இறைப்பொருத்தம் எங்கே?
Moulana Khaleel Ahamed Keeranoori
மதசார்பின்மையும் மதரஸாக்களும்
Moulana Khaleel Ahamed Keeranoori
வாழ்வின் வழி)
Moulana Khaleel Ahamed Keeranoori
நம் வழி நபி வழி - 1
Moulana Khaleel Ahamed Keeranoori
இஸ்லாம் இலகுவானது
Moulana Khaleel Ahamed Keeranoori
மரணத்தின்
Moulana Khaleel Ahamed Keeranoori
சொல்லும் செயலும்
Moulana Khaleel Ahamed Keeranoori
இறைவனும் மனிதனும்
Moulana Khaleel Ahamed Keeranoori
அல்லாஹ் தான் செய்கிறான்
வாழ்ந்து பாருங்கள்
Moulana Khaleel Ahamed Keeranoori
தர்க்கம்-குதர்க்கம்
Moulana Khaleel Ahamed Keeranoori
அண்ணலார் உருவாக்கிய அருமையான ஸஹாபாக்கள்
Moulana Khaleel Ahamed Keeranoori

DONT CHEAT ANYONE வாழ்வின் வழி Vaazhvin Vazhi
Moulana Khaleel Ahamed Keeranoori
HOW TO TRAIN FAMILY TO PRAY FAJR AND 5 TIME NAMAZ
Moulana Khaleel Ahamed Keeranoori
உங்கள் வாழ்க்கையில் ஒரு மஸ்ஜிதை கட்டி முயற்சிக்கவும்
Try building a mosque your lif
Moulana Khaleel Ahamed Keeranoori
WHICH IS BETTER LIE OR TRUE வாழ்வின் வழி
Moulana Khaleel Ahamed Keeranoori
WHICH IS STRAIGHT PATH வாழ்வின் வழி
Moulana Khaleel Ahamed Keeranoori
WHER TO TAKE ABLUTION TO PRAYER
Moulana Khaleel Ahamed Keeranoori
WHICH IS BETTER LIE OR TRUE
Moulana Khaleel Ahamed Keeranoori
வாழ்வின் வழி Vaazhvin Vazhi
Moulana Khaleel Ahamed Keeranoori

இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்?
இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றை முஸ்லீம்கள் ஆணாயினும் பெண்ணாயினும் எதிர்ப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால் இஸ்லாம் அனுமதிக்க கூடிய ஒன்றாகிய பலதார மணத்தை பெண்கள் குறிப்பாக தமிழக முஸ்லீம் பெண்கள் எதிர்க்கின்றார்கள் என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. மானுடத்தின் எல்லா பிரச்னைகளுக்கும் சரியான தீர்வுகளை சொல்லும் இஸ்லாம் அதனடிப்படையிலேயே பலதார மணத்தை பரிந்துரைக்கின்றது. அப்படியிருக்க இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணத்தையும் அந்த காரணங்களின் பின்னால் உள்ள வாதங்களையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
பலதார மணம் குறித்து குர்ஆன்
திருமறையின் 4 வது அத்தியாயத்தில் இறைவன் பலதார மணத்தை பற்றி குறிப்பிடும் போது மேலும் அநாதைகளின் விஷயத்தில் நீதி செலுத்த முடியாது என நீங்கள் அஞ்சினால் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக மும்மூன்றாக நான்கு நான்காக திருமணம் செய்து கொள்ளுங்கள் நீதம் செலுத்த மாட்டீர்கள் என நீங்கள் அஞ்சுவீர்களாயின் அப்பொழுது ஒருத்தியை மட்டும் (மணந்து கொள்ளுங்கள்) அல்லது உங்களது வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவளை கொண்டு மட்டும் (போதுமாக்கி கொள்ளுங்கள்) நீங்கள் அநீதி இழைக்காதிருப்பதற்கு இதுவே நெருங்கியதாகும் (திருக்குர்ஆன் 4:3) என்று குறிப்பிட்டு காட்டுகிறான்.
இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் வாதங்கள்
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் பலதார மணத்துக்கு இஸ்லாத்தின் அனுமதியை குறித்தே அதிகம் விமர்சிப்பவர்களாக இஸ்லாத்தை பெண்களுக்கு அநீதி இழைக்கும் மதமாக சித்தரிக்க படாத பாடுபடுகின்றனர். ஆனால் உண்மையில் இஸ்லாத்துக்கு முந்தைய ஜாஹிலிய்யா அரபு சமூகத்திலும் உலகில் உள்ள கிரேக்க ரோம, பாரசீக இந்தியா உள்ளிட்ட அனைத்து சமூகத்திலும் வரையறை இன்றி பெண்களை மணமுடிக்க கூடியவர்களாகவும் பெண்களுக்கு எவ்வித உரிமையும் கொடுக்காமல் வெறும் போகப் பொருளாக பாவித்து வந்துள்ளதையும் நாம் வரலாறு நெடுகிலும் பார்க்கலாம்.
உண்மையில் வரைமுறையின்றி எல்லையில்லாமல் திருமணம் செய்து கொண்டிருந்த சமூகத்தில் ஒரு வரையறையை ஏற்படுத்தியது இஸ்லாமேயல்லாமல் உலகில் உள்ள எந்தமதமும் பலதார மணத்துக்கு வரையறையை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களின் இதிகாச கதாநாயகர்கள் 1000க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்தவர்களாக இருப்பதை பார்க்கின்றோம். உண்மையில் இஸ்லாம் பலதார மணம் செய்வதற்கு பல கட்டுபாடுகளை விதித்து அதை ஒரு கடினமான செயலாக செய்திருக்கின்றது என்பது தான் உண்மை. மாறாக அது பலதார மணத்தை ஒரு கட்டாய செயலாக ஆக்கவில்லை.
பலதார மணம் – தர்க்க ரீதியான ஆதாரங்கள்
உலகில் ஆண்களை விட பெண்கள் ஒப்பீட்டளவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடையவர்களாக இருப்பதால் நீண்ட காலம் வாழ கூடியவர்களாக உள்ளனர். பெண்களை சிசுவில் கொலை செய்யும் பழக்கம் இன்றும் உள்ள நம் நாடு போன்ற ஒரு சில நாடுகளை தவிர பிற நாடுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். பண்டைய காலங்களில் போர்களில் ஆண்கள் பங்கெடுப்பதால் அதிகம் உயிரிழக்க கூடியவர்களாக இருந்ததையும் கருத்தில் கொண்டு அனைத்தையும் அறிந்த ஏகனாகிய அல்லாஹ் பலதார மணத்தை அனுமதித்து உள்ளான். பாலியல் உணர்வுகளில் சில போது மனைவியால் கணவனை திருப்தி படுத்த முடியாமல் போகலாம். எனவே கணவன் முறையற்ற உடலுறவை நாடி செல்வதை திசை திருப்பவும் பலதார மணம் அனுமதிக்கப் பட்டிருக்கலாம். அல்லாஹ் அறிந்தவனாக உள்ளான்.
அனுமதியே தவிர கட்டாயமல்ல
நாம் பலதார மணம் குறித்து பேசும் சூரா நிஸாவின் 4வது வசனத்தை ஆழ்ந்து சிந்தித்தால் அவ்வசனத்தில் நீதி செலுத்த முடியும் என்றால் மட்டுமே இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டிருப்பதை பார்க்கலாம். உண்மையில் இது மிக கடினமான ஒன்று. இஸ்லாம் பொதுவாக மனிதர்களுக்கு மத்தியில் நீதி செலுத்தும் படி கட்டளையிடுவதை ஒரு கூட்டத்தினரின் மீதுள்ள வெறுப்பு உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விட வேண்டாம் என்ற திருமறை வசனத்தின் மூலம் விளங்கி கொள்ளலாம். அதிலும் குறிப்பாக உறவுகளுக்கு மத்தியில் நீதி செலுத்தும் படியும் பாரபட்சமின்றியும் இருக்கும் படி சொல்லும் ஏராளமான ஹதீஸ்களை நாம் பார்க்கலாம். உதாரணத்திற்கு குழந்தைகளில் ஒருவருக்கு இனிப்போ அல்லது உடையோ வாங்கி கொடுத்தால் அது போல் பிற குழந்தைகளுக்கும் வாங்கி கொடுக்கும் படி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்.
நீதி செலுத்துதல் எளிதான ஒன்று அல்ல
ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சமின்றி நடப்பதே மிகவும் கடினமாக இருக்கும் போது இரு வேறு குடும்பங்களிலிருந்து வந்த பெண்களிடத்தில் நீதியாக நடப்பது கடினமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதிலும் குறிப்பாக இருவரும் வெவ்வேறு குடும்பம் மற்றும் பொருளாதார பிண்ணணியுடன் வரும் போது அதிலும் பெரும்பாலும் முதல் மனைவி 40 வயதுகளில் இருக்கும் போது இன்னொரு மனைவி 20களில் இருக்கும் போது ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். அதனால் தான் திருமறையில் சூரா நிஸாவின் 129ம் வசனத்தில் ‘நீங்கள் (நீதமாக நடக்க) ஆசை கொண்டாலும் (உங்கள் மனைவியரிடையே) பெண்களிடையே நீங்கள் நீதமாக நடக்க சக்தி பெற மாட்டீர்கள். (ஒரு மனைவியின் பக்கமே) முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள். (அந்தரத்தில்) தொங்க விடப்பட்டவள் போல் அவளை நீங்கள் விட்டு விடாதீர்கள்’ என்று அல்லாஹ் எச்சரிப்பதை காண்கிறோம்.
இரண்டாம் திருமணம் செய்ய தேவையான தகுதிகள்
குர்ஆன் மற்றும் சுன்னாவின் வெளிச்சத்தில் நாம் ஆராய்ந்து பார்த்தால் இரண்டாம் திருமணம் செய்ய விரும்புபவர்கள் குறைந்த பட்சம் கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
1. முதலாவதாக பொருளாதார வசதி இருக்க வேண்டும்
2. அனைவரிடமும் நீதியுடன் நடக்க வேண்டும்.
3. எந்த மனைவியின் பொருட்டு இன்னொரு மனைவிக்கு அநீதி இழைக்க கூடாது
4. பெண்ணின் பாலியல் தேவைகளை நிறைவேற்ற கூடிய உடல் தகுதி.
5. எல்லா மனைவியின் குழந்தைகளையும் சரிசமமாக நடத்த வேண்டும்
இரண்டாம் திருமணம் – பெண்கள் எதிர்ப்பதேன் ?
இஸ்லாம் அனுமதிக்கும் பலதார மணத்தை முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இரண்டாம் திருமணம் செய்ய தேவையான தகுதிகள் இல்லாதவர்களும் வெறும் மோகம் ஆசையினால் இரண்டாம் திருமணம் செய்வதும் இரண்டாம் திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தை மேற்கோள் காட்டுவோர் திருமணத்திற்கு பின் செய்ய வேண்டிய கடமைகளில் இஸ்லாத்தை புறக்கணிப்பதும் இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
பெண்களின் இயல்பும் மனோநிலையும்
உலகில் உள்ள எல்லோரின் மனநிலையும் இயல்பும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை சாதாரண உடை, உணவு விஷயத்திலேயே பார்க்கின்றோம். இன்று தமிழகத்தில் உள்ள முஸ்லீம்கள் எல்லோரும் சில தலைமுறைகளுக்கு முன் வேற்று மார்க்கத்திலிருந்து வந்தவர்களாக தான் இருப்போம். அந்த அடிப்படையில் தமிழ் கலாச்சாரத்தில் பொதுவாக பெண்கள் எதை வேண்டுமானாலும் பங்கிட்டு கொள்வார்களே தவிர கணவனை பங்கிட்டு கொள்ள முன் வர மாட்டார்கள். எப்படி தாய் தன் மகன் திருமணம் முடித்து விட்டால் எங்கே தன்னை நேசித்த மகனின் பாசம் தன்னிடமிருந்து மருமகளிடம் சென்று விடுமோ என்ற அடிப்படையில் மருமகளை எதிரியாக பாவிக்கிறாளோ அது போல் தன்னுடைய கணவன் வேறு பெண்ணை திருமணம் முடித்தால் தன் மீதான கணவனின் அன்பு திசை மாறி போய் விடும் என்ற பயமும் பெண்கள் ஆண்களின் இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
பெண்களுக்கு தெரியாமல் நடக்கும் ரகசிய திருமணங்கள்
சமீபகாலமாக இரண்டாம் திருமணம் செய்யும் பலர் தற்காலிக பிரச்னைகளை தவிர்க்க தங்கள் மனைவிக்கு தெரியாமலேயே இன்னொரு பெண்ணை திருமணம் செய்கின்றனர். குறிப்பாக அழைப்பு பணியில் ஈடுபடும் பலர் இவ்வாறு செய்வதால் அழைப்பு பணியில் ஈடுபடுவோர்க்கு பெண் கொடுப்பதற்கே யோசிக்கும் நிலையையும் பார்க்கின்றோம். ‘உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவர்களே உங்களில் சிறந்தவர்கள்’ எனும் பெருமானாரின் வாக்குக்கு மாறாக போர்களத்தில் கூட மனைவியின் ஆலோசனையை கேட்பதற்கு பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் நமக்கு முன்மாதிரி இருக்கும் போது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருப்பது அப்பெண்ணுக்கு கணவனின் மேல் வெறுப்பை தான் ஏற்படுத்தும். தற்காலிக சங்கடங்களுக்கு பயந்து கடைசியில் விஷயம் வெளியே தெரியும் போது அப்பெண்ணுக்கு சமுதாயத்தில் ஏற்படும் அவமானமும், குத்தல் பேச்சுகளும், நையாண்டிகளும் சொல்லி மாளாது. இவ்வளவு முக்கியமான விஷயத்தையே மறைத்த கணவன் இன்னும் எதை எதையெல்லாம் மறைத்திருப்பான் என்ற சந்தேகமும் இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்க்கும் காரணங்களில் ஒன்றாகும்.
பெண்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமை
இரண்டாம் திருமணம் செய்யும் பலர் அதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாமலேயே திருமணம் செய்வதால் பெண்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம். ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் இரண்டாம் திருமணம் செய்பவர்கள் மனைவியிடம் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளுக்கெல்லாம் இரண்டாம் திருமணம் செய்பவர்கள் திருமணம் முடித்தவுடன் பொருளாதார வசதியின்மை காரணமாக இருவரையும் திருப்திபடுத்த முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம்.
அதிலும் முதல் மனைவியுடன் குடும்பமாக வாழ வசதியில்லா வளைகுடா மாப்பிள்ளைகள் கூட இரண்டாம் திருமணம் செய்வது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானது. குழந்தை இல்லை என்று இரண்டாம் திருமணம் செய்பவர்கள் சில சமயங்களில் அதற்கு காரணமாக தாங்களும் இருக்கலாம் என்பதை மறந்து விடுகின்றனர். சொந்த ஊரை விட்டு வேறு ஊரிலோ அல்லது வேறு நாட்டிலோ வாழ்பவர்கள் மனைவியை வருடத்திற்கு ஒரு முறை பார்ப்பதால் தங்கள் இச்சையை தீர்த்து கொள்வதற்காக போன இடத்தில் திருமணம் செய்பவர்கள் ஏனோ ஊரில் இருக்கும் தன் மனைவிக்கும் அத்தேவை இருக்கும் என்பதை எளிதில் மறந்து விடுகின்றனர். இரண்டாம் திருமணம் செய்வதை மார்க்க கடமையாகவே பர்ளு கிபாயாவாகவே சித்தரிக்கும் நம்மவர்களில் பலர் வசதியின்மையால் சுன்னாவுக்கு மாற்றமாக இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்திருப்பவர்களாகவோ அல்லது இரண்டாம் மனைவியை அவளின் தாய் வீட்டிலேயே தங்க வைப்பவர்களாக உள்ளதை பார்க்கின்றோம்.
குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படல்
ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்வதால் அதிகம் பாதிக்கப்படுவது எதிர்கால சந்ததியினரான நம் குழந்தை செல்வங்கள் தான் என்றால் அது மிகையானதல்ல. இரண்டாம் திருமணம் செய்தவுடன் தன்னுடைய நேரத்தை இன்னொரு குடும்பத்துக்கும் சேர்த்து செலவிட வேண்டியவனாக இருப்பதால் தந்தையிடமிருந்து அது வரை கிடைத்த பூரண அன்பு குறைந்து விடுவதால் குழந்தைகள் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றன.
அது மாத்திரமல்லாமல் குழந்தைகள் வயதை ஒத்த சிறுவர்கள் பள்ளிக்கூடத்திலும் தெருவிலும் கேலி, கிண்டல் செய்யும் போதும் மனம் உடைந்து விடுகின்றனர். ஆறுதலுக்கு தாயாரிடம் வரும் போது அவரும் கணவர் மேல் உள்ள கோபத்தை குழந்தையிடம் காட்டும் போது குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகிறார். இன்றைய போட்டி நிறைந்த சூழலில் சிறுவர்கள் பெற்றோரின் முழு ஆதரவுடன், வழிகாட்டலுடன் மட்டுமே அமைதியான சூழலில் தங்கள் எதிர்காலத்தை நோக்கி சரியான திசையில் செல்ல இயலும். அது போல் மனைவிகள் மத்தியில் காட்டும் பாரபட்சம் குழந்தைகளின் மத்தியில் எதிரொலிப்பதை பார்க்கின்றோம். அது போல் சில சமயங்களில் தன்னுடைய தாயாரின் பிரச்னைகளுக்கு எல்லாம் தன் தந்தையின் இரண்டாம் திருமணமே காரணம் என்று நினைக்கும் குழந்தைகளின் உள்ளத்தில் தந்தை ஒரு வில்லனாக பதிந்து விடுகிறார்.
முடிவுரை
இஸ்லாம் அனுமதித்துள்ள இரண்டாம் திருமணம் தேவையான சந்தர்ப்பங்களில் அதற்கு தேவையான தகுதியுள்ளவர்களால் தங்கள் மனைவியிடத்தில் பக்குவமாக எடுத்து சொல்லி அவர்களையும் அதற்கேற்ப தயார் செய்திருந்தால் அவர்களே முன் வந்து அதனை ஆதரிப்பார்கள்.
எனவே பெண்களின் இரண்டாம் திருமணத்துக்கான எதிர்ப்புக்கான முக்கிய காரணமாக நாம் அவர்களின் கலாச்சாரம், இயல்பையும், இரண்டாம் திருமணத்தை பெண்களின் மேல் எழும் சிறு பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களை பிளாக் மெயில் செய்யும் ஒரு ஆயுதமாக கையாளும் ஆண்களையும் இரண்டாம் திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தை ஆதாரம் காட்டும் ஆண்கள் திருமணம் முடித்தவுடன் அவர்களுக்கு மத்தியில் நீதியின்றி நடப்பதும் குழந்தைகளுக்கு மத்தியில் கூட பாரபட்சம் காட்டுவதுமே முக்கிய காரணங்களாகும். இவை தவிர்க்கப்பட வேண்டுமென்றால் இஸ்லாம் சொல்லுகின்ற தகுதிகள் உள்ளோர் மட்டும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இரண்டாம் திருமணம் செய்வதை கொண்டும் அதை கொண்டு முதல் மனைவிக்கு எப்பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதிலும் அதை அவர்களுக்கு புரிய வைப்பதிலுமே உள்ளது. அப்படிப்பட்ட ஓர் சமூகத்தை இம்மண்ணில் அமைக்க அல்லாஹ் உதவி செய்வானாக
இஸ்லாத்தின் பார்வையில் விளையாட்டுக்கள்
பாடசாலை விடுமுறை வந்து விட்டால் எமது சிறார்கள் அவர்களின் விடுமுறை முடியும் வரை பொழுதுபோக்குக்காக சில விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் இணைந்து விளையாடுவது வழக்கம். அவர்களுக்கான அந்த வாய்ப்பை பெற்றோர்களே ஏற்படுத்தி கொடுப்பார்கள்! இந்த விளையாட்டுக்களில் இஸ்லாம் அனுமதித்த விளையாட்டுகள் எவை? இஸ்லாம் தடை செய்துள்ள விளையாட்டுகள் எவை ? என்பதை இந்த ஆக்கத்தில் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
1) சூதாட்டம் தடை
அல்லாஹ் திருமறையில்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள் (அல் குர்ஆன் 5:90)
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
91. மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 5:91
2) நோன்பாளிகளே…! இது உங்கள் கவனத்துக்கு
عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
” مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ ” . أخرجهُ مسلمٌ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நர்தஷீர் (காய்விளையாட்டுகள்) விளையாடுகின்றாறோ அவர் தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 4549 அத்தியாயம் : 41. கவிதை)
🎲நர்தஷீர்:
என்ற சொல் நாம் விளையாடும் தாயக்கட்டை ,செஸ் , கரம் போன்ற காய் விளையாட்டுகளை குறிக்கும். இதை விளையாடுவது பன்றி இறைச்சியிலும் அதன் இரத்திலும் எங்கள் கையை நாம் தேய்த்து கொள்வதற்கு சமம் என நபி ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளதால் இந்த விளையாட்டுகளை விட்டு நாம் ஒதுங்கி எம் பிள்ளைகளையும் இந்த பாவத்திலிருந்து காப்போமாக.. அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து நாம் நோக்கும் நோன்பு வீண் போய்விடக் கூடாது நோன்பு காலங்களில் இவ்விளையாட்டில் ஈடுபடுகின்றவர்கள் எம் சமூகத்தில் பலர் அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக..!
3) உடலுக்கு பாதிப்பை உண்டு பண்ணும் இம்மையிலும் மறுமையிலும் எந்த பிரயோசனத்தையும் தராத விளையாட்டுகளை விளையாடுவதும் தடை செய்யப்பட்ட காரியம் என்பதை பின்வரும் ஹதீஸில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்
அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் சிறிய கற்களைச் சுண்டி (விளையாடி)க்கொண்டிருந்த என் தோழர் ஒருவரைக் கண்டேன். அவரிடம், “கற்களைச் சுண்டி விளையாடாதே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறிய கற்களைச் சுண்டியெறிவதை வெறுத்து வந்தார்கள்” அல்லது “சிறிய கற்களைச் சுண்டியெறிய வேண்டாமெனத் தடுத்து வந்தார்கள்”. அவ்வாறு சிறிய கற்களைச் சுண்டியெறிவதால் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படுவதோ எதிரிகள் வீழ்த்தப் படுவதோ கிடையாது. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)” என்று சொன்னேன்.
அதன் பிறகு ஒரு முறை அதே தோழர் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து “விளையாடுவதை வெறுத்து வந்தார்கள்” அல்லது “அதைத் தடை செய்துவந்தார்கள்” என்று நான் உன்னிடம் சொல்கிறேன். பிறகு (மறுபடியும்) நீ சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடுவதைக் காண்கிறேனே! நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று கூறினேன்.
– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 34. வேட்டைப் பிராணிகளும்,அறுக்கப்படும் பிராணிகளும், உண்ணத்தக்க பிராணிகளும்)
நபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) நூல் : புகாரி 6220
4) உடலுக்கு பிரயோசனம் தரும் சோம்பேறித்தனம் அற்ற விளையாட்டுகளை விளையாட அனுமதி
1621. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒரு பெருநாள் தினத்தன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் ஈட்டியெறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறைவாசலில் நின்றபடி தமது மேல்துண்டால் என்னை மறைத்துக்கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கேளிக்கைகள்மீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். இஸ்மாயீலின் சந்ததிகளே அம்பெறியுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத் தான் இருந்தார்.நீங்களும் எறியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்றனர்.நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அவர்கள் அணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும். என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)
நூல் : புகாரி 2899
5)”ஓட்டப்போட்டி வைக்க அனுமதி
நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன்.அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொôன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா! என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத் 25075
நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார்.இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.பைலா தோற்றுவிட்டதே என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல் : புகாரி 6501
6) பொம்மை விளையாட்டுக்கு அனுமதி
4827. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்துபோய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பிவைப்பார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பொம்மைகள் (“பனாத்”)வைத்து விளையாடுவேன்” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள்
7) நோன்பு பிடிக்கும் பிள்ளைகளுக்கு விளையாட விளையாட்டு பொருட்களை செய்துகொடுக்க அனுமதி
2091. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி “(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்” என்று அறிவிக்கச்செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு
8) மார்க்கத்துக்கு முரணற்ற அர்த்தமுள்ள பாடல்களை பாடி மகிழ , விளையாட அனுமதி
4543. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன பாடல்களிலேயே மிகவும் உண்மையான பாடல்,
“அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே”
எனும் பாடல்தான்.
(கவிஞர்) இப்னு அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 41. கவிதை
நபி (ஸல்) அவர்கள் ருபையிஃ பின்த் முஅவ்வித்(றழி) அவர்களின் வீட்டுக்கு சென்றார்கள், அப்போது சில சிறுமிகள் ரபான் தட்டியவர்களாக பத்ரில் மரணித்த தம் தந்தைமார்களை புகழ்ந்து கவிதை பாடினர், அப்போது ஒரு சிறுமி ‘எங்களில் ஒரு நபியிருக்கின்றார், அவர் நாளை என்ன நடக்கும் என்பதனை அறிவார்.’ என்று கூற, நபியவர்கள் “இப்படி நீர் கூறாதீர், நீர் (ஏற்கனவே) கூறியதைக் கூறும்.” என்று கூறினார்கள். (புஹாரி)
1619. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் நடந்த) “புஆஸ்” எனும் போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
-(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்), அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “இரு சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை
4540. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், “உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (தெரியும்)” என்றேன். “பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
– மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளைப் பாடுமாறு கூறினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் “உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 41. கவிதை
9) உயிருள்ள வற்றை இலக்காகவைத்து அவற்றுக்கு நோவினை கொடுக்கும் விதத்தில் விலையாடத் தடை
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 3617
மர்ஹூம் மௌலானா கலீல் அஹ்மத் கீரனூரி
அவர் சிறந்த, நகைச்சுவையான மற்றும் அறிவார்ந்த பேச்சுக்கு பெயர் பெற்றவர்.
அவர் தப்லீ ஜமாத்தையும் அவர்கள் பிரசங்கிக்கும் முறையையும் ஆதரித்தார்.
திண்டுக்கல்லின் தாருல் உலூம் யூசுபியா அரபு கல்லூரியின் தலைவராகவும், ஹைதஸ் ஷரீயாவின் தலைவராகவும் இருந்தார்.
மௌலானா கலீல் அகமது கீரனூரி அவர்களின்
முழு சொற்ப்பொழிவுகள் கேட்க கீழே கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இந்த தமிழ் பயான் அனைவரும் பயனடைய பகிரவும்
Share this Tamil Bayan with everyone.


No comments:
Post a Comment