அடிப்படையில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்குமா என்று கேட்டுப் பாருங்கள். இதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகுவது நல்லது. கேட்ட உடனே கடன் தொகையைத் தந்துவிட மாட்டார்கள் என்பதால் பொறுமை காப்பது அவசியம். இதனால் வட்டிச் செலவு குறையாது என்றாலும், ஓடாத கார் மூலம் உண்டாகும் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

5. தேவையான கடனையே பெறுங்கள்!

நெல்லையைச் சேர்ந்த நரசிம்மனுக்கு மொட்டை மாடியில் வீடு கட்ட ரூ.5 லட்சம் தேவைப்பட்டது. பர்சனல் லோன் மூலம் எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்றில் வாங்கினார். வாங்கியபிறகுதான் தெரிந்தது, அதற்கான வட்டி மிக மிக அதிகம் என்று. அதே கடனை அவர் ஒரு பொதுத் துறையில் வாங்கி இருந்தால், வெறும் 10 சதவிகிதத்திலேயே வாங்கி இருக்கலாம் என்று தெரிந்துகொண்ட போதுதான் அவர் செய்த தவறு அவருக்கே தெரிந்தது.

ஆக, எந்தக் காரணத்துக்காக நீங்கள் கடனை வாங்கப் போவதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த வகை கடன் தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு அந்தக் கடனையே வாங்குவது அவசியம். காரணம், கடன் வகைக்கேற்ப வட்டி விகிதமும் மாறுபடும்.

மொத்தத்தில், கடன் வாங்க முடிவு செய்து விட்டால், எதற்காக வாங்குகிறோம், வட்டி எத்தனை சதவிகிதம், எவ்வளவு காலத்துக்குள் திரும்பக் கட்ட முடியும் என்பதையெல்லாம் யோசித்து வாங்கினால், கடன் சிக்கலில் நாம் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

எவ்வளவு வட்டி கட்டுகிறோம்?

எந்தக் கடனாக இருந்தாலும் எவ்வளவு வட்டி கட்டுகிறோம் என்பதை பலரும் துல்லியமாக கணக்குப் போட்டுப் பார்ப்பதே இல்லை. கணக்குப் பார்க்காமல் வட்டி கட்டுகிறவர்களுக்கு இதோ ஒரு கணக்கு...

இது ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு (ஓராண்டில் திரும்ப செலுத்தும்பட்சத்தில்) கட்டவேண்டிய முதல் மாத வட்டி. ஒருவர் எத்தனை லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கி இருக்கிறாரோ, அந்த அளவுக்கு தொகையை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

தொகுப்பு: வரவனை செந்தில்

நீங்கள் வாங்கும் கடனில் எதற்கு முன்னுரிமை?

இப்படி ஒரு கேள்வியை நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டோம். இந்த கேள்விக்கு வாசகர்கள் அளித்த பதில் இதோ:

வாசகர்கள் அளித்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, பலரும் வீட்டுக் கடன் வாங்கி, சொந்தமாக வீடு வாங்கவே விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

 வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க, திடீர் செலவுகளை சமாளிக்க என அவசரத் தேவைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் அளிக்கப்படும் பர்சனல் லோன் வாங்கவும் பலரும் விரும்பவே செய்கின்றனர்.

ஆனால், பர்சனல் லோன் அளவுக்கு கிரெடிட் கார்டு கடன் வாங்க நினைப்பவர்களின் சதவிகிதமும் இருப்பது கவலைக்குரியதே. காரணம், பர்சனல் லோனுக்கு பொதுத் துறை வங்கிகளில் 16 - 18% வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால், கிரெடிட் கார்டு கடனுக்கு 36% வட்டி கட்டவேண்டும். இவ்வளவு வட்டி என்பதை தெரிந்துகொண்டுதான் இந்தக் கடனை வாங்குகிறார்களா என்கிற கேள்வி எழுகிறது.

கார் கடன் பெற நினைப்பவர்களின் விகிதம் மிகக் குறைவாக இருப்பது இயற்கையான விஷயமே. ஆன்லைன் மூலம் இயங்கும் டேக்ஸி வசதிகள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கத் தொடங்கியபின்பு, சொந்தமாக கார் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே குறைந்து வருவதையே இது காட்டுகிறது.

இஸ்லாம் வழங்கிய சமூகநீதி

மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 

அவர்களின் சொற்பொழிவு  

இறைநேசர்கள்
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு  

பிறர் நலம் பேணல்
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு

ரமலானும் குர்ஆனும் 
மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 
அவர்களின் சொற்பொழிவு
இஸ்லாமிய ஷரியா பேணச் 
சொல்லும் திருமணம் வழிமுறை 
மாற்றும் குடும்ப உறவுகள் சீர்பெறபேணவேடியது
 (Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்

குடும்ப உறவு சீர்பெற - மணப்பெண் தேர்வு
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்.
குடும்ப உறவு சீர்பெற இஸ்லாமிய திருமணம் எப்படி
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்
குடும்ப உறவு சீர்பெற நல்ல கணவருக்கான அடையாளங்கள்
 (Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன்
குடும்ப உறவு சீர்பெற மஹர் VS வரதட்சணை
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்
குடும்ப உறவு சீர்பெற மாப்பிள்ளை தேர்வு
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்.
குடும்ப உறவு சீர்பெற மாப்பிள்ளை பெண் விசாரணை
 (Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்.
  
காதலும் சினிமாவும் இன்றைய தலைமுறை சீர்கேடுகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும்-
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்
பீர், ஒயின், ஜின், ஓட்கா, விஸ்கி, பிராந்தி மற்றும் 
ரம் மதுபானம் குடிப்பது ஏன் ஹராம் ? 
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்.
இஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும் ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: - மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.
மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: - மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”
மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்: - “போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: -
நபி அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்
பேதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்: -நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்
வெ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்: -
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா
‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்) மது அருந்தியவனுக்கு நபி அவர்கள் கொடுத்த தண்டனை: -
நபி அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)
மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான் மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகி விட்டது என்று நபி அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்  அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின்.நிலைபாடு என்ன?
போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம்  அவர்கள் கூறியுள்ளார்கள்.அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் "அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது ஹராம் ஆகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 6124
அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 1788 நஸயீ 5513. 3725.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (3995)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள். முஸ்லிம் (4071)
மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது குறைந்தளவிலான அல்கஹோல் (போதை மூலப்பொருள்)கொண்டுள்ள உற்சாக பானமான “ரெட்புல்”. அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.
குறிப்பு: இந்த பக்கத்தை விரும்பாதவர்கள் விரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

ஒரு துளியேனும் மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்” (5:90)

மதுவைத் தவிர்ந்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருப்பது அது ஹராம் என்பதற்கு பலமான ஆதாரமாகும். மதுவை அடுத்து அல்லாஹ் பலிபீடங்களை கூறியுள்ளான். அவை காஃபிர்களுடைய கடவுள்களான விக்கிரகங்களாகும். (விக்கிரகங்கள் எந்த அளவுக்கு ஹராமோ அதுபோல மதுவும் ஹராமாகும் என்பதை இது காட்டுகிறது) இனி, அல்லாஹ் அது ஹராம் என்று கூறவில்லையே! அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று தானே கூறியுள்ளான் என்று கூறுபவர்களூக்கு எந்த ஆதாரமும் எஞ்சியிருக்கவில்லை.

மது அருந்துபவனுக்கு நபிமொழியிலும் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. ‘போதைப் பொருளை அருந்துபவனுக்கு ‘தீனதுல் கபால்’ எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! ‘தீனதுல் கபால்’ என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டதும் அல்லாஹ்வின் தூதரவர்கள், ‘நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

‘மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒருவன் மரணமடைந்து விட்டால் அவன் விக்கிரக ஆராதனை செய்தவன் போலவே அல்லாஹ்வை சந்திப்பான்’ என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி.

நம்முடைய இக்காலத்தில் மதுவும், போதைப் பொருள்களும் பல்வேறு வகைகளில் காணக் கிடைக்கின்றன. அரபியிலும் வேறு மொழிகளிலும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுவை-கள் என்றும், சாராயம் என்றும், விஸ்கி, பீர், பிராந்தி, ஒயின், ரம், ஆல்கஹால், வோட்கா (Vodka), அரக் (Arrack), ஷாம்பேன் (Chanpagne) என்றெல்லாம் கூறிக் கொள்கின்றனர்.

‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ (நபிமொழி. அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), நூல்: இப்னுமாஜா) என்று யாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அத்தகையவர்கள் இச்சமுதாயத்தில் தோன்றி விட்டனர். இவர்கள் மது என்ற பெயரை மூடி மறைத்து விட்டு அதற்குப் பகரமாக ‘உற்சாகமூட்டும் பானங்கள்’ எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள் அல்லாஹ்வையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை. அவர்கள் அதை உணர்வதில்லை” (2:9).

இவ்விஷயத்துக்கு முடிவு கட்டக்கூடிய, விளையாட்டுத்தனமான இத்தகைய குழப்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கக்கூடிய மாபெரும் சட்டத்தை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. அது பின்வரும் நபிமொழியில் இவ்வாறு உள்ளது: ‘போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும். போதை தரக்கூடிய அனைத்தும் ஹராமாகும்’ அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்.

புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் – அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் – ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.

மதுவுக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் எத்தனை வகைகள் இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான். எல்லாம் மது தான். எல்ல
ாவற்றுக்கும் (ஹராம் எனும்) ஒரே சட்டம் தான்.

இறுதியாக மது அருந்துபவர்களுக்கு இதோ நபி (ஸல்) அவர்கள் செய்த ஓர் அறிவுரை.

‘எவன் மது அருந்தி அதனால் அவனுக்குப் போதை ஏற்பட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறே அவன் மரணமடைந்து விட்டால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனது நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திரும்பவும் அவன் மது அருந்தி போதை ஏற்பட்டால் மறுமை நாளில் அவனுக்கு ‘ரத்கதுல் கபால்’ என்ற பானத்தைப் புகட்டுவது அல்லாஹ்வின் மீது கடமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ‘ரத்கதுல் கபால்’ என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளின் சீழ்’ என பதிலளித்தார்கள்’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னு மாஜா.

மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலையே இதுவானால் அதைவிடக் கடுமையான போதையுடைய பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலை, அதற்கு அடிமையானவர்களின் நிலை எதுவோ?

மதுவை பற்றி இஸ்லாம்,அறிவியல் என்ன சொல்லுகிறது”

இயற்கை அன்னையால் படைக்கப்பட்ட மனிதன் பிறந்து வளர்ந்து தீய பழக்கங்களைக் கையாண்டு அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் உள்ள மனிதனாகவும் படைத்துள்ளது.புலன்களின் ஈடுபாட்டால் தன்னை இழந்து நோயின் பிடிக்கு ஆளாகி தவிக்கின்றான். இந்த புலன்களை அடக்கியாண்டால்தான் அவன் மனிதனாக முடியும். இந்த புலன்கள் அனைத்தையும் உடைந்த காட்டாற்று வெள்ளம் போல் ஓடச் செய்வதற்கு முழுமுதற் காரணமாக அமைவது மதுப்பழக்கம்தான்.

மனிதனின் உடல், மனம், உள்ளம் இவற்றை பாதிக்கச் செய்து அவனது வாழ்க்கையையும், அவனது குடும்பத்தினர் வாழ்க்கையையும், சீரழித்து சின்னாபின்னமாக்கக் கூடிய தீய பழக்கம் தான் குடிப்பழக்கம்.சண்டை சச்சரவுகள், களவு, கொலை, கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும், குற்றங்களும் மது எனும் அரக்கனின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.மகாயுத்தம், பஞ்சம், இயற்கை பேரழிவு, கொள்ளை நோய் ஆகிய இம்மூன்றும் சேர்த்து அழித்ததை விட மதுபானம் அதிகமான மக்களை கொள்ளை கொண்டுள்ளது.

பழங்காலத்தில் மன்னர்கள் சோமபானம் என பழச்சாறுகள் கொண்டு தயாரித்து விருந்து உபசரிப்புகளில் பயன்படுத்தி வந்தனர். தீய குணங்கள் அனைத்திற்கும் மதுப்பழக்கம் தான் வழிகாட்டி என்று எடுத்துரைப்பதுடன் மதுபானம் அருந்தக்கூடாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஓட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் (நொதி) பழத்திலும், தானியங்களிலுள்ள மாவையும், சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

அதுபோல் தற்போது தயாரிக்கப்படும் மதுவில் மூலக்கூறாக ஈதைல் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது.

மதுக்களில் உள்ள ஈதைல் ஆல்கஹாலின் அளவு

ரம் 50 – 60%

விஸ்கி, பராந்தி, ஜின் 40 – 45%

ஒயின் 10 – 15%

சாராயம் 40 – 50%

பீர் 4 – 8%

இதில் உள்ள ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடு பரவல் மூலம் இரத்தத்தில் வெகு விரைவில் கலக்கிறது. இதனால் உடனே போதை உண்டாகிறது.இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் தன்னை இழக்க ஆரம்பிக்கிறான். முதலில் தசை கட்டுப்பாடு இழக்கும். தொடு உணர்வு குறையும். சிந்தனை மாறும், வாய் வார்த்தை குளறும். நடையில் தள்ளாட்டம், அதிக மயக்கம், ஞாபகமறதி, குழப்பம் போன்றவை உண்டாகும்.

ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவிகிதம் ரத்தத்தில் நேரடியாக கலக்கிறது. மீதமுள்ள மது முழுவதையும் கல்லீரல் அரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவி பல வகையான மாற்றங்களை உண்டுபண்ணுகிறது.பின்பு உடல் நரம்புகள் பாதிப்படைந்து, பார்வை நரம்புகளும் பாதிக்கப்படும். பித்தம் அதிகம் சுரந்து குடலில் அழற்சி உண்டாகி கல்லீரல் செல்கள் சேதப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் தெரிவதில்லை.பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் இந்த மதுப்பழக்கம் நாள் ஆக ஆக, எந்த நேரமும் அதைப் பற்றிய சிந்தனையையே உண்டாக்கும். தினமும் அருந்தும் எண்ணம் உண்டாகும். அருந்தும் அளவும் அதிகரிக்கும்.

இப்படி அளவுக்கு அதிகமாக மது குடிப்பவர்களின் நரம்புகள் தளர்ச்சியடைந்து, கை, கால்கள் நடுக்கம் உண்டாகும். இந்த நடுக்கத்தைப் போக்க மேலும் மேலும் மது அருந்த ஆரம்பிப்பார்கள். சுயக் கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள்.குடிப்பதற்காக பலவிதமான போலிக் காரணங்களைக் கூறி நியாயப்படுத்துவார்கள். மனைவி, மக்கள் உறவுகளுடன் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியங்களை அள்ளி விடுவார்கள்.காதல் தோல்வி, விரக்தி, குழந்தை இல்லையென பல ஆண்கள் மது அருந்துகிறார்கள். இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமே ஒழிய மாற்றத்தை உண்டு பண்ணாது என்பதை புரிந்து கொள்வதில்லை.பொதுவாக மது அருந்துவது உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். மது குடிப்பது பற்றிய சிந்தனை இருந்து கொண்டேயிருக்கும். உடல் அளவிலும் மனதளவிலும் பதற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தும்.மெல்ல மெல்ல காரணமற்ற பயத்தால் தன் குடும்பம் பற்றிய அவநம்பிக்கையான எண்ணங்கள், தாம்பத்திய உறவில் விரிசல், சந்தேக எண்ணெங்கள் போன்றவை ஏற்படும். இதுபோல் உடலிலும், மனதிலும் பல பாதிப்புகள் உண்டாகும்.

மதுவினால் உண்டாகும் பாதிப்புகள்:

நாம் சாப்பிடுகின்ற எத்தகைய உணவும் சீரமணடைந்த பிறகு குடலில் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பலவகையான மாற்றங்களைப் பெற்று, உடலின் தேவைக்கு ஏற்ப பல பாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள சத்துக்கள், கல்லீரல் சேமித்து வைக்கப்படுகிறது. அதுபோல அருந்தும் மதுவானது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு சென்றடைகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் சத்துக்கள் போல் மதுவும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதாவது கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜினஸ் என்ற நொதியில் அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப்பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிப்படைய வைக்கிறது.மதுவை தொடர்ந்து அதிகமாக அருந்தும்போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் ஆண்களுக்கும், 20 கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்படைகிறது.

மது அதிகமாக அருந்தும்போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமான கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. அதேநேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாக செலவழிக்கப்படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரைப் பாதிப்படைய செய்கிறது.கல்லீரலில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குவதால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிந்துபோகின்றன. ஹையலின் என்ற பொருட்கள் கல்லீரலை இறுக்கி நோயாக மாற்றுகிறது. மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப்படிகிறது.துவக்கத்தில் அறிகுறிகள் ஏதும் தெரியவராது. ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு காமாலை, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண், கை கால் நடுக்கும் உண்டாகும்.

இஸ்லாம் மதுவை பற்றி என்ன Buy cheap Viagra சொல்லுகின்றது பார்ப்போம்

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: –
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத்
தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: –
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.
மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: –
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”
மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்: –
“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: –
நபி அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்

பேதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்: -நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

வெ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்: –
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா

‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மது அருந்தியவனுக்கு நபி அவர்கள் கொடுத்த தண்டனை: –
நபி அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)
மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்: –
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்  அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின்.நிலைபாடு என்ன?

போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம்  அவர்கள் கூறியுள்ளார்கள்.அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் “அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 6124

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 1788 நஸயீ 5513. 3725.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (3995)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் (4071)

மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது குறைந்தளவிலான அல்கஹோல்(போதை மூலப்பொருள்)கொண்டுள்ள உற்சாக பானமான “ரெட்புல்”. அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

இஸ்லாமியா பொருளீட்டும் 
முறை ஹலால் மற்றும் ஹராம் 
வட்டி , சூதாட்டம் , மது , போதைப்பொருள் KETAMINE மற்றும் ஹராம் வர்த்தகம் முஸ்லிம் செய்ய முடியும், குர்ஆன் ஹதீஸிலிருந்து
(Adyar Alim) மௌலவி Dr. சதீத்துத்தீன் பாகவி அவர்கள்.
வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவைகள்

அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன. 

ஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, "வியாபாரிகளே" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து  "வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்" என்றார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

நபியவர்கள் வியாபாரிகளாக இருந்த எம்மிடம் வந்து "வியாபாரிகளே! பொய்யையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என "தபரானி"யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.

வியாபாரத்தின்போது தவிர்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள்

1. அளவை நிறுவையில் மோசடி செய்தல்

அளவை நிறுவையில் முறையாக நடந்து கொள்ளவேண்டுமென அல்லாஹ் கீழ் வரும் அல்குர் ஆன் வசனத்தின் மூலம் பணிப்புரை விடுக்கிறான்.  

"நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள்; நிறுத்தால் சரியான எடையைக் கொண்டு நிறுங்கள்......."

அளவை நிறுவையில் மோசடி செய்வதை அல்லாஹ் விலக்கியுள்ளமையைக் கீழ்வரும் அல்குர் ஆன் வசனத்திலிருந்து தெளிவாக விளங்க முடியும். 

அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும்போதும்; நிறுத்துக் கொடுக்கும்போதும் குறைத்துவிடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்த நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன்  (விசாரணைக்காக) நிற்பர். (83: 1 - 6)

விற்றல், வாங்கல் நடவடிக்கைகளில் விட்டுக்கொடுத்து நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக"  என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)

2. அபகரிக்கப்பட்ட, திருடப்பட்ட பொருட்களை வாங்குதல்

ஒருவர் மர்ரொருவரிடம் இருந்து நியாயமற்ற முறையில் பெற்ற ஒரு பொருளை விற்பாராயின் அதனை வாங்குவது ஹராமானதாகும்.

"எவர் திருடப்பட்ட ஒரு பொருளை அது திருடப்பட்ட பொருள்தான் என அறிந்திருதும் வாங்குவாராயின் அவரும் அதன் பாவத்திலும் குற்றத்திலும்  பங்கேற்றவராவார்". (அல் பைஹகீ)

அவ்வாறே மதுபானம் தயாரிப்பதற்காகத் திராட்சையை வாங்குபவருக்கு அதனை விற்பது ஹராமானதாகும். மேலும் குழப்பவதிகளுக்கும் விஷமிகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதும் கூடாது. இவ்வாறு ஒரு ஹலாலான பொருளாயினும் அதனை ஒரு ஹராத்தைச் செய்வதற்குப் பயன்படுத்துவோருக்கு விற்பது விலக்கப்பட்டதாகும்.

3. வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்தல்

அதிகமாக சத்தியம் செய்வது அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைப்பதாக அமைவதுடன் நுகர்வோரை ஏமாற்றுவதற்கான வழியாகவும் அமைய முடியும். இதனாலேயே நபியவர்கள் இதைப் பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தடுத்தார்கள்.

"சத்தியம் செய்வது பண்டத்திற்கு கிராக்கியை ஏற்படுத்தினாலும் 'பரக்கத்'தை அழித்துவிடும்" (புஹாரி) 
"நிச்சயமாக வியாபாரிகளே பாவிகள்" என நபியவர்கள் குறிப்பிட்ட போது "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி இருக்கிறான் அல்லவா" என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். எனினும், அவர்கள் சத்தியம் செய்து பாவம் செய்கின்றார்கள். பேச்சில் பொய் சொல்கிறார்கள்" என்று கூறினார்கள். (அஹ்மத்)

4. பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடல்

பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடுவதைச் சில அறிஞர்கள் அனுமதித்தாலும் அது விரும்பத்தக்கதல்ல என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

"நீங்கள் பள்ளிவாசலில் விற்பவரையோ வாங்குபவரையோ கண்டால், 'அல்லாஹ் உனது வியாபாரத்தை இலாபகரமானதாக் அமைக்காதிருக்கட்டும்' என அவனுக்குக் கூறுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

ஜும்மாவுக்காக அதான் சொல்லப்பட்டதன் பின் வியாபாரம் செய்வது ஹராமாகும். இமாம் அஹ்மத் போன்ற சில அறிஞர்கள், 'அவ்வேளையில் நடைபெற்ற வியாபாரம் செல்லுபடியாகாது' என்று கூறுகின்றனர்.

5. விலைக்கட்டுப்பாடு - அத்தஸ்ஈர்

வாங்குவோர், விற்போர் ஆகிய இரு தரப்பினதும் நலனைக் கருத்திற்கொண்டு பொருட்களுக்கு ஒரு குறித்த விலையை நிரணயிப்பதே நடைமுறையில் விலைக்கட்டுப்பாடு என வழங்கப்படுகிறது. சில நபிமொழிகளில் இச்செயற்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் சில மனிதர்கள் நபியவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! பண்டங்களின் விலை அதிகரித்து விட்டது. எனவே, விலையைக் கட்டுப்படுத்துங்கள்" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள் "விலையை நிர்ணயிப்பவனும் ரிஸ்க்கை சுருக்குபவனும்  விரித்துக் கொடுப்பவனும் வாழ்க்கை வசதிகளை அளிப்பதும் அல்லாஹ்வே. உண்மையாக, உங்களில் எவரும் உயிரிலோ பொர்ருளிலோ இழைக்கப்பட்ட ஓர் அநீதிக்காக என்னிடம் கோராத நிலையில் நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

இந்நபிமொழியை ஆதாரமாக வைத்து அரசு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது கூடாது என்ற கருத்தை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், அது அநீதியாக அமைவதோடு பொருளாதார நடவடிக்கைகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அமையும். நுகர்வோர் நலன் பேணப்பட வேண்டியது போலவே வியாபாரிகள் நலனும் பேணப்பட வேண்டும். விலைக்கட்டுப்பாட்டின் காரணமாக பொருட்கள் சந்தையிலிருந்து மறைய இடமுண்டு. இதனால் விலேய்யேற்றம் ஏற்படலாம். இது ஏழைகளைப் பாதிக்கும். ஆனால், செல்வந்தர்களோ கூடிய விலையில் கறுப்புச் சந்தையில் பொருட்களைப் பெற்றுக் கொள்வர்.

பொதுவாக விலைக்கட்டுப்பாடுக்கு இஸ்லாத்தில் அனுமதி ஈல்லாவ்விடினும், முழுச் சந்தையும் பாதிப்படையும் வியாபாரிகள் கூடிய அளவில் நியாயமற்ற முறையில் நடக்க முற்பட்டால் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பதுக்கலைத் தடுக்கவும் அநீதியை நிறுத்தவும் அரசு தலையிடும்; விலைக்கட்டுப்பாடும் அனுமதிக்கப்படும். இச்சந்தர்ப்பங்களில் விலைக்கட்டுப்பாட்டை அனுமதிக்கலாம் எனது இமாம் மாலிக் மற்றும் சில ஷாஃபிஈ அறிஞர்களின் கர்ருத்தாகும்.

6. பதுக்கல் - அல் இஹ்திகார்

விலையேற்றம் கருதிப் பண்டங்களைப் பதுக்குவது ஹராமாகும். பேராசையும் பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தீய செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் நாம் அறிந்துள்ளோம். இவற்றைக் கருத்திற்கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பின்வரும் நபிமொழிகள் இதற்கு சான்று பகர்கின்றன.

1. "பதுக்கியவன் பாவி" (முஸ்லிம், அபூதாவூத்)
2. "உணவுப் பொருட்களை 40 நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும்   
     அவானை விட்டும் நீங்கிக் கொள்கிறான்." (அஹ்மத், அல்ஹாகிம்)
3. "பதுக்கல் செய்பவ்வனே மிகக் கெட்ட அடியானாவான். வ்விலை இறக்கத்தைக் கேட்டால் அவன் கவலைப்படுகிறான். 
     வில்யேற்றத்தைக் கேள்வியுற்றால் மகிழ்ச்சியடைகிறான்." (றஸீன்)

அனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவை. பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர்.

அவையாவன: 

1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும்  அவனது பராமரிப்பிலிருப்போரினதும் ஒரு வருடத்தேவையின் அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒரு வருடத்துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.

2. குறித்த பொருளின் மீது மக்களுக்குள்ள அத்தியாவசியத் தேவையைக் கருத்திற் கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில் பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.

3. பதுக்கப்பட்ட பொருளின் மீது மக்களுக்குத் தேவையான வேளையில் பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக, பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து மக்களுக்கு அதன் மீது தேவையில்லாத போது அதனைத் தேக்கி வைப்பதும் சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்டதல்ல. ஏனெனில், இதனால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எத்தகைய பொருளைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ, உற்பத்திகளைய்யோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான் ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப்பொருட்களில் மாத்திரமே பதுக்கள் ஹராமானதாகக் கொள்ளப்படும். மற்றும் பல அறிஞர்கள் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) அனைத்துப் பண்டங்களிலும் பதுக்கள் ஹராமானதாகும் எனக் கூறுகின்றனர்.

7. வட்டி - (அர் ரிBபா)

வட்டி சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது ஹராமானதாகும். அல்குர் ஆன் வட்டி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

"விசுவாசிகளே! நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியதுபோக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டுவிடுங்கள்"

"இவ்வாறு நீங்கள் நடந்துகொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும்யுத்தம் செய்யச் சித்தமாகிவிடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியமைக்காக மனம் வருந்தி ) மீண்டிவிட்டால் உங்கள் செல்வத்தின் அடிப்படைத் தொகை உங்களுக்குரியது.  நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்கள் அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (2: 278, 279)

"ஓர் ஊரில் வட்டியும் விபச்சாரமும் பரவிவிட்டால் அவ்வ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தங்கள் மீது இறக்கிக் கொண்டோராவர்"  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம்)
"அல்லாஹ் வட்டி உண்பவனையும், அதனை உண்ணக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சியாக இருப்போரையும், அதனை எழுதுபவனையும் சபித்துள்ளான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத், திர்மிதி)

இஸ்லாத்தில் மட்டுமன்றி முன்னைய வேதங்களான யூத, கிறிஸ்தவ வேதங்களிலும் தடை செய்யப்பட்டே இருந்தது.

அதேவேளை, வட்டியின் வகைகளை நோக்கும்போது அதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. ரிbபா - அந் நஸீஆ
2. ரிbபா - அல் பழ்ல்

   ரிbபா - அந்நஸீஆ 
ரிbபா - அந்நஸீஆ என்பது கடன் கொடுத்தவர் கடன் பெற்றவ்ரிடமிருந்து கால தாமதத்திற்கான பிரதியீடாக பெறக்கூடிய தீர்மானிக்கப்பட்ட மேலதிகத் தொகையைக் குறிக்கும்.

   ரிbபா - அல் பழ்ல்
ரிbபா - அல் பழ்ல் என்பது குறைந்த பணத்தைக் கூடிய பணத்திற்கும் குறைந்த உணவைக் கூடிய உணவிற்கும் கைமாற்றிக் கொள்வதைக் குறிக்கும்.

முதலாவது வகையைப் போன்றே இரண்டாவது வகை வட்டியும் ஹராமாகும். இதுவும் உண்மையான வட்டிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் விலக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். "ஒரு தங்க நாணயத்தை இரண்டு தங்க நாணயத்திற்கும், ஒரு வெள்ளி நாணயத்தை இரண்டு வெள்ளி நாணயத்திற்கும் விற்காதீர்கள். ஏனெனில், நான் வட்டியையிட்டும் அஞ்சுகிறேன்." (முவத்தா மலிக்)

ஆறு பொருட்களிலிருந்து இவ்வகை வட்டியைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளதை ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது. தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தப்பழம், உப்பு என்பனவே அந்த ஆறு பொருட்களுமாகும்.

"தங்கத்திற்குத் தங்கமும், வெள்ளிக்கு வெள்ளியும், உப்புக்கு உப்புமாக சம அளவில் உடனுக்குடன் கைமாறிக் கொள்ள வேண்டும். மாறாக அளவைக் கூட்டினால் அல்லது அளவைக் கூட்டுமாறு கூறினால் பெற்றவர், கொடுத்தவர் ஆகிய இருவரும் வட்டியில் ஈடுபட்டோராவர்." (புஹாரி)

ஹதீஸ்களில் குறிப்பாக இந்த ஆறு பொருட்கள் மாத்திரம் கூறப்பட்டுள்ளமைக்குக் காரணம் யாதெனில், இவை மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக அமைந்துள்ளமையே ஆகும். தங்கமும் வெள்ளியும் கொடுக்கல் வாங்கல் ஊடகமாகவும் விலைகளுக்கான அளவுகோல்களாகவும் காணப்படுகின்றன. ஏனைய நான்கும் பிரதான உணவுப் பொருட்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் வட்டி இடம்பெறுவதானது மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமையும். எனவே, மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே குறிப்பாக இவற்றை மேலதிகமாகப் பெறுவது விலக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி அடங்காத விலையைத் தீர்மானிக்கக் கூடியவையும் இதில் அடங்கும். (Eg:- பணம்)

எனவே தங்கம், வெள்ளி போன்றவற்றையோ அல்லது கோதுமை போன்றவற்றையோ அவற்றின் இனத்தைச் சேர்ந்தவற்றுடன் மாற்றும் போது 2 நிபந்தனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

1. இரண்டும் சம அளவாக இருத்தல்: 
இங்கு ரகத்தையோ தரத்தையோ கவனத்திற் கொள்ளக் கூடாது. 1Kg சம்பா அரிசியை 1 1/2Kg நாட்டு அரிசிக்கு மாற்றிக் கொள்வது கூடாது. அது வட்டியாக அமையும். இதே நடவடிக்கையை ஹலாலாக அமைத்துக் கொள்ள வேண்டுமாயின் முதலில் நாட்டரிசியின் சொந்தக்காரர் அதனை சம்பா அரிசியின் சொந்தக்காரரிடம் பணத்திற்கு விற்க வேண்டும். பின்னர், அப்பணத்தைக் கொடுத்து சம்பா அரிசியை வாங்க வேண்டும். இங்கு விலை வித்தியாசமாக அமைவது பாதிப்பை ஏற்படுத்தாது.

2. பண்டமாற்றத்தின் போது ஒன்றைக் கொடுத்து மற்றையதை தாமதப்படுத்திக் கொடுக்கக் கூடாது. மாறாக உடனுக்குடன் கைமாற்றிக் கொள்ள வேண்டும்.

இரு பண்டங்களும் இனத்தில் வேறுபட்டு நோக்கத்தில் ஒத்திருந்தால், அளவு வித்தியாசம் ஹராமாகாது. ஆனால், இங்கும் கால தாமதம் கூடாது. தங்கத்திற்கு வெள்ளியை மாற்றும் போது தவணையிடாது உடனுக்குடன் கைமாற்றிக் கொள்வது நிபந்தனையாகும்.  ஆனால், அளவில் வித்தியாசம் இருப்பது தவறல்ல. இங்கு குறைந்த தங்கத்துக்குக் கூடிய வெள்ளியைப் பெறலாம். இவ்வாறே கோதுமையையும் மாற்றிக் கொள்ளலாம்.

கைமாறும் இரு பண்டங்களும் இனம், நோக்கம் இரண்டிலும் வேறுபட்டால் குறித்த இரு நிபந்தனைகளும் அவசியமற்றதாகும் 

மேலும், தங்கம், வெள்ளி, பிரதான உணவுப் பொருட்கள் போன்றவை தவிர்ந்தவற்றில், அளவு வித்தியாசமோ கால தாமதமோ பிழையானதல்ல. Eg:- ஓர் ஆட்டை 2 ஆடுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

8. அல் ஈனா

இது ஒரு ஹராமான வியாபார அமைப்பைக் குறிக்கும். இது வியாபாரமாகத் தோன்றினாலும் அடிப்படையில் வட்டியாகவே காணப்படுகிறது. பணம் தேவைப்படும் ஒருவர் ஒரு பண்டத்தைத் தவணையிட்டு குறிப்பிட்ட விலையில் வாங்குவார். பின்னர் அப்பண்டத்தை எவரிடம் இருந்து வாங்கினாரோ அவருக்கே குறைந்த விலையில் கைக்காசுக்கு விற்றுப் பணத்தை பெற்றுக் கொள்வார். பின் குறித்த தவணையில் குறித்த விலையைச் செலுத்துவார். இவ்வியாபார அமைப்பை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் வேறு சில அறிஞர்களும் அனுமதித்துள்ளனர். ஆனால், ஏனைய மத்ஹப்கள் இதை ஹராமானதாகக் கொள்கின்றன.

மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி

மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி 1971 ஆம் ஆண்டு கோவையில் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிறந்தார்.

வேலூரின் தாவூதியா அரபு கல்லூரி, ஈரோடு மற்றும் மதரஸா அல்-பாகியாதஸ் சாலிஹாத் போன்ற பல்வேறு இஸ்லாமிய கல்லூரிகளில் பயின்ற இவர், சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (பி.எச்.டி) முடித்தார்.

பல்லப்பட்டி பிக் மஸ்ஜித் & மெட்ராசாவில் தலைமை-இமாம் மற்றும் முதல்வராக பணியாற்றிய அவர் இப்போது சென்னை ஆதார் குராசானி பீர் மஸ்ஜித்தில் தலைமை-இமமாக பணியாற்றி வருகிறார். மலேசியா, தாய்லாந்து, துபாய், அபுடாபி, ஷார்ஜா மற்றும் குவைத் போன்ற வெளிநாடுகளிலும் விரிவுரைகளை (பயான்) வழங்கியுள்ளார்.

மௌலானா சதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களின்

முழு சொற்ப்பொழிவுகள்  கேட்க கீழே கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

இந்த தமிழ் பயான் அனைவரும் பயனடைய பகிரவும்

Share this Tamil Bayan with everyone.

No comments:

Post a Comment

மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி அவர்களின் சொற்பொழிவுகள்

நற்செயலின் பலன் மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு 40 முதல் 70 வரை  நற்செயலின் பலன் மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு இஸ்லாமும் இ...