Sunday, September 6, 2020

மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் சொற்பொழிவுகள்

                       
எங்களுக்கு நேரான பாதையை காட்டுவாயாக!  
சிராத்துல் முஸ்தகீம்
மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ
மரணம் வந்தே தீரும்
மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 1
மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 2

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 3

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 4

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 5

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 6

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 7

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 8

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 9

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 10

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 11

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 12

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 13

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

குர்ஆன் மொழிபெயர்ப்பு சூரா பாத்திஹா 14

மௌலானா அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ


இஸ்லாத்தில் மஸ்ஜித்தின் முக்கிய மற்றும் தேவை
NEED OF MASJID IN ISLAM
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் சொற்பொழிவுகள்
இஸ்லாத்தில் புகை பிடித்தல் ?
புகைபிடித்தல் ஹலாலா ஹராமா இஸ்லாத்தில் என்ன சட்டம்- புகை ! உனக்குப் பகை!  
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள்
புகைபிடித்தல் 
ஹலாலா?? ஹராமா??

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு..

சிகரெட், சிகார், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப்புகைத்தலும் ஹராம்!” என்பது இறையச்சம் கொண்ட இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவாகும். அதேநேரம், சில இறையச்சம் அற்ற, புகையிலை கம்பெனிகளின் ஏஜெண்டுகள் போல செயல்பட்டு ஒரு சில போலி உலமாக்கள் வேண்டுமானால் " புகைப்பது ஹராம் அல்ல " என்று ஃபத்வா கொடுத்து இருக்கலாம். இது நிச்சயம், பல இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முற்றிலும் விரோதமானது..! இஸ்லாமிய அடிப்படையில் மனிதனுக்கு எந்த ஒரு தீய பழக்கமும் படைத்த இறைவனாலும் அவனுடைய தூதராலும் அங்கீகரிக்கப்படாத ஒன்று. ஆனால் இன்று பெரும்பாலான முஸ்லிம்களே இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். காரணம், ஒரு பக்கம் 'இது ஹராமா... இல்லையா...? ' என்று ஆலிம்களிடையே தர்க்கம் இருப்பதால்தான்..!

தீயது எல்லாமே ஹராம் :

மனிதர்களுக்கு எது நல்லதோ, அதை நபி(ஸல்) அவர்கள் ஆகுமாக்குவார்கள்; கெட்டவற்றைத் தடுப்பார்கள். ஆனால், "புகைத்தல் என்பது ஒரு கெட்டது" என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். 'புகைப்பிடித்தல் நிச்சயமாக உடல் நலத்திற்கு தீங்கானது' என்பதில் 100% அனைவருமே உடன்படுகின்றனர். அதைத்தயாரிப்பவர்கள், விற்பவர்கள், இவ்இரண்டுக்கும் அனுமதிக்கிறவர்கள், அவற்றை வாங்கி புகைப்பவர்கள் உட்பட...!!!

முஹம்மத் நபி(ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது... "அவர், அவர்களுக்கு நன்மையை ஏவித்தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும் அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்."(குர்ஆன்- 7:157)

இந்த வகையிலேயே இது இஸ்லாமிய சட்டத்தில் “ஹராம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது. இருந்தாலும்... இன்னும் பல வகையினை பார்ப்போம்..!
.
தற்கொலை செய்தல் ஹராம் :

.
சரி. உதாரணமாக.... என்னிடம் டெமக்ரான் அல்லது டிக்20 அல்லது ஏதோ ஒரு பூச்சிக்கொல்லி நச்சுமருந்து உள்ளது. அதை, ஒரு மடக்கில் குறைந்தது கால் லிட்டர் குடித்தால்தான் குடித்தவர் இறந்து போவார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அதில், ஒரு நாளைக்கு ஒரு சொட்டு, அரை சொட்டு என்று காலம் காலமாக குடிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா..? அது ஹலால் ஆகுமா..? ஆகாதல்லாவா..? ஏன்..? "உயிருக்கு கேடுதரும் நச்சுப்பொருள்கள் உண்பது ஹராம்" என்றும், "அப்படி விளங்கி அதை உண்ணுதல் என்பது தற்கொலை" என்றும், "தற்கொலை செய்தால் நரகம்" என்றும் தெளிவாக விளங்கி வைத்திருக்கும் நாம், 'நிச்சயமாக ஒருநாள் உயிருக்கு கேடு தந்தே தீறும்' என்ற சுருட்டு/பீடி/சிகார்/சிகரெட்டை புகைப்பது, நம்மை நாமே சிறிது சிறிதாக கொல்வதற்கு --அதாவது-- தற்கொலைக்கு சமானம்தானே..? இது எப்படி 'ஹராம் இல்லை' என்று முடிவு செய்ய முடியும்..?

"உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்" (குர்ஆன்-4: 25)

"மேலும் உங்களை நீங்களே அழிவுக்கு உட்படுத்திக்கொள்ளாதீர்கள்" (குர்ஆன்-2:195)

ஒரு விஷயத்தில் நன்மையைவிட தீமை அதிகமிருந்தால் அது ஹராம் :

“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்கு பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! ..... ..... நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான்.” (குர்ஆன்-2:219)

மேற்படி வசனம், சூதாட்டம் மற்றும் மதுபானத்தில் சில நன்மைகளும், பெரிய தீமைகளும் இருப்பதாகக் கூறுகின்றது. சில நன்மைகள் இருந்து, அதை விட தீமைகள் அதிகமிருந்தால் அது "ஹராம்" என்று ஆகியிருக்குமானால் தீமைகள் மட்டுமே நிறைந்த, எந்த நன்மையுமற்ற சிகார்,சுருட்டு,பீடி,சிகரெட்டின் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்..!

பிறருக்குத்தொல்லை தருவதும் ஹராம் :

“நல்ல முஸ்லிம் யார்?” என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

சுவாசிப்பதற்கேற்ற புகைப்பழக்கம் இல்லாத பிறருக்கு உரிமையான தூய காற்றை, தன்னுடைய சிகரெட்/பீடி/சுருட்டு/சிகார் புகையால் ஒரு முஸ்லிம் மாசுபடுத்துவது எங்ஙனம் நீதியாகும்..? இது 'இஸ்லாமிய மனித உரிமை' அடிப்படை சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது அல்லவா..?

இதன் அடிப்படையில், வீட்டில் இருந்து புகைப்போரால் அவர் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினர் மொத்தமாக பாதிக்கப்படுகிறார்கள். வீட்டுக்கு வெளியே பொது இடங்களில் ஒருவர் புகைப்பதால் அவர் மட்டுமின்றி அவர் ஊதித்தள்ளும் புகையால் அருகே இருந்து சுவாசிப்பவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி புகைத்தால் அவளது குழந்தையையும் சேர்ந்தே அது பாதிக்கின்றது.

துர்நாற்றம் மூலம் பிறருக்கு சிரமம் ஏற்படுத்துவது கூட ஹராம் :


எத்தனையோ பேருக்கு துர்நாற்றம் பிடிக்காது. இந்த புகை பலருக்கு துர்நாற்றம். புகைக்கும் கணவன் வாயிலிருந்து அவை வந்தாலும் அது மனைவிக்கு துர்நாற்றமே. இதே துர்நாற்றத்துடன் மனைவியை முத்தமிட்டு கொஞ்சுவதோ, குழந்தைக்கு வாஞ்சையுடன் முத்தம் இடுவதோ... எப்படி சரியாகும்..? இதுகூட, அடுத்தவரை அவருக்கு விருப்பமின்றி தன் பலத்தால் கட்டாயப்படுத்துவது அல்லவா..? இதற்கும் இஸ்லாத்தில் அனுமதியுண்டா..?

உதாரணமாக, வெங்காயம் மற்றும் பூண்டு இவையிரண்டும் சிறந்த மருத்துவ குணங்கொண்ட நல்ல உணவுவகையாகும். இவற்றை உண்பதை நபி(ஸல்) அவர்கள் தடுக்க வில்லை. ஆனால், வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றை பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் மஸ்ஜிதுக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி) எதற்கு..? இவற்றை பச்சையாக சாப்பிட்டவர் வாயில் வாடை இருக்கும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு இடையூறாக இருக்கலாம். அனுமதிக்கப்பட்ட நல்ல உணவான வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டுக்கே இஸ்லாத்தில் இந்த கதி என்றால்... புகைப்பவர் வாயில் பல்துலக்கினாலும் குடியிருக்கும் துர்வாடை கொண்ட சிகரெட்டின் நிலை என்னவென்று இருக்கும் என நிதானமாக சிந்தியுங்கள் சகோ..!

போதையை ஏற்படுத்துவதெல்லாமே ஹராம் :

புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. ஏனைய போதைவஸ்துக்களை பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்கு போதை ஏற்படாத போதும், மிகக்குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். ‘குறைந்தளவு போதையை ஏற்படுத்தக்கூடியதும் ஹராமானது’ என்பது நபிமொழி.

வீண்விரயம் செய்வது ஹராம் :

உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றான, புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. வீண்விரயம் செய்வதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். இறைவனும் நேசிப்பதில்லை.
"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (குர்ஆன்-7:31)

"நிச்சயமாக விரயஞ்செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்". (குர்ஆன்-17:27).
இறைவனின் நேசம் இன்றி... ஷைத்தானின் சகோதரர் ஆகிவிட்டால்... அப்புறம் எங்கே சுவனம்...?

புகை அடிமையாகி இறைக்கடமைகளை புறக்கணித்தல் ஹராம்:

ரமளான் மாதம் வந்துவிட்டால், சிலருக்கு நோன்பு வைக்க முடிவதில்லை. உடல்நலன் ரீதியான & மருத்துவ காரணங்கள் என்றால் விலக்கும் பரிகாரமும் உண்டு. ஆனால், சிலரோ... "தண்ணீர், உணவு அதெல்லாம் இல்லாமல் இருந்து விடலாம்... அதெப்படி...சிகரட் புகைக்காமல் 14 மணிநேரம் இருப்பது..? நான் ஒரு 'செயின் ஸ்மோக்கர்'ங்க... அதனால, நோன்பு வைப்பது கஷ்டம்..!" என்பார்கள். இறைவன் இட்ட கடமைகளை செய்யவிடாமல் தடுப்பது ஷைத்தான் அல்லவா..? ஷைத்தானுடனான சகவாசம் இறையச்சம் கொண்டவருக்கு ஹராம் அல்லவா..?

"மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் ஹலாலானதும் சுத்தமானதுமான பண்டங்களையே புசியுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான்". (குர்ஆன் - 2:168)

ஆக, புகைப்பிடித்தல் எனும் இந்த ஷைத்தானை விட்டும் நாம் நமக்கு பாதுகாவல் தேடிக்கொள்ள வேண்டாமா..?

பாதிக்கப்பட்டோரின் துவா சுவனத்தையே ஹராம் ஆக்கிவிடுமே..?

மேலதிகாரி ஒருவர் செயின் ஸ்மோக்கர். அவர் அறையிலேயே காலமெல்லாம் பணியாற்றும், புகைப்பழக்கமே இல்லாத அவரின் செக்ரட்டரிக்கு ஒருநாள் நுரையீரல் புற்றுநோய்..! அவரை பரிசோதித்த மருத்துவர், "நீங்கள் புகைப்பிடித்ததால் இந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறீர்கள்..!?" என்று சொல்ல... "அடப்பாவி மேனேஜர்..! நீ செத்ததும் இன்றி, புகைப்பிடிக்காத என்னையும் இந்த கதிக்கு ஆளாக்கிட்டேயே..! உன்னை நான் மன்னிக்கப்போவதில்லை..!" என்று இவர் மனம் வெதும்பி, "இறைவா..! நீ அவரை பார்த்துக்கொள்..!" என்கிறார்..! அந்த மேலாளர், தன் மனதால் கூட பிறருக்கு தீங்கு இழைக்காமல் வாழ்ந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவரின் மன்னிப்பை பெற முடியாமல் இறந்துவிட்டவரான இவர், அல்லாஹ்வின் மன்னிப்பை பெற முடியுமா..? ஆக, இப்படிப்பட்ட பாதிக்கப்பட்டோரின் துவா அவரை சுவனம் செல்லாமல் தடுத்து விடக்கூடுமே..?

"அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).


அநீதி இழைக்கப்பட்டவரின் பக்கம் அல்லாஹ் இருப்பதோடு, அநீதி இழைத்தவர்களுக்கு எதிராகவும் இருப்பான் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். தனக்கு பாவம் செய்தவனை பாதிக்கப்பட்ட அந்த மனிதர் மன்னிக்காதவரை, அவனை அல்லாஹ் மன்னிப்பதில்லையே..?

எனவே, (புகைக்கும்) சகோதரர்களே..!

"புகைத்தலை பகைத்தல்" என்பது மார்க்கக்கடமை என்பதை உணர்ந்து "புகைப்பது ஹராம்தான்" என்று இனியாவது உறுதியான முடிவை எடுங்கள்..!

புகைப்பிடித்தல் ஹராம்தான் என்று என்று முடிவுக்கு வந்து விட்டால்...

சிகார்,சிகரெட்,பீடி,சுருட்டு... ஆகிய இவற்றை,
தயாரிக்கவோ...
விநியோகிக்கவோ...
விற்கவோ...
புகைக்கவோ...
இவற்றையெல்லாம் அனுமதிக்கவோ...
இவர்களுக்கு எல்லாம் விளம்பரம் செய்து ஊக்குவிக்கவோ...
முக்கியமாக, இவர்களுக்கு ஆதவாக ஃபத்வா கொடுக்கவோ...

..."மெய்யான இறையச்சம்" உடைய எவவரும் முன்வரமாட்டாரே..! ஏனென்றால்... இவை அனைத்துமே ஹராம் என்றாகிவிடுமே..!

"நீங்கள் என்ன ஆலிம் பட்டம் பெற்றவரா... 'புகைப்பது ஹராம் என்று ஃபத்வா வழங்க..?" என்பவர்களுக்காக... 
("Smoking is Haram in Islam"--Many FATWAs RELEASED)

"மெய்யான இறையச்சம்" வந்தால் ஒருவர் என்ன செய்வார்... என 5 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன். கேளுங்கள். (அதாவது... படியுங்கள்.)

.
சவூதிகளில் புகைப்பழக்கம் கொண்டவர்கள் கணிசமாக இருக்கின்றனர். காரணம், 'அது ஹராம் அல்ல என்ற தவறான ஃபத்வா'..! அதனால் இறக்குமதியும், விற்பனையும், புகைத்தலுக்கு அனுமதியும் சாத்தியமாகிறது.

இந்நிலையில் என்னுடன் பணியாற்றும் சவூதி ஒருவர் இஸ்லாமிய அடிப்படைகளை தம் வாழ்வில் மிகவும் பேணி நடப்பவர். எந்த செயலையும் "சத்தமாக பிஸ்மில்லாஹ்" சொல்லாமல் ஆரம்பிக்கவே மாட்டார்..! அப்படியானவர், சிகரெட் மூலம் இதய நோய் வந்த பின்னும், மருத்துவர் அறிவுருத்தியும் கூட... (ஒருநாளைக்கு ரெண்டு பாக்கெட் என்பதை ஒரு பாக்கெட் ஆக்கிகொண்டாராம்) ...தொடர்ந்து சிகரெட் பிடித்துவந்தார்..! எந்நேரமும் அவரிடம் ஒரு சிகரெட் பாக்கெட்டும் லைட்டரும் இருக்கும்.

அப்போது, நாங்கள் இருவரும் ஒரு முறை மஸ்ஜிதுக்குள் தொழ நுழையும் போது தன் சிகரெட் பாக்கட்டை எடுத்து தன் கழட்டிய ஷூவுக்குள் வைத்துவிட்டு பள்ளிக்குள் நுழைந்ததை கவனித்தேன்.

மற்றொரு சமயம், அவர் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து லைட்டரால் கொளுத்தும் முன்பு கேட்டேன்.

"நீங்கள் எப்போதும் சத்தமாய் சொல்லும் பிஸ்மில்லாஹ் இப்போது எங்கே..?"

" என்ன கேட்டீர்கள்..?"

"இல்லை... சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் சொல்லவில்லையே... அது ஏன்..!? மறந்து விட்டீர்களா..?"

" மறக்கவில்லை. ஆனால், இதுக்கு போய்..? எப்படி..? வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா..?"

"மற்றவரை விடுங்கள். நீங்கள் ஏன் சொல்ல வில்லை..? அது தவறென்று உங்கள் உள்மனம் சொல்வதாலா..?"

"..... " (மவுனமாக என்னையே நிலைகுத்திய பார்வை பார்த்தார்)

"எதையுமே பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்கும் நீங்கள், உங்களுக்கு பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க பிடிக்காத ஒரு செயலை, 'இப்படி பிஸ்மில்லாஹ் சொல்லாமல் ஆரம்பிப்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிரானது' என்று நன்கு அறிந்திருந்தும், நீங்கள் ஏன் இச்செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்..?" .....என்றேன்...!

அவ்ளோதான்...

உடனே, கையிலிருந்த அந்த சிகரெட்டை அருகே இருந்த குப்பைத்தொட்டியில் எறிந்தார்..! தொடர்ந்து தன் ஆடையினுள்ளே இருந்த சிகரட் பாக்கட்டையும் எடுத்து எறிந்தார்..! லைட்டரை சிறிது யோசித்து விட்டு... கீழே போட்டு ஷூவால் நசுக்கி உடைத்து அதன் எரிபொருளை வெளியாக்கிவிட்டு, உடைந்த துகள்களையும் பொருக்கி குப்பைத்தொட்டியில் மொத்தமாக எறிந்தார்..!

அதன்பின்னர், அவர் சிகரெட் பிடிப்பதை நாங்கள் எவருமே கண்டது இல்லை..! அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி :: சகோ.. Mohamed Ashik(உலக குடிமகன்)


புகைபிடிக்கலாம் இஸ்லாத்தில் மஸ்ஜித் தேவை
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் சொற்பொழிவுகள்


சாப்பிட்ட பின்னும் பால் அருந்திய பின்னும் 
ஒத கூடிய அற்புத துஆ 
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள்

கண்ணியம் பிரியம் - 1
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள் 


கண்ணியம் பிரியம் - 2
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள் 

சிராத்துல் முஸ்தகீம் - 1
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள் 

சிராத்துல் முஸ்தகீம் - 2
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள் 
லைலத்துல் கத்ரு 
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள்
சுவர்க்கத்தின் நதிகள்
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள் 
எட்டு விதமான சொர்க்கங்கள்
முதலாவது சொர்க்கம் - ஜன்னத்துல் பிர்தௌஸ்
1) போதும் என்ற மனம் கொண்டவர்கள்.
2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள்.
3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்.
4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள்.

இரண்டாவது சொர்க்கம் - தாருஸ் ஸலாம்
1) அனாதைகளை ஆதரிப்பவர்கள்.
2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.
3) ஸலாம் சொல்பவர்கள்.
4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள்.

மூன்றாவது சொர்க்கம் - ஜன்னத் அத்னு
1) பேச்சை குறைப்பவர்கள்.
2) தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்.
3) உணவை குறைவாக உண்பவர்கள்.
4) மக்களின் தொடர்புகளை குறைத்து(இறை வணக்கம் செய்பவர்கள்.

நான்காவது சொர்க்கம் - ஜன்னத்துல் நயிம்
1) தானம் தர்மம் செயபவர்கள்.
2) நன்றி செலுத்துபவர்க.
3) சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்.
4) நற்குணம் உடையவர்கள்.

ஐந்தாவது சொர்க்கம் - தாருல் குல்து
1) திட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்.
2) அடுத்தவர்களை கேவலப்படுத்தாதவர்கள்.
3) யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்.
4) எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.

ஆறாவது சொர்க்கம் - தாருல் ரைய்யான்
1) பள்ளிவாசலை கட்டுபவர்கள்.
2) தொழுகையைக் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்.
3) துஆ மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்.
4) மார்க்கக் கல்வியை வழங்குபவர்கள்.

ஏழாவது சொர்க்கம் - மக்ஆது சித்தீகீன்
1) நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள்.
2) ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்.
3) கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் வாங்குபவர்கள்.
4) வாங்கிய கடனை உரிய காலத்தில் அழகியமுறையில் திருப்பி செலுத்துபவர்கள்.

எட்டாவது சொர்க்கம் - ஜன்னத்துல் மஃவா
1) விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்.
2) பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்.
3) அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்.
4) ஆலிம் மற்றும் அறிஞர்களை கண்ணியப்படுத்து பவர்கள்.

யா அல்லாஹ் எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், எங்கள் சந்ததிகளையும், சொந்த பந்தங்களையும், மூஃமினான அனைவர்களுக்கும் இந்த அருள் மிக்க பாக்கியத்தை தந்தருள்வாயாக!
ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! யா ரப்புல் ஆலமீன்

நரகத்தின் கிளைகள்
மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ 
அவர்களின் சொற்பொழிவுகள் 
கொளுந்துவிட்டு எரியும் நரகம்:

இந்த பதிவை பொறுமையாக படியுங்கள். நரகத்தின் வேதனை கடுமையானது.

இஸ்லாம் நரகத்தை பற்றி அறிவுறுத்துகிறது, அல்லாஹ் நரகத்தை இறை நிராகரிப்பாளர்காக தயார்படுத்தி உள்ளான்.

நரகத்தில் வலிகள் நிறைந்தாகவும், பயம் நிறைந்தாகவும், தண்டனைகள் நிறைந்தாகவும் இருக்கும். அவன் செய்த தீமைகளை பொருத்து தண்டனைகள் கொடுக்கப்படும். நரகம் நஷ்டவாளிகளின் இருப்பிடம். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நரகத்தை பற்றி கூறுகிறான்:



رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ‌ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏ 
எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ, அவனை நீ உண்மையில் மிகக் கேவலப்படுத்திவிட்டாய். மேலும் இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.
(அல்குர்ஆன் : 3:192)

நரகத்தின் பல பெயர்களை பார்ப்போம்:

பாவிகளை எரிப்பதற்காக தயார் செய்துள்ள நரகத்தை பல பெயர்களில் அல்லாஹ் குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.

அந்நார்:

“எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் (நாரில்) புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. -4:14

ஜஹன்னம்:

“(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் (ஜஹன்னமில்)ஒன்றாகச் சேர்த்துவிடுவான். -4:140

ஜஹீம்:

“எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரக(ஜஹீம்)வாசிகள் ஆவார்கள்” -5:10

அஸ்ஸயீர்:

“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பை (ஸயீரை)சித்தம் செய்திருக்கின்றான்” -33:64

ஸகர்:

“அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், (ஸகர்)“நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்) -54:48

அல்ஹூதமா:

“அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் (நரகில்)எறியப்படுவான்” -104:4

ளலா:

“அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும்(ளலா) நெருப்பாகும்” -70:15

தாருல்பவார்:

“அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில்(தாருல் பவாரில்) நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?”-14:28

“(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் – இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்” -14:29

ஹாவியா-அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும். அல் காரிஆ(102-8,9,10,11)

அல்லாஹ்விற்கு கட்டுப்படாதவர்களை நரகத்தின் பல பெயர்களை சுட்டிக் காட்டிஎச்சரிக்கிறான்.

நரகத்தின் தன்மைகள்:

நரகத்தின் எறிப்பொருட்கள்:



فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوْا النَّارَ الَّتِىْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‏ 
நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், நிச்சயமாக உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது; மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டதும், (சத்தியத்தை) நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டதுமான நரக நெருப்புக்கு அஞ்சுங்கள்!
(அல்குர்ஆன் : 2:24)

நரகத்தின் வெப்பம்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’ என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’ என்றார்கள். -புகாரி 3265

நரகத்தின் உணவு:

لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ‏ 
முட்கள் நிறைந்த காய்ந்துபோன புற்பூண்டைத் தவிர வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது.
(அல்குர்ஆன் : 88:6)

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍ‏ 
அது ஊட்டமும் தராது; பசியையும் போக்காது!
(அல்குர்ஆன் : 88:7)

நரகவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள்
1. கொதிக்கும் : ( 6:70, 10:4, 37:67, 38:57)
2. சீழ் ( சலம்) ( 14:16,17, 38:57, 69:36, 78:25 )
3. ஸக்கூம் மரம் ( 37:62, 44:43 to 46, 56:52,53 )
4. முள்மரம் ( 88:6 )

நரகத்தில் உள்ள மரம்:

நரகத்தில் இருக்கும் ஸக்கும் மரத்தின் பாளை எதனுடைய வடிவில் இருக்கும்:

طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْنِ‏ 
அதன் பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருக்கும்.
(அல்குர்ஆன் : 37:65)

நகரவாசிகளை வானவர்கள் எதைக்கொண்டு அடிப்பார்கள்:

وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِيْدٍ‏ 
மேலும், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காக இரும்புச் சம்மட்டிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 22:21)

நரகவாசிகளின் ஆடை:

1.நெருப்பினால் ஆன ஆடை:


هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِىْ رَبِّهِمْ‌ فَالَّذِيْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِيْمُ‌‏ 
இவர்கள் தங்களுடைய இறைவனைப் பற்றி தர்க்கம் புரிந்து கொண்டிருக்கும் இரு பிரிவினர் ஆவர். (இவர்களில்) எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நெருப்பு ஆடைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய தலைகளின் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும்.
(அல்குர்ஆன் : 22:19)

2.நெருப்பினால் ஆன விரிப்பு
நெருப்பினால் ஆன போர்வை


لَهُمْ مِّنْ جَهَـنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ‌ وَكَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ‏ 
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்!
(அல்குர்ஆன் : 7:41)

நரகவாசிகளை வானவர்கள் எத்தனை முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள்:


ثُمَّ فِىْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ‏ 
பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்.”
(அல்குர்ஆன் : 69:32)

நரகத்தின் ஆழம்…

நரகத்தின் ஆழத்தைப் பற்றி நாம் அறிவதற்காக வேண்டி பின்வரும் நபிமொழியை நபியவர்கள் கூறுவதை காணலாம்.

“ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது பயங்கரமான ஒரு சப்தத்தை கேட்டு தோழர்கள் திரும்பி பார்த்தார்கள் அப்போது நபியவர்கள் அந்த சப்தத்தை கேட்டீர்களா ? என்று தன் தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆம் என்று தோழர்கள் கூறினார்கள். அல்லாஹ் எழுபது ஆண்டுகளுக்கு முன் நரகத்திற்கு மேலாக ஒரு பெரிய கல்லை போட்டான் அது இப்போது தான் அடி தட்டை சேர்ந்துள்ளது என்று பதில் கூறினார்கள்”. -முஸ்லிம்

மேலே இருந்து ஒரு கல்லை போட்டால் அது வேகமாக வரும், அதுவும் நரகத்தின் அடிதட்டை சேருவதற்கு எழுபது ஆண்டுகள் எடுத்துள்ளது என்றால் நரகத்தின் ஆழத்தை இவ்வளவு தான் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு எடுத்து காட்டப்பட்டுள்ளது.

நரகத்திற்கு ஏழு வாசல்கள்…

சுவர்கத்திற்கு எட்டு வாசல்கள் இருப்பதைப் போல நரகத்திற்கு ஏழு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

“நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்” -15:43

“அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்” -15:44

சபிக்கப்பட்ட மரம்:



இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்.
'(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்) காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்' எனும் (திருக்குர்ஆன் 17:60 வது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதவாது: இது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. 'சபிக்கப்பட்ட மரம்' என்பது 'சப்பாத்திக் கள்ளி' மரத்தைக் குறிக்கிறது.
ஸஹீஹ் புகாரி (4716)

நரகத்தின் பொறுப்புதாரியான வானவரின் பெயர்:


وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ‌ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ‏ 
அவர்கள் மன்றாடுவார்கள்: “மாலிகே!* உம் அதிபதி எங்கள் பிரச்னையை முடித்துவிட்டால் நன்றாய் இருந்திருக்குமே!” அவர் பதிலளிப்பார்: “நீங்கள் இப்படியே கிடப்பீர்கள்!
(அல்குர்ஆன் : 43:77)

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனையிலிருந்து ஒன்று:



1800. இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை "ஸாஉ" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு "ஸாஉ"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்" என்று கூறினார்கள்.
Book : 12

பாடம் : 5 பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்கிடுமாறு வந்துள்ள கட்டளை.
1801. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book : 12

1802. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book : 12

பாடம் : 6 ஸகாத் வழங்க மறுப்பது குற்றம்.
1803. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்ற வில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த,கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித்தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன)?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்;இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:
குதிரை பாவச்சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச்சுமையாகும்.
குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.
குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு "அந்தப் பசும்புல் வெளியில்" அல்லது "அந்தத் தோட்டத்தில்" அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச்சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; "எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்" எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர" என்று சொன்னார்கள்.

நரகத்தின் வாழ்க்கை எவ்வளவு நாள் நீளமானது:

எல்லோரும் நரகத்திலே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்வர் செய்த தீமைகளை பொருத்து தண்டனைகள்.

பொதுவாக மனிதன் பாவங்களுக்கு மத்தியில் படைக்கப்பட்டுள்ளான். செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இரண்டு வழிகளை இஸ்லாம் காட்டுகிறது.முதலாவது நாம் செய்யும் அமல்கள் மூலம் பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டாவது செய்த பாவத்தை அல்லாஹ்விடம் சொல்லி அதற்கான பாவமன்னிப்பை வேண்டுவதாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களை பயன் படுத்தாதவர்கள் மறுமையில் நஷ்டவாளிகளாகும். குறிப்பாக அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் பாவமன்னிப்பு கேட்காமல் மரணித்துவிட்டால் அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது.

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” -4:48

ஆனால்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மறுமையில் விசாரணைகள் முடிந்தபின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள் . பிறகு "உள்ளத்தில் கடுகளவேனும் இறை நம்பிக்கை (ஈமான்) இருந்தோரை (நரகத்திலிலிருந்து) வெறியேற்றிவிடுங்கள்'' என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் (கருகிக்) கறுத்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்னர் "மழைநதி'யில் (நஹ்ருல்ஹயா) அல்லது "ஜீவநதி'யில் (நஹ்ருல் ஹயாத்) அவர்கள் இடப்படுவார்கள். (அவ்வாறு அவர்கள் அந்த நதியில் போடப்பட்டதும்) ஓடைக்கரையில் விதைப்பயிர் முளைப்பதுபோல (நிறம்) மாறிவிடுவார்கள். அவை வளைந்து நெளிந்து மஞ்சள் நிறத்தில் (பொலிலிவுடன்) இருப்பதை நீர் கண்டதில்லையா?

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி 22

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹ இல்லல்லாஹ் 'சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார் . எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹ இல்லல்லாஹ்' சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 44

இன்ஷாஅல்லாஹ் முடிந்தவரை நன்மையின் பக்கம் முந்துவோம் சகோதர சகோதரிகளே. நரகத்தை ஹராம் ஆக்க வேண்டும் என்று பிராத்தனை செய்வோம் அல்லாஹ்விடம் . அற்பமான இந்த உலக வாழ்க்கை மீது மோகம் கொள்ளாமல் மறுமையில் சொர்க்கத்தை அடைய முயற்சியும் உங்களுடன் ஒரு சகோதிரியாக...!

மரணம் வந்தே தீரும் பகுதி - 1 
மௌலானா கே ஏ நிஜாமுத்தீன் மன்பயீ 
மரணம் வந்தே தீரும் பகுதி - 2 
மௌலானா கே ஏ நிஜாமுத்தீன் மன்பயீ
மரணம் வந்தே தீரும் பகுதி - 3
மௌலானா கே ஏ நிஜாமுத்தீன் மன்பயீ
மரணம் வந்தே தீரும் பகுதி - 4
மௌலானா கே ஏ நிஜாமுத்தீன் மன்பயீ
பெருமானார் ஸல் அவர்களும் நமது கொள்கைகளும் 
மௌலானா கே ஏ நிஜாமுத்தீன் மன்பஈ


நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஏன் இஸ்லாத்தில் தடை
- அற்புதமான நினைவூட்டல்
why standing and urinating is forbidden in Islam 
- Wonderful reminder
ஆண்கள் நின்று கொண்டு 
சிறுநீர் கழிப்பது ஆபத்தா?

பல கலாசாரங்களில் சிறுவர்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், சிறுமிகள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.


இதுவே பரவலாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து பல சுகாதார அதிகாரிகள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மனதில் கொண்டு ஆண்கள் எவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கோரப்பட்டாலும், பலருக்கும் இது சம உரிமை சார்ந்த விஷயமாக உள்ளது.

எனவே எது சரி? அதைவிட எவ்வாறு சிறுநீர் கழித்தால் ஆணுக்கு சிறந்தது?

பல ஆண்களுக்கு நின்று கொண்டே சிறுநீர் கழிப்பது சிரமமாகதான் இருக்கும். ஆனால் அதே சமயம் அதுதான் உடனே செய்யக்கூடியது, அதாவது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அதனால்தான் ஆண்கள் கழிவறையில் அதிக கூட்டம் காணப்படுவதில்லை.

ஆண்கள் வேகமாக சிறுநீர் கழிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று, அவர்கள் ஆடைகளை அகற்ற வேண்டாம்.

இரண்டாவது ஆண்கள் சிறுநீர் கழிக்கும் யூரினல் எனப்படும் கழிவறைகள் குறைந்த இடத்தில் அதிகம் அமைக்கப்படுவதால் மிக குறைந்த நேரமே ஆகும்.


பல ஆய்வுகள் நாம் சிறுநீர் கழிக்கும் நிலையை பொறுத்து நமது சிறுநீரின் அளவு மாறுபடும் என கூறுகின்றன.

நாம் எவ்வாறு சிறுநீர் கழிக்கிறோம் என்று பார்ப்போம்; நமது சிறுநீர் சிறுநீரகத்தில் உருவாகிறது. அதுதான் நமது ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுகிறது.

அதன்பின் சிறுநீரானது, சீறுநீர் பையில் சேகரித்து வைக்கப்படும்; அதனால்தான் நாம் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது.

சிறுநீர் பையின் கொள்ளளவு 300 மில்லிட்டர் முதல் 600 மில்லி லிட்டர் வரை இருந்தபோதும், அது மூன்றில் இரண்டு பங்கு நிரம்பியவுடன் நாம் சிறுநீர் கழித்துவிடுவோம்.

நாம் எப்போது கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றும், எப்போது சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் சிறுநீர் பை எச்சரிக்கை விடுக்கும்.


நாம் ஒரு வசதியான கோணத்தில் உட்கார்ந்தால், சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் வெளியேற அது உதவும் தசைகளையும் தளர்வாக்கும்.

அதன்பின் சிறுநீர் பை சுருங்கி, அது யுரித்ராவில் (சிறுநீர் பையையும் ஆண்குறியையும் இணைக்கும் பகுதி) வழியாக உடம்பிலிருந்து வெளியேறும்.

ஒரு ஆரோக்கியமான மனிதர், சிரமப்பட்டு சிறுநீர் கழிக்க கூடாது.

ஆனால் சில சமயங்களில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சிறுநீர் கழிப்பதில் ஆண்களுக்கு பிரச்சனை ஏற்படும்.


விரைவீக்கம் உள்ளவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் அது பயன் தரும்.

உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும்போது யுரித்ரா பகுதியில் அழுத்தம் இலகுவாகி சிறுநீர் கழிப்பது இலகுவாகிறது.

நீங்கள் என்ன செய்யலாம்?
பிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியான இடத்தில் அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அது சரி என்பதை நிரூபிக்கும் ஆய்வு எதுவும் இல்லை.

2012ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல்வாதி ஒருவர் பொது கழிப்பிடங்களில் ஆண்கள் உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற விவாதத்தை முன் வைத்தார். அதிலிருந்து பல ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.


கழிவறைகளில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற பச்சை நிற குறியீடும், நின்று சிறுநீர் கழிக்க கூடாது என சிவப்பு நிற குறியீடும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில இடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆண்மைத் தன்மை நிறைந்தது என்றும் பார்க்கப்படுகிறது.

சில வீடுகளிலும் கூட இந்த குறியீடுகள் வைக்கப்பட்டிருக்கும். 2015ஆம் ஆண்டு ஜெர்மனியில், வீட்டு உரிமையாளர் ஒருவர், அந்த வீட்டில் குடியிருந்தவர் சிறுநீர் கழித்து தனது கழிவறையின் தரையை நாசாமாக்கிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆனால் அது சட்டப்படி செல்லாது என்றும், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது இன்னும் முறையில் உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துவிட்டார்



மார்க்க அறிஞர் மர்‌ஹும்.மௌலானா அல்ஹாஜ் ரயீசுல் 

முஃபஸ்ஸிர் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ.  

அவர்களின் சொற்பொழிவுகள் இடம் பெற்றுள்ளன. 

மர்‌ஹும் K.A.நிஜாமுத்தின் மன்பஇ நாடறிந்த மார்க்க அறிஞர் பன்னூல் ஆசிரியர் திருக்குர்ஆன் விரிவுரையார் சென்னை புரசைவாக்கம் பெரியபள்ளிவாசலின் தலைமை இமாம், தமிழகத்தின் மிகப்பெரும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர். மௌலானா மௌலவி ஹஜ்ரத் மர்‌ஹும் K.A.நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் சொற்ப்பொழிவுகள், பல்லாயிரக்கணக்கில் ஒளி ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சத்திய இஸ்லாத்தை மக்களிடையே கொண்டு செல்வதே நோக்கமாகும்.... 

நன்மையை ஏவி தீமையை தடுத்தல். இறைத்தூதர் முஹம்மது ஸல் அவர்கள் அருளினார்கள் :உங்களிடையே 

அல்லாஹ்வின் வேதத்தை-குரான்- (யும் அவனது தூதரின் வழிமுறை-சுன்னத்-யும்) விட்டுச் செல்கிறேன். 

நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள் !



மௌலானா கே.ஏ..நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் 

முழு திருக்குர்ஆன் விரிவுரைகள்  கேட்க கீழே கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

இந்த தமிழ் திருக்குர்ஆன் விரிவுரைகள் அனைவரும் பயனடைய பகிரவும்


Share this Quran translation with everyone.

நமது YOUTUBE CHANNEL யை SUBSCRIBE செய்து பயன் அடைந்திடுங்கள்...


Hazrath K A Nizamudeen Manbaee
He is a well-known Islamic scholar and Al-Quran transliterator.
He worked as a Chief Imaam in Purasaiwalkam Big Masjid, Chennai.
He completed his Moulavi Aalim (Tahseel) degree in Madrasa Manbavul Anwaar Arabic College.

நாடறிந்த மார்க்க அறிஞர், பன்னூல் ஆசிரியர், திருக்குர்ஆன் விரிவுரையாளர், சென்னை புரசைவாக்கம் பெரியபள்ளிவாசலின் தலைமை இமாம், தமிழகத்தின் மிகப்பெரும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா அல்ஹாஜ் K.A.நிஜாமுத்தீன் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் 31-12-2011 சனிக்கிழமை மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச்செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியானது. அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள்.

இதற்காக தென்னகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் ஜாமிஆ மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை தலைமை இடமாகக் கொண்டு 1996 முதல் செயல்படும் ஹைஅத்து ஷரீயா என்ற ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள், ஹஜ்ரத் பெருந்தகையவர்கள்.

சன்மார்க்க கோட்டையாகிய லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் மௌலவி ஆலிம் (தஹ்ஸீல்) பட்டம் பெற்று, சன்மார்க்க விளக்கம் தருவதில் முன் மாதிரி அறிஞராகவும், சிக்கலான மார்க்க விசயங்களைக் கூட பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்து கூறுவதில் வல்லவராகவும், திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் பெருந்தகையவர்கள்.

தமிழகத்திலும், வெளிநாடுகளிலும், மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், சுன்னத் வல் ஜமாஅத் மாநாடுகளிலும், ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால் அதனைக்கேட்கும் கூட்டமே தனியே தெரியும்.

இதயங்களை ஈர்க்கும் சொல்லரசாக விளங்கினார்கள். ஹஜ்ரத் அவர்களின் சொற்ப்பொழிவுகள், பல்லாயிரக்கணக்கில் ஒளி ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. தமிழக மக்களின் இறைநம்பிக்கையை (ஈமானை) தகர்த்தெறிந்த நவீன தீய குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.

யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் பயப்படாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள். 

பிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்ச்சனங்களுக்கும், தீய குழப்பவாதிகளால் தவறாக சித்தறிக்கப்பட்ட சட்டங்களுக்கும், ஆதாரங்களுடன் பதில் கொடுத்து தீய குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை, எதையும் இதயத்தை தொடும்படியாக எடுத்துக்கூறும் இயல்புள்ள மார்க்க அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர், மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பன்பட்ட மேதை அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்ப்பட்ட பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹஜ்ரத் பெருந்தகையின் நல் அமல்களை ஏற்றுக்கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்க சேவைகளை அங்கீகறித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னத்துல் பிர்தெளஸ்’ எனும் சுவன பதியில் நுழைய வைப்பானாக என்று துஆச் செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர், ஆலிம் பெருமக்கள், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ என்ற அழகிய பொருமையை தந்தருள உலகெங்கும் வாழும் அனைத்து சகோதரர்களும் துஆச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆமீன்!!!

No comments:

Post a Comment

மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி அவர்களின் சொற்பொழிவுகள்

நற்செயலின் பலன் மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு 40 முதல் 70 வரை  நற்செயலின் பலன் மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு இஸ்லாமும் இ...