வாழ்வில் வெற்றி பெற தினமும் திருகுர்ஆன் முக்கால் ஜூஸ்வு ஓதவும் வாருங்கள்
மர்ஹும் ஷப்பீர் அலி பாகவி ஹழ்ரத் அவர்கள்
ஓர் உள்ளார்ந்த உறவை ஏற்படுத்துவோம்அல் குர்ஆனுடன்
நாம் உலகில் வாழும் காலத்தில் பலரும் பலருடனும் தொடர்புகள் வைத்து வாழ்கின்றோம். ஆனால் முஸ்லிம்களாகிய எமது தொடர்பு மற்றவர்களது தொடர்புகளையும், உறவையும் தாண்டி எம்மைப்படைத்த அள்ளாஹ்வுடன் இருக்கமாக இருக்கவேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
அல்லாஹ்வுடன் இருக்கமான ஒரு தொடர்பை ஏற்படுத்தக்கூடிய பல நல்ல வழிகளுக்கு மத்தியில் புனித அல்குர்ஆன் பிரதான இடத்தில் இருக்கின்றது. இதற்கு தக்கதொரு சான்றாக பின்வரும் நபிமொழியை சொல்லமுடியும்.
"அல்லாஹ்விடமிருந்து வந்த குர்ஆனை விட சிறந்த வேறொன்றின் மூலமும் நீங்கள் அல்லாஹ்வை நெருங்க முடியாது" (அறிவிப்பாளர் : அபூதர் றழியள்ளாஹு அன்ஹ், நூல் : முஸ்தத்ரக் ஹாகிம்)
குர்ஆனின் மூலம் அள்ளாஹ்வை நெருங்க வேண்டுமாயின் முதலில் குர்ஆனுடன் ஓர் உள்ளார்ந்த உறவு எமக்கு இருக்கத்தானே வேண்டும்! எனவே குர்ஆனுடன் எமது உறவைப் பலப்படுத்த ஓரிரு வழிகளை இங்கு அவதானிக்கலாம்.
1. அதிகமாக குர்ஆனை ஓதுதல் :
இதற்கு உதவியாக வழமையாக ஒதிவருவதெற்கென ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயித்துக் கொள்ளமுடியும். அந்த அளவை எச்சந்தர்ப்பத்திலும் தவறவிடமாட்டேன் என திடசங்கற்பம் பூண்டுகொள்ளவும் வேண்டும்.
2. சரியான குர்ஆன் ஒதல் முறைமையை கற்றுக்கொள்ளல் :
கல்விகளில் மிக உயர்ந்த கல்வி குர்ஆனியக்கல்வி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது. ஆனால் இன்று இராகங்களுக்கு உள்ள முக்கியத்துவம் குர்ஆன் ஓதற்சட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை; ஒவ்வொருவரும் சற்று இராகமாக ஒதிவிட்டு அது சரியான ஓதல் என்று மனநிம்மதி வேறு அடைகின்றனர். அதைவிட ஒருபடி மேல் சென்றோமானால் ஓதற்சட்டங்கள் தெறிந்தவர்கள் கூட ஓதற்சட்டங்களுக்குள் அவசியமான "எழுத்துகள் வெளியாகும் இடங்கள், எழுத்துகளின் பண்புகள்" போன்றவற்றை மறந்து ஒதலை அழகு படுத்தக்கூடிய "நீட்டி ஓதுதல், அசைத்து ஓதுதல், மூக்கினால் சத்தத்தை எடுத்தல்" போன்ற சட்டங்களுக்கே அதிக கவனம் கொடுக்கின்றனர்.
3. குர்ஆன் ஓதும்சமயம் அதனால் தாக்கமுறுதல் :
தாக்கமுறவேண்டுமாயின் அதன் கருத்துகளை புரியவேண்டும். எனவே அறபு அறியாதவர்கள் மொழியாக்கங்களை வழமையாக சிறிது சிறிதாக வாசிக்கவேண்டும். அல்குர்ஆனில் அனைவராலும் புரியமுடியுமான செய்திகளும் உள்ளன, சட்டதிட்டங்கள் அறிந்த ஆலிம்களால் புரியமுடியுமான செய்திகளும் உள்ளன.
4. குர்ஆனில் வரக்கூடிய விடயங்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்தல் :
யார் குர்ஆனில் வரக்கூடிய விடயங்களை ஆய்வு செய்ய தகுதி இருந்தும் ஆய்வு செய்யவில்லையோ அவரது உள்ளம் பூட்டு போடப்பட்டுள்ளது என்றே கொள்ளவேண்டும்.
5. மனனமிடலும் மனனமிட்டவற்றை மீள்சோதனை, மீட்டல் செய்தலும் :
குர்ஆனிலிருந்து சில பகுதியளவேனும் உள்ளத்தில் மனனமாக இல்லையெனில் அவ்வுள்ளம் பாலடைந்த வீட்டுக்கு ஒப்பானது என்றொரு நபிமொழி கூறுவதை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.
6. குர்ஆனில் வரக்கூடியவற்றை உரிய சந்தர்ப்பத்தில் அமுல்படுத்தல் :
ஸஹாபிகள் ஓரிரு வசனங்கைக் கற்றபின் அவற்றை அமல் செயததன் பிற்பாடுதான் அடுத்த வசனங்களைக் கற்பார்கள் என்றெல்லாம் வரலாறு சொல்கின்றது. இதன் அடிப்படையில்தான் அல்-பகரா எனும் அத்தியாயத்தை உமர் றழியள்ளாஹு அன்ஹ் அவர்கள் கற்றுமுடிப்பதற்கு 12 வருடங்களும் இப்னு உமர் றழியள்ளாஹு அன்ஹ் அவர்கள் கற்பதற்கு 08 வருடங்கள் சென்றதாகவும் ஹாபிழ் பைஹகி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
7. நோய்கள் நொம்பளங்கள் ஏற்படும் வேளை குர்ஆனை வைத்தே சிகிச்சையை ஆரம்பித்தல் :
அல்-ஃபாதிஹாவில் அனைத்து நோய்களுக்கும் பரிகாரம் உண்டு என்றொரு நபிமொழி சொல்கின்றது.
எனவே நாம் மேற்கண்ட வழிகளிலும் மற்றுமுண்டான நல்ல வழிகளிலும் சென்று அல் குர்ஆனுடன் ஓர் உள்ளார்ந்த தொடர்பை ஏற்படுத்தி அதற்கூடாக அள்ளாஹ்வை நெருங்க வள்ள அள்ளாஹ் அருள்பாலிக்க வேண்டுகின்றேன்.
நாம் சொன்ன கலிமாவை காக்கும் பொறுப்பு!
அல்லாமா ஹஜ்ரத்கிப்லாமுஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
மரணத்தருவாயில் கலிமா வேண்டுமா?
அல்லாமா ஹஜ்ரத்கிப்லாமுஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
அருமை நாயகத்தின் நபித்துவத்தின் சிறப்பு
அல்லாமா ஹஜ்ரத்கிப்லாமுஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
ஒளி கொடுக்கும் பேரொளி பைகம்பர் (ஸல்)
அல்லாமா ஹஜ்ரத்கிப்லாமுஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
இறைநிலையின் உச்சத்தின் மகிமை..அல்லாஹு அக்பர்!!அல்லாமா ஹஜ்ரத்கிப்லாமுஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
திருக்குர்ஆனே திருப்தியான வாழ்க்கைக்கு வழிகாட்டி
அல்லாமா மர்ஹும் ஷப்பீர் அலி பாகவி ஹழ்ரத் அவர்கள்
குறையை மறைத்தால் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும்
Positive thinking பற்றிய அழகிய உரை
அல்லாமா ஹஜ்ரத்கிப்லாமுஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
ஜும்ஆ நாளின் சிறப்புகள் |
அல்லாமா ஹஜ்ரத் கிப்லா முஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமா? |
அல்லாமா ஹஜ்ரத் கிப்லா முஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
நன்றி என்றால் என்ன? |
அல்லாமா ஹஜ்ரத் கிப்லா முஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
நம் வாழ்க்கையின் லட்சியம் |
அல்லாமா ஹஜ்ரத் கிப்லா முஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
தன்னுடைய திருநாமத்தைக் கொண்டு நம்மை
கண்ணியப் படுத்திய அல்லாஹ்
அல்லாமா ஹஜ்ரத் கிப்லா முஹம்மது ஷப்பீர் அலிபாஜில் பாகவி
மலக்குகள் நபி ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்ததின் நோக்கம் என்ன?
அல்லாமா ஹஜ்ரத் கிப்லா முஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி
திருக்குர்ஆனே திருப்தியான வாழ்க்கைக்கு வழிகாட்டி
அல்லாமா மர்ஹும் ஷப்பீர் அலி பாகவி ஹழ்ரத் அவர்கள்
அல்லாமா ஹஜ்ரத் கிப்லா முஹம்மது ஷப்பீர் அலி பாஜில் பாகவி அவர்களின்
முழு சொற்ப்பொழிவுகள் கேட்க கீழே கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இந்த தமிழ் பயான் அனைவரும் பயனடைய பகிரவும்
Share this Tamil Bayan with everyone.

No comments:
Post a Comment