நற்செயலின் பலன்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
40 முதல் 70 வரை நற்செயலின் பலன்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இஸ்லாமும் இந்தியாவும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பெருமானாரின் மகத்துவம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பொது சிவில் சட்டம் - (Uniform Civil Code - UCC)
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
முஸ்லிம் வெறுப்புணர்வு - இஸ்லாமோபோபியா.
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
குழந்தைகளை சீரழிக்கும் ஸ்மார்ட் போன்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இஸ்லாம் கூறும் ஆடை ஒழுங்கு
ஆடையில்லா மனிதனை அரை மனிதன் என்பார்கள். ஆடையைக்கொண்டே மனிதன் மதிக்கப்படுகிறான். அதனால் மனிதனுக்கு ஆடை ஒழுங்கு அவசியம். அதை இஸ்லாம் அற்புதமாகக் கூறுகிறது. அதைப் பேணுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும்.
ஆடை, மனிதனின் அந்தரங்க பகுதிகளை மறைக்கக்கூடியதாகவும், எளிமையானதாகவும், மார்க்கம் அனுமதித்த துணிவகையிலிருந்தும், மார்க்கம் அனுமதித்த அளவிலும், ஆண்கள், பெண்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலும், இறையச்சத்தை தரும் அமைப்பிலும் அமைதல் வேண்டும்.
ஆனால் நாகரீகம் என்ற அமைப்பில் தற்காலத்தில் உடுத்தப்படுகின்ற ஆடை வகைகளில் பெரும்பாலும் உடலின் அந்தரங்க பகுதிகளை மறைப்பதில்லை. ஆண்கள் அணியக்கூடிய ஆடைகளில் நாகரீகம் என்ற பெயரில் பல இடங்களில் கிழிசல்கள் இருப்பதாலும், ஆடையை கீழிறக்கி உடுத்துவதாலும், பெண்களால் அணியப்படுகின்ற சல்வார் கமீஸ், மிடி, சேலை போன்ற ஆடைகள் மிகவும் இளகலாக அமைந்திருப்பதாலும், இறக்கம் குறைந்த ஆடைகளை பெண்கள் அணிந்து வருவதாலும் அவர்களின் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் அனைத்தும் வெளிப்படுகிறது. இதனால் ஆடையிருந்தும் ஆடையில்லா மனிதர்களாகவே வலம் வருகின்றனர்.
ஆண்களை விட மிகவும் பேணுதலாகவும், பாதுகாப்பாகவும் கருதப்படக்கூடியவர்கள் பெண்களாவர். ஆகவே ஆண்களை விட பெண்கள் ஆடை விஷயத்தில் மிக அக்கறை செலுத்துவது அவசியமாகும். குழந்தையிலிருந்தே ஒழுக்கம் கற்பிக்கும் பழக்கம் நீக்கப்பட்டு விட்டதால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அணியக்கூடிய பெரும்பாலான ஆயத்த ஆடைகளில் கைப் பகுதி வலையினாலும், இளகிய துணியாலும், சில ஆடைகளில் கைத்துணியின்றியும் தயாரிக்கப்படுகிறது. இது போன்ற ஆடைகளை குழந்தை தானே என்று உடுத்தி பழக்கும் போது பிற்காலத்தில் நாணமில்லா பெண்களாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இது போன்ற கவர்ச்சியான ஆடை அணியும் பெண்கள், தீய கண் கொண்டு பார்க்கும் மனித மிருகங்களால் சீரழிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. ஆகவே இது போன்ற ஆடை வகைகளை முஸ்லிம் பெண்கள் தவிர்ப்பது அவசியமாகும்.
பெண்கள் தங்களின் உடலையும், ஆடைவகைகளில் உள்ள அலங்காரங்களையும் மறைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட பர்தா எனும் இஸ்லாமிய வழிமுறை தற்காலத்தில் கேள்விக்குறியாகி, மிக இருகலாகவும், உடலமைப்பை எடுத்துக் காட்டும் அமைப்பிலும் இருக்கிறது.
இது போன்ற ஒழுங்கீனமான நடை முறைகள் மனித சமூகத்திடம் இருக்கக்கூடாது என்பதற்காக ஆடை ஒழுங்குகளை அல்லாஹ் அருள் மறை அல்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
மனிதர்களே உங்களின் மறைவிடங்களை மறைப்பதற்காகவும், அலங்காரமாகவும் இருப்பதற்காக உங்களுக்கு ஆடையை இறக்கிவைத்தோம். நீங்கள் அணியும் ஆடைகளில் மிகச்சிறந்த்து தக்வா எனும் இறையச்சத்தை வெளிப்படுத்தும் ஆடையாகும்” என அல்லாஹ் தனது வான்மறையில் அற்புதமாகக் கூறுகிறான். அல்குர்ஆன் 7:26 ஆடவர்களால் அணியப்படுகின்ற கீழாடைகளான வேஷ்டி, கைலி, பேண்ட், பைஜாமா போன்ற ஆடைகள் அதிகமான இறக்கத்தால் தரையோடு தரையாக உராய்ந்து வருகிறது. இது துணிகளுக்கு ஒரு புறம் கேடு எனில் மற்றொரு புறம் பெருமை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது பல இளைஞர்கள் பள்ளிவாசலுக்கு தொழ வரும் போது மட்டும் பக்திப் பரவசம் ஏற்பட்டவர்கள் போன்று தங்களின் பேண்ட் போன்ற கீழாடைகளை உயர்த்தி வைத்து தொழுவார்கள். தொழுகை முடிந்ததும் அதை கீழே இறக்கிக் கொள்வார்கள். இது போன்று கீழாடைகள் இறக்கமாக இருக்கும் போது தரையில் உள்ள அசுத்தங்கள் ஆடையில் பட்டு அது அசுத்தமாகி, அதனால் தொழுகை கூடாமல் போவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எனவே நபியவர்கள் கற்பித்த அளவான கரண்டை காலுக்கு கீழ், ஆடை இறங்காமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் “கீழாடையில் கரண்டைக் காலுக்கு கீழ் இறங்கும் பகுதி நரக நெருப்பின் ஒரு பகுதி என நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மற்றொரு இடத்தில் “எவர் பெருமையை வெளிப்படுத்தும் விதத்தில் தனது ஆடையை தரையுடன் தரையாக இழுத்து வருகிறாரோ அவரை கியாமத் நாளில் அல்லாஹ் தனது அருள் பார்வை கொண்டு பார்க்கமாட்டான்” என நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால் ஆடை விஷயத்தில் நபித்தோழர்களுக்கு மிகவும் பயம் இருந்தது. அதனால் தான் இதனைச் செவியுற்ற அபூபக்க்ர் ஸித்தீக் ரழி அவர்கள் நபியே எனது ஆடை கீழே நழுவி விழுகிறது. அதை நான் இருக்கமாக பிடித்தால் மட்டுமே விழாமல் இருக்கிறது. எனவே நானும் பெருமையாளரின் பட்டியலில் இடம் பெருவேனா என பயத்துடன் கேட்ட போது, நீங்கள் பெருமையாரின் பட்டியலில் இடம் பெற மாட்டீர்கள் என நபியவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
தற்காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற வாதத்தில் ஆடவர் அணியும் ஆடை வகைகளை முஸ்லிம் பெண்களும் தெரிவு செய்கின்றனர். இது தவிர்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் பெண் போன்று தோற்றமளிக்கும் ஆணையும், ஆண் போன்று தோற்றமளிக்கும் பெண்ணையும் நபியவர்கள் சபித்துள்ளார்கள். எனவே நபியின் சாபத்தை விட்டு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனில் இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவன் கற்பித்த ஒழுங்குகளைப் பேணும் நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக ஆமீன்.
பெண்களின் ஆடை..
பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன.
1. அவ்ரத்
பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிதல் வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
''மேலும் (நபியே!) முஃமினான பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்;; தங்களது வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களுடைய மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக் கொள்ளட்டும்.''(அந்நூர்:31)
மேலே குறிப்;பிட்ட அல்குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியில் தெரிவன' என்பதன் விளக்கம் என்ன என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இது வெளியே தெரியும் ஆடைகள் முதலான தவிர்க்க முடியாமல் வெளியே தெரியக் கூடியவற்றைக் குறிக்கும் என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கருதுகின்றார்கள். இமாம்களான ஹஸன் அல்பஸரி, இப்னு ஸீரின், நஸாஈ போன்றோரும் இக்கருத்தையே கொண்டுள்ளார்கள். இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழி) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரஹ்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் சிலர், இது வெளியே தெரியக்கூடிய மோதிரம், கழுத்துச் சங்கிலி போன்றவற்றைக் குறிக்கும் என்று அபிப்பிராயப்படுகின்றனர்.
பொதுவாக ஓர் இஸ்லாமியப் பெண் முகத்தையும் இரு கைகளையும் மூடாமல் திறந்துவிடுவது தொடர்பான சட்டப்பிரச்சினை மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியே தெரிவன தவிர' என்ற சொற்றொடரை வைத்தே எழுந்துள்ளது. சுருங்கக் கூறின் இது விடயத்தில் இரு கண்ணோட்டங்கள் காணப்படுகின்றன.
1. முகமும் கரங்களும் கூட தெரியலாகாது. அதனால் முகத்தையும் கரங்களையும் மறைக்க வேண்டும்.
2. முகத்தையும் கரங்களையும் மூட வேண்டிய அவசியம் இல்லை.
பெரும்பாலான ஆரம்பகால இமாம்கள் இரண்டாம் கருத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் தமது நிலைப்பாட்டுக்கு முன்வைக்கும் சான்றுகளில் ஒரு ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு:
ஒரு முறை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழி) அவர்கள் ஒரு மெல்லிய ஆடை அணிந்து ரஸூலுல்லாஹ்விடம் வந்திருந்தார்கள். இதைக் கண்ட நபியவர்கள் உடன் தனது திருமுகத்தைத் திருப்பிக்கொண்டு பின்வருமாறு கூறினார்கள்:
'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.ஆயினும் முகமும், கரங்களும் கூட 'அவ்ரத்' எனக் கூறும் உலமாக்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டி இதனை ஒரு பலவீனமான ஹதீஸ் எனக் கூறுகின்றனர்.
பொதுவாக ஒரு பெண் தனக்கோ தன் மூலம் பிறருக்கோ 'பித்னா' ஏற்படாது என்று காண்கின்றபோது தனது முகத்தையும் கைகளையும் மூடாமல் திறந்துவிட அனுமதி பெறுகிறாள். ஆனால் கவர்ச்சியும் அழகும் உள்ள ஒரு பெண் ஒரு பக்குவமற்ற சமூகத்தில் முகத்தையும் கைகளையும் கூட மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் கொண்டுள்ளார்கள். இங்கு கைகள் என்பது மணிக்கட்டுக்கு கீழ் உள்ள பகுதியையே குறிக்கும். அதற்குமேல் உள்ள பகுதி அவ்ரத் ஆகும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
2. கனமான ஆடை
பெண்களின் ஆடைக்குரிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும். மேனியை - உடலமைப்பை வெளிக்காட்டும் மெல்லிய துணியாக அது இருத்தல் கூடாது. ஆடை மெல்லிய துணியால் அமைந்திருப்பதை ஒரு வகை நிர்வாணமாக இஸ்லாம் கருதுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்;சயமாக அவர்கள் சபிக்கப்பட்ட வர்களே. (அல்லது சபிக்கப்பட வேண்டியவர்களே.)'(அத்தபரானி)
மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை, கவர்ச்சியை வெளிக்காட்டுபவர்களாவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருபவர்களாவர் என்ற கருத்தையே நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கின்றார்கள் என இமாம் ஸுயூத்தி கூறுகின்றார்கள்.
இவ்வாறு அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் மற்றுமொரு ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)
3. இறுக்கமற்ற உடை
பெண்களின் ஆடைக்குரிய மூன்றாம் நிபந்தனை அணியும் ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருத்தல் கூடாது. மாறாக தளர்வாக, தாராளமானதாக, பெரிதாக இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமாக இருந்தால் அது உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும்.
'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு எகிப்திய ஆடையை உஸாமா (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் அதனை தனது மனைவிக்கு அணியக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் அணியவில்லையா? என உஸாமாவிடம் கேட்டபோது, அதனை அவர் தனது மனைவிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அப்போது அன்னார், 'அதனை அணியும்போது அதனுள்ளே ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும்படி கூறும். ஏனெனில் அது அவளது உடலின் கட்டமைப்பை காட்டுவதாக இருக்குமோ என நான் அஞ்சுகின்றேன்' என்றார்கள். இந்த ஹதீஸை இமாம்களான அஹ்மத், அத்தபரானி, அல்பைஹகி, இப்னு ஸஅத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸ் பலவீனமான ஒன்று என சிலர் கூறியபோதும் இமாம் தஹபி போன்றவர்கள் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளனர்.
4. மணம் பூசாமை
பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்கு நறுமணம் பூசக்கூடாது என்பதும் மற்றுமொரு நிபந்தனையாகும். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்:
'ஒரு பெண் மணம் பூசி, அதன் நறுமணத்தை ஒரு கூட்டத்தினர் நுகரும் வகையில் அவர்களைக் கடந்து செல்வாளாயின் அவள் ஒரு விபசாரியாவாள்.'
ஆயினும் ஒரு பெண் வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை. அவ்வாறே வெளியிலும் துர்நாற்றம் வீசும் நிலையில் அதனைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு மாத்திரம் இலேசாக நறுமணம் பூசிக்கொள்ளவும் அனுமதி உண்டு.
5. ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல்
பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது என்பதும் ஒரு நிபந்தனையாகும். இதற்கு பின்வரும் நபிமொழிகள் ஆதாரங்களாக உள்ளன:
'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)
'நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)
'மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.'
(அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)
6. காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல்
காபிரான பெண்களின் ஆடைகளை ஒத்ததாகவும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை அமைதல் கூடாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
'நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவை காபிர்களுடைய ஆடைகள். எனவே இவற்றை அணியாதீர்!' என்றார்கள். (முஸ்லிம்)
7. எளிமையானவை
சமூகத்தில் புகழையும் பிரபல்யத்தையும் நாடி காலத்திற்குக் காலம் வரும் நவீன வடிவமைப்புக்களில் ஆடை அணிவதும் தவிர்க்கப்படல் வேண்டும். அணியும் ஆடை பல வர்ணங்களிலும், நிறங்களிலும் வேலைப்பாடு களுடனும் கூடியதாக அமையாமல் எளிமையானதாகவும் கவர்ச்சியற்றதாகவும் இருத்தல் வேண்டும்.
இதுவரை நாம் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்ட ஆடையே ஒரு பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.
ஓர் இஸ்லாமியப் பெண் வெளியில் செல்லும் போது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து செல்லல் வேண்டும். ஷரீஅத் கூறும் ஹிஜாப் உடைக்கான மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் பெறப்பட்டவையாகும்.
ஹிஜாபின் பயன்கள்
பெண்கள் மேற்குறிப்பிட்ட ஷரீஆ வரையறைகளைப் பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள 'ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத் திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள்;;;. கெட்ட எண்ணத்துடன் அவளை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹிஜாப் உடை பெண்ணின் பாதுகாப்;பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் அழகாகச் சொல்கிறது.
''நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்.''
(அஹ்ஸாப் :59)
இந்த வசனத்தில் 'அவர்கள் அறியப்படுவதற்கு' அவர்களின் 'ஜில்பாப்' எனும் முந்தானை உதவும் என்பதன் பொருள் இந்த அடக்கமான உடை, அந்தப் பெண் ஒரு கௌரவமான, கற்புடைய, அடக்கமும், நாணமும் உடைய தூய்மையான ஒரு பெண் என்பதை பிறர் அறிய உதவும் என்பதாகும். ஒரு பெண் ஹிஜாபை பேணாத போது எவ்வாறு பாதுகாப்பை இழக்கிறாள் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
'எவரேனும் ஒரு பெண் தனது கணவனது வீடல்லாத மற்ற இடங்களில் தனது ஆடைகளை களைவாளாயின் அவள் தனக்கும் அல்லாஹ்வுக் குமிடையே உள்ள தனக்கான பாதுகாப்பை -மறைப்பை- தகர்த்துக்கொள்கிறாள்.'
இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறவரும் கருத்து யாதெனில், ஒரு பெண் தனது ஆடைகளைக் களைவதன் மூலம் தனக்கிருந்த பாதுகாப்பை நீக்கி அந்நியருக்கு தனது அழகை காட்டும் போது அவள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருந்து நீங்கிக் கொள்கிறாள் என்பதாகும்.
மேலும் பெண்கள் ஹிஜாப் உடையை ஷரீஆ வரையறைகளைப் பேணி முறையாக அனுஷ்டிக்கின்ற போது சமூக உறுப்பினர்களும் சூழலும் தூய்மை பெற வழிபிறக்கிறது. ஹிஜாப் பார்வைக்கு திரையிடுகிறது. தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க வழியமைக்கிறது. பித்னா விளைவதை தடுக்க துணைபுரிகின்றது. இதனால் உள்ளங்கள் தூய்மை பெறுகின்றன. அத்துடன் ஹிஜாப் நோயுற்ற உள்ளங்களுக்கு வேலியாகவும் அமைகின்றது. காலக்கிரமத்தில் அத்தகைய உள்ளங்களும் கூட திருந்தி தூய்மை அடைய இது வழிவகுக்கிறது.
''(நபியின் மனைவியான) அவர்களிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னால் இருந்து கேளுங்கள். உங்களதும், அவர்களதும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே மிகவும் ஏற்ற முறையாகும்.''(அஹ்ஸாப்:53)
இஸ்லாம் வெட்;கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.
'ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.' (முவத்தா)
'வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது' என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)
'வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை ந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்' என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)
இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.
ஆயிஷா (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழி) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.' (இப்னு அஸாகிர்)
அந்நிய ஆடவர் விடயத்தில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் எத்தகைய கருத்தை கொண்டிருந்தார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகின்றது. மரணத்திற்குப் பின்னாலேயே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் உயிரோடிருப்பவர்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும்.
உண்மையில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் இந்தளவு நாணத்துடனும் அடக்கமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும் என்பதே இஸ்லாமிய ஷரீஆவின் எதிர்;பார்ப்பாகும். மற்றொரு நபிமொழி இங்கு எமது சிந்தனைக்குரியதாகும்.
'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவுத்)
இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.
அனைத்திற்கும் மேலாக ஹிஜாப் ஈமானினதும், தக்வாவினதும் வெளிப்பாடாக விளங்குகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் ஈமான் கொண்ட பெண்களை விளித்துத்தான் ஹிஜாபை அணியுமாறு பணிக்கிறான். ஈமானின் பெயராலேயே இது பற்றிய கட்டளைகள் வந்துள்ளன. ''நபியே! முஃமினான பெண்களைப் பார்த்துக் கூறுங்கள்'' முஃமின்களின் மனைவியர் என்றே ஹிஜாப் பற்றிய வசனங்கள் அமைந்துள்ளன.
பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா (ரழி) அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:
'உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.'
'ஹிஜாப்' என்பது பெண்கள் தமது 'அவ்ரத்'தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும். இதற்கெதிரானது 'தபர்ருஜ்' எனும் வட்டத்தில் அடங்கும்.
'சிலவேளை ஒரு பெண் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியை பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் 'தபர்ருஜ்' எனும் தடை செய்யப்பட்ட கவர்ச்சிகாட்டலாகும்;' என மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தனது அல்ஹிஜாப் எனும் நூலில் விளக்குகிறார்கள்.
ஹிஜாபிற்கு எதிரான 'தபர்ருஜ்' ஐத் தடைசெய்யும் அல்குர்ஆன் வசனம் பின்வருமாறு கூறுகிறது:
''மேலும் உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முன்னைய ஜாஹிலிய்யாக் காலங்களில் (பெண்கள்) வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்தாதீர்கள்.''(அஹ்ஸாப்: 33)
உமையா பின்த் ருகையா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபியவர்களிடம் வந்தபோது அன்னார் அவருக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்:
'நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல 'தபர்ருஜ்' எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.' (அஹ்மத்)
இங்கு நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்களின் வரிசையில் 'தபர்ருஜ்'யைக் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது.
திருமணமும் அதன் சட்டங்களும் பாகம் ~ 1/3
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
திருமணமும் அதன் சட்டங்களும் பாகம் ~ 2/3 -
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
திருமணமும் அதன் சட்டங்களும் பாகம் ~ 3/3 -
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
திருமணமும் அதன் சட்டங்களும் முழு பாகம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
சிந்தனையை தூண்டும் சூறா ஸாத்
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
இஃதிகாஃப் இருப்பவா் whatsapp facebook
போன்றவற்றை பயன்படுத்தலாமா
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா ?மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
ரமலானில் பெண்கள்
இஃதிகாப் இருப்பது எப்படி ?
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!
அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாஃபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.
இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாஃபுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாஃப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம். அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
1. இஃதிகாஃப் என்றால் என்ன?
பதில்: அரபு மொழியில் இஃதிகாஃப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாஃப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும்.
2. இஃதிகாஃபின் சட்டம் என்ன?
பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:“பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடதீர்கள்.” (அல்பகறா: 187)
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்) இப்னுல் முன்திர், இப்னு குதாமா, நவவி(ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பது சுன்னத்தான காரியம் என்பது அறிஞர்களால் ஏகோபித்த முடிவு என்று கூறியிருக்கின்றார்கள்.
3. இஃதிகாப் இருப்பவர் தான் நாடிய போது இஃதிகாஃபை
துண்டித்து விட்டு வெளியேறலாமா?
பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது இஃதிகாஃபைத் துண்டித்து விட்டு தான் நாடிய போது வெளியேறிச் செல்லலாம். இஃதிகாஃபைப் பூரணப்படுத்திய பின்பே வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.
4. இஃதிகாஃப் இருப்பவர் நோன்பாளியாக இருப்பது அவசியமா?
பதில்: சுன்னத்தான இஃதிகாஃப் (ரமளான் கடைசிப் பத்து நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றத இஃதிகாஃப்) இருப்பவர் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
5. பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது அவசியமா?
பதில்: அல்லாஹுத்தஆலா பள்ளிவாசலைக் கொண்டே இஃதிகாஃபைக் குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: “பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:187)எனவே, இஃதிகாஃப் பள்ளிவாசலில் மாத்திரமே அமைந்திருக்க வேண்டும்.
6. எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்க முடியும்?
பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப்
பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள்
எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் “அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் (2:187) வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.
7. இஃதிகாஃபின் குறைந்த காலம் எவ்வளவு?
பதில்: இஃதிகாஃபின் குறைந்த காலம் ஒரு நிமிடமோ, ஒரு
மணி நேரமோ, ஒரு நாளோ (24 மணி நேரமோ) இருக்கலாம்.
8. இஃதிகாஃப் இருப்பவர் மலம்ஜல தேவைகளுக்காகப்
பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?
பதில்: மலம்ஜல தேவைகளுக்காக இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
9. ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?
பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாஃப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.
10. இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில்
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃபின் நிலை என்ன?
பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில்
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃப் முறிந்து விடும்.
அலட்சியப்படுத்தப்படும் ஷரிஅத் சட்டங்கள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
குழப்பத்தின் தீர்வு
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இவர்கள் நம்மை சார்ந்தவர்கள் அல்ல
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அறுத்து விருந்து போடலாமா
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
விடுமுறையும் குழந்தைகளும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அரபியிலே Good Morning
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அரசாங்க காப்பீடு
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அத்தைஹாத்து
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பெண்ணின் மகத்துவம
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
நீதத்தின் மீதே நிலைத்திருங்கள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
முஃமீன்களின் ஆயுதம் - துஆ
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
நற்பாக்கியவான்கள் யார்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
சமாதானமே சிறந்தது - 1
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
சமாதானமே சிறந்தது - 2
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
சமாதானமே சிறந்தது - 3
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
காலத்தின் அருமை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அகீகா கொடுக்கின்ற ஆட்டின் வயது என்ன ??
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
ஃபஜ்ரு தொழுகை ஜமாஅத் நடைகொண்டு இருக்கும்
நேரத்தில் ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழுதுவிட்டு
ஜமாத்தில் இணைந்து கொள்ளலாமா ??
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
சாட்சி சொல்லும் விஷயத்திலே பெண்களுடைய
அந்தஸ்தை இஸ்லாம் குறைத்து மதிப்பிடுகிறதா ??
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான் (இரத்தம் உறிஞ்சும் கூட்டம்)
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இஸ்லாமிய பாா்வையில் வியாபாரம்
ஹலால் மற்றும் ஹராம் ஒர் ஆய்வு
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவைகள்
அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன.
ஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, "வியாபாரிகளே" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து "வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்" என்றார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)
நபியவர்கள் வியாபாரிகளாக இருந்த எம்மிடம் வந்து "வியாபாரிகளே! பொய்யையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என "தபரானி"யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.
வியாபாரத்தின்போது தவிர்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள்
1. அளவை நிறுவையில் மோசடி செய்தல்
அளவை நிறுவையில் முறையாக நடந்து கொள்ளவேண்டுமென அல்லாஹ் கீழ் வரும் அல்குர் ஆன் வசனத்தின் மூலம் பணிப்புரை விடுக்கிறான்.
"நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள்; நிறுத்தால் சரியான எடையைக் கொண்டு நிறுங்கள்......."
அளவை நிறுவையில் மோசடி செய்வதை அல்லாஹ் விலக்கியுள்ளமையைக் கீழ்வரும் அல்குர் ஆன் வசனத்திலிருந்து தெளிவாக விளங்க முடியும்.
அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும்போதும்; நிறுத்துக் கொடுக்கும்போதும் குறைத்துவிடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்த நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன் (விசாரணைக்காக) நிற்பர். (83: 1 - 6)
விற்றல், வாங்கல் நடவடிக்கைகளில் விட்டுக்கொடுத்து நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.
"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக" என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)
2. அபகரிக்கப்பட்ட, திருடப்பட்ட பொருட்களை வாங்குதல்
ஒருவர் மர்ரொருவரிடம் இருந்து நியாயமற்ற முறையில் பெற்ற ஒரு பொருளை விற்பாராயின் அதனை வாங்குவது ஹராமானதாகும்.
"எவர் திருடப்பட்ட ஒரு பொருளை அது திருடப்பட்ட பொருள்தான் என அறிந்திருதும் வாங்குவாராயின் அவரும் அதன் பாவத்திலும் குற்றத்திலும் பங்கேற்றவராவார்". (அல் பைஹகீ)
அவ்வாறே மதுபானம் தயாரிப்பதற்காகத் திராட்சையை வாங்குபவருக்கு அதனை விற்பது ஹராமானதாகும். மேலும் குழப்பவதிகளுக்கும் விஷமிகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதும் கூடாது. இவ்வாறு ஒரு ஹலாலான பொருளாயினும் அதனை ஒரு ஹராத்தைச் செய்வதற்குப் பயன்படுத்துவோருக்கு விற்பது விலக்கப்பட்டதாகும்.
3. வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்தல்
அதிகமாக சத்தியம் செய்வது அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைப்பதாக அமைவதுடன் நுகர்வோரை ஏமாற்றுவதற்கான வழியாகவும் அமைய முடியும். இதனாலேயே நபியவர்கள் இதைப் பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தடுத்தார்கள்.
"சத்தியம் செய்வது பண்டத்திற்கு கிராக்கியை ஏற்படுத்தினாலும் 'பரக்கத்'தை அழித்துவிடும்" (புஹாரி)
"நிச்சயமாக வியாபாரிகளே பாவிகள்" என நபியவர்கள் குறிப்பிட்ட போது "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி இருக்கிறான் அல்லவா" என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். எனினும், அவர்கள் சத்தியம் செய்து பாவம் செய்கின்றார்கள். பேச்சில் பொய் சொல்கிறார்கள்" என்று கூறினார்கள். (அஹ்மத்)
4. பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடல்
பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடுவதைச் சில அறிஞர்கள் அனுமதித்தாலும் அது விரும்பத்தக்கதல்ல என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
"நீங்கள் பள்ளிவாசலில் விற்பவரையோ வாங்குபவரையோ கண்டால், 'அல்லாஹ் உனது வியாபாரத்தை இலாபகரமானதாக் அமைக்காதிருக்கட்டும்' என அவனுக்குக் கூறுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
ஜும்மாவுக்காக அதான் சொல்லப்பட்டதன் பின் வியாபாரம் செய்வது ஹராமாகும். இமாம் அஹ்மத் போன்ற சில அறிஞர்கள், 'அவ்வேளையில் நடைபெற்ற வியாபாரம் செல்லுபடியாகாது' என்று கூறுகின்றனர்.
5. விலைக்கட்டுப்பாடு - அத்தஸ்ஈர்
வாங்குவோர், விற்போர் ஆகிய இரு தரப்பினதும் நலனைக் கருத்திற்கொண்டு பொருட்களுக்கு ஒரு குறித்த விலையை நிரணயிப்பதே நடைமுறையில் விலைக்கட்டுப்பாடு என வழங்கப்படுகிறது. சில நபிமொழிகளில் இச்செயற்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் சில மனிதர்கள் நபியவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! பண்டங்களின் விலை அதிகரித்து விட்டது. எனவே, விலையைக் கட்டுப்படுத்துங்கள்" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள் "விலையை நிர்ணயிப்பவனும் ரிஸ்க்கை சுருக்குபவனும் விரித்துக் கொடுப்பவனும் வாழ்க்கை வசதிகளை அளிப்பதும் அல்லாஹ்வே. உண்மையாக, உங்களில் எவரும் உயிரிலோ பொர்ருளிலோ இழைக்கப்பட்ட ஓர் அநீதிக்காக என்னிடம் கோராத நிலையில் நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)
இந்நபிமொழியை ஆதாரமாக வைத்து அரசு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது கூடாது என்ற கருத்தை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், அது அநீதியாக அமைவதோடு பொருளாதார நடவடிக்கைகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அமையும். நுகர்வோர் நலன் பேணப்பட வேண்டியது போலவே வியாபாரிகள் நலனும் பேணப்பட வேண்டும். விலைக்கட்டுப்பாட்டின் காரணமாக பொருட்கள் சந்தையிலிருந்து மறைய இடமுண்டு. இதனால் விலேய்யேற்றம் ஏற்படலாம். இது ஏழைகளைப் பாதிக்கும். ஆனால், செல்வந்தர்களோ கூடிய விலையில் கறுப்புச் சந்தையில் பொருட்களைப் பெற்றுக் கொள்வர்.
பொதுவாக விலைக்கட்டுப்பாடுக்கு இஸ்லாத்தில் அனுமதி ஈல்லாவ்விடினும், முழுச் சந்தையும் பாதிப்படையும் வியாபாரிகள் கூடிய அளவில் நியாயமற்ற முறையில் நடக்க முற்பட்டால் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பதுக்கலைத் தடுக்கவும் அநீதியை நிறுத்தவும் அரசு தலையிடும்; விலைக்கட்டுப்பாடும் அனுமதிக்கப்படும். இச்சந்தர்ப்பங்களில் விலைக்கட்டுப்பாட்டை அனுமதிக்கலாம் எனது இமாம் மாலிக் மற்றும் சில ஷாஃபிஈ அறிஞர்களின் கர்ருத்தாகும்.
6. பதுக்கல் - அல் இஹ்திகார்
விலையேற்றம் கருதிப் பண்டங்களைப் பதுக்குவது ஹராமாகும். பேராசையும் பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தீய செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் நாம் அறிந்துள்ளோம். இவற்றைக் கருத்திற்கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பின்வரும் நபிமொழிகள் இதற்கு சான்று பகர்கின்றன.
1. "பதுக்கியவன் பாவி" (முஸ்லிம், அபூதாவூத்)
2. "உணவுப் பொருட்களை 40 நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும்
அவானை விட்டும் நீங்கிக் கொள்கிறான்." (அஹ்மத், அல்ஹாகிம்)
3. "பதுக்கல் செய்பவ்வனே மிகக் கெட்ட அடியானாவான். வ்விலை இறக்கத்தைக் கேட்டால் அவன் கவலைப்படுகிறான்.
வில்யேற்றத்தைக் கேள்வியுற்றால் மகிழ்ச்சியடைகிறான்." (றஸீன்)
அனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவை. பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர்.
அவையாவன:
1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும் அவனது பராமரிப்பிலிருப்போரினதும் ஒரு வருடத்தேவையின் அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒரு வருடத்துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.
2. குறித்த பொருளின் மீது மக்களுக்குள்ள அத்தியாவசியத் தேவையைக் கருத்திற் கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில் பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.
3. பதுக்கப்பட்ட பொருளின் மீது மக்களுக்குத் தேவையான வேளையில் பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக, பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து மக்களுக்கு அதன் மீது தேவையில்லாத போது அதனைத் தேக்கி வைப்பதும் சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்டதல்ல. ஏனெனில், இதனால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எத்தகைய பொருளைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ, உற்பத்திகளைய்யோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான் ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப்பொருட்களில் மாத்திரமே பதுக்கள் ஹராமானதாகக் கொள்ளப்படும். மற்றும் பல அறிஞர்கள் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) அனைத்துப் பண்டங்களிலும் பதுக்கள் ஹராமானதாகும் எனக் கூறுகின்றனர்.
7. வட்டி - (அர் ரிBபா)
வட்டி சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது ஹராமானதாகும். அல்குர் ஆன் வட்டி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
"விசுவாசிகளே! நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியதுபோக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டுவிடுங்கள்"
"இவ்வாறு நீங்கள் நடந்துகொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும்யுத்தம் செய்யச் சித்தமாகிவிடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியமைக்காக மனம் வருந்தி ) மீண்டிவிட்டால் உங்கள் செல்வத்தின் அடிப்படைத் தொகை உங்களுக்குரியது. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்கள் அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (2: 278, 279)
"ஓர் ஊரில் வட்டியும் விபச்சாரமும் பரவிவிட்டால் அவ்வ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தங்கள் மீது இறக்கிக் கொண்டோராவர்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம்)
"அல்லாஹ் வட்டி உண்பவனையும், அதனை உண்ணக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சியாக இருப்போரையும், அதனை எழுதுபவனையும் சபித்துள்ளான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத், திர்மிதி)
இஸ்லாத்தில் மட்டுமன்றி முன்னைய வேதங்களான யூத, கிறிஸ்தவ வேதங்களிலும் தடை செய்யப்பட்டே இருந்தது.
அதேவேளை, வட்டியின் வகைகளை நோக்கும்போது அதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. ரிbபா - அந் நஸீஆ
2. ரிbபா - அல் பழ்ல்
ரிbபா - அந்நஸீஆ
ரிbபா - அந்நஸீஆ என்பது கடன் கொடுத்தவர் கடன் பெற்றவ்ரிடமிருந்து கால தாமதத்திற்கான பிரதியீடாக பெறக்கூடிய தீர்மானிக்கப்பட்ட மேலதிகத் தொகையைக் குறிக்கும்.
ரிbபா - அல் பழ்ல்
ரிbபா - அல் பழ்ல் என்பது குறைந்த பணத்தைக் கூடிய பணத்திற்கும் குறைந்த உணவைக் கூடிய உணவிற்கும் கைமாற்றிக் கொள்வதைக் குறிக்கும்.
முதலாவது வகையைப் போன்றே இரண்டாவது வகை வட்டியும் ஹராமாகும். இதுவும் உண்மையான வட்டிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் விலக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். "ஒரு தங்க நாணயத்தை இரண்டு தங்க நாணயத்திற்கும், ஒரு வெள்ளி நாணயத்தை இரண்டு வெள்ளி நாணயத்திற்கும் விற்காதீர்கள். ஏனெனில், நான் வட்டியையிட்டும் அஞ்சுகிறேன்." (முவத்தா மலிக்)
ஆறு பொருட்களிலிருந்து இவ்வகை வட்டியைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளதை ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது. தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தப்பழம், உப்பு என்பனவே அந்த ஆறு பொருட்களுமாகும்.
"தங்கத்திற்குத் தங்கமும், வெள்ளிக்கு வெள்ளியும், உப்புக்கு உப்புமாக சம அளவில் உடனுக்குடன் கைமாறிக் கொள்ள வேண்டும். மாறாக அளவைக் கூட்டினால் அல்லது அளவைக் கூட்டுமாறு கூறினால் பெற்றவர், கொடுத்தவர் ஆகிய இருவரும் வட்டியில் ஈடுபட்டோராவர்." (புஹாரி)
ஹதீஸ்களில் குறிப்பாக இந்த ஆறு பொருட்கள் மாத்திரம் கூறப்பட்டுள்ளமைக்குக் காரணம் யாதெனில், இவை மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக அமைந்துள்ளமையே ஆகும். தங்கமும் வெள்ளியும் கொடுக்கல் வாங்கல் ஊடகமாகவும் விலைகளுக்கான அளவுகோல்களாகவும் காணப்படுகின்றன. ஏனைய நான்கும் பிரதான உணவுப் பொருட்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் வட்டி இடம்பெறுவதானது மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமையும். எனவே, மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே குறிப்பாக இவற்றை மேலதிகமாகப் பெறுவது விலக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி அடங்காத விலையைத் தீர்மானிக்கக் கூடியவையும் இதில் அடங்கும். (Eg:- பணம்)
எனவே தங்கம், வெள்ளி போன்றவற்றையோ அல்லது கோதுமை போன்றவற்றையோ அவற்றின் இனத்தைச் சேர்ந்தவற்றுடன் மாற்றும் போது 2 நிபந்தனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
1. இரண்டும் சம அளவாக இருத்தல்:
இங்கு ரகத்தையோ தரத்தையோ கவனத்திற் கொள்ளக் கூடாது. 1Kg சம்பா அரிசியை 1 1/2Kg நாட்டு அரிசிக்கு மாற்றிக் கொள்வது கூடாது. அது வட்டியாக அமையும். இதே நடவடிக்கையை ஹலாலாக அமைத்துக் கொள்ள வேண்டுமாயின் முதலில் நாட்டரிசியின் சொந்தக்காரர் அதனை சம்பா அரிசியின் சொந்தக்காரரிடம் பணத்திற்கு விற்க வேண்டும். பின்னர், அப்பணத்தைக் கொடுத்து சம்பா அரிசியை வாங்க வேண்டும். இங்கு விலை வித்தியாசமாக அமைவது பாதிப்பை ஏற்படுத்தாது.
2. பண்டமாற்றத்தின் போது ஒன்றைக் கொடுத்து மற்றையதை தாமதப்படுத்திக் கொடுக்கக் கூடாது. மாறாக உடனுக்குடன் கைமாற்றிக் கொள்ள வேண்டும்.
இரு பண்டங்களும் இனத்தில் வேறுபட்டு நோக்கத்தில் ஒத்திருந்தால், அளவு வித்தியாசம் ஹராமாகாது. ஆனால், இங்கும் கால தாமதம் கூடாது. தங்கத்திற்கு வெள்ளியை மாற்றும் போது தவணையிடாது உடனுக்குடன் கைமாற்றிக் கொள்வது நிபந்தனையாகும். ஆனால், அளவில் வித்தியாசம் இருப்பது தவறல்ல. இங்கு குறைந்த தங்கத்துக்குக் கூடிய வெள்ளியைப் பெறலாம். இவ்வாறே கோதுமையையும் மாற்றிக் கொள்ளலாம்.
கைமாறும் இரு பண்டங்களும் இனம், நோக்கம் இரண்டிலும் வேறுபட்டால் குறித்த இரு நிபந்தனைகளும் அவசியமற்றதாகும்
மேலும், தங்கம், வெள்ளி, பிரதான உணவுப் பொருட்கள் போன்றவை தவிர்ந்தவற்றில், அளவு வித்தியாசமோ கால தாமதமோ பிழையானதல்ல. Eg:- ஓர் ஆட்டை 2 ஆடுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
8. அல் ஈனா
இது ஒரு ஹராமான வியாபார அமைப்பைக் குறிக்கும். இது வியாபாரமாகத் தோன்றினாலும் அடிப்படையில் வட்டியாகவே காணப்படுகிறது. பணம் தேவைப்படும் ஒருவர் ஒரு பண்டத்தைத் தவணையிட்டு குறிப்பிட்ட விலையில் வாங்குவார். பின்னர் அப்பண்டத்தை எவரிடம் இருந்து வாங்கினாரோ அவருக்கே குறைந்த விலையில் கைக்காசுக்கு விற்றுப் பணத்தை பெற்றுக் கொள்வார். பின் குறித்த தவணையில் குறித்த விலையைச் செலுத்துவார். இவ்வியாபார அமைப்பை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் வேறு சில அறிஞர்களும் அனுமதித்துள்ளனர். ஆனால், ஏனைய மத்ஹப்கள் இதை ஹராமானதாகக் கொள்கின்றன.
உயிரிலும் மேலான ஷரிஅத்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வெள்ளிக்கிழமை கண்ணாடி உடைவது !!
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை கலா செய்யவேண்டுமா ??
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வயதை அதிகப்படுத்தும் அமல்கள்
ஹழ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
ஆயுளில் பரக்கத்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பள்ளிவாசல்களும் நாமும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அட்டாச் பாத்ரூமில் ஒழு செய்யலாமா ??
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மக்தப் மதரஸாக்கள் இல்லையென்றால் !!
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மூன்று குழந்தைகள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பாகப்பிரிவினையில் பாகுபாடா ??
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மேன்மக்களின் பண்பாடு
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
கனவின் விளக்கம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
திக்ரின் சிறப்பு
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
குற்றவியல் சட்டங்களை ஏற்பதில் முஸ்லீம்களுக்கு தயக்கமா
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இறந்த மகனின் புகைப்படத்தை அலமாரியில் வைத்துக்கொள்ளலாமா ?
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மக்களாட்சி
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மறதி
ஹழ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
இறந்த மகனின் புகைப்படத்தை அலமாரியில் வைத்துக்கொள்ளலாமா ?
ஹழ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
மறைக்கப்பட்ட வரலாறு
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
யார் இந்த அஹமதிய்யாகள் ?
ஈமானை பறிக்கும் சூழ்ச்சி தொடர்பாக
யார் இந்த காதியானிகள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வித்ரு தொழுதவுடன் தூங்கிவிட்டு
பின்பு தஹஜ்ஜத் தொழலாமா ??
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவுநெருங்கி வரும் ஆபத்து
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவுயூத சூழ்ச்சி
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவுபெருமானார் ஸல் அல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறிய ஐந்து உபதேசங்கள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவுஉறவு முறைகளை பேணுவோம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவுதேவ்பந்த் உலமாக்கலும் இஸ்லாமிய எழுச்சியும் - PART 1
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
தேவ்பந்த் உலமாக்கலும் இஸ்லாமிய எழுச்சியும் - PART 2
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இமாமுல் அஃலம் அபூ ஹனிஃபா பற்றியும், மத்ஹபுகளை ஏன் பின்பற்றவேண்டும் என்பது பற்றியும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பேணவேண்டிய விஷயங்கள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அவசரப்படாதீர்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
உயர்வு தரும் கல்வி
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
சமூக ஒழுக்கங்கள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இளைஞர்களே உங்களைத்தான்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இஸ்திகாமத் உறுதியான தன்மை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
சூழ்ச்சியை வெல்வோம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மரணத்திற்கு முன்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம்களின் கடமை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
தாகத்தை அகற்ற அல்லாஹ்வுக்காக உதவுங்கள் தண்ணீர்
அல்லாஹ்வின் உன்னத அருட்கொடை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
புத்தாண்டு சிந்தனை ஹிஜ்ரி
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அமானிதம் என்ற கட்டளை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
Maranam - மரணம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
நம்பிக்கை இழக்கவேண்டாம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
கோபமும் அதன் விளைவுகளும் Koobamum Athan Vilaivuhalum
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
திருக்குர்ஆன் சிறந்த சமுதாயம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வட்டி அதன் விளைவு
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
துல்ஹஜ் சிறப்புகள் - அமல்கள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வாய்ப்பை தவறவிடாதீர்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அரசியல் POLTICIS
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
குழந்தைகள் தத்தெடுப்பது குறித்து
இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன ?
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இஸ்லாமிய பார்வையில் வளர்ப்பு பிள்ளை
உங்களின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கேள்வி பதில்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், பதிலளிக்கும் முறை மிக நன்றாகவும் உள்ளது.
எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் அதற்குத் தெளிவான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
தத்தெடுக்கப்படும் குழந்தைகள் அவர்களின் உண்மையான தந்தை பெயரிலேயே அறியப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய விதிமுறை என்று தெரியும். தந்தை யாரென்று அறியப்படாத ஒரு (திருமணமாகாத) பெண்ணுக்குப் பிறந்த குழந்தை, அப்பெண்ணின் எதிர்காலம் கருதி குழந்தை பிறந்த நிமிடம் முதல் அது வேண்டாம் என அப்பெண்ணால் கைவிடப்பட்ட நிலையில் இறைவனின் கருணையினால் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது.
பிறந்த நிமிடம் முதல் எங்களிடம் இக்குழந்தை இருக்கும் நிலையிலும், உண்மையான தந்தை யாரென்று அறியப்படாத நிலையிலும், பெற்ற தாய்க்கும் வேண்டாத நிலையில் நாங்கள் பால் கொடுத்து வளர்த்தினால் அதனை எங்கள் குழந்தையாக வளர்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றதா ?
அல்லாஹ் உங்களின் செயல்களுக்கு தக்க கூலிகளை வழங்கிடுவானாக. நம் அனைவரையும் நேர் வழியில் இறுதிவரை உறுதியுடன் இருக்கச் செய்வானாக. ஆமீன்.
தெளிவு:
அன்புச் சகோதரருக்கு, வ அலைக்கும் ஸலாம் (வரஹ்) சத்தியமார்க்கம்.காம் இணையத் தளத்திற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளில் இன்னாருக்கு இன்னார் வாரிசு என இறைவன் படைத்திருக்க, உண்மையான தந்தை, மகன், மகள் உறவை மாற்றுவது இறைவனின் அதிகாரத்தில் கைவைப்பதாகும். இறைவனுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தில் மனிதன் தலையிட்டு இங்குப் படைப்பின் வம்சா வழியைப் பொய்ப்பிக்கிறான் என்று இச்செயலுக்குப் பொருள் ஆகும். காட்டாக, ஹஸன் என்பவருக்குப் பிறந்த உஸ்மான் என்ற குழந்தையை அப்துல் காதர் என்பவர் தத்தெடுக்கிறார் எனக் கொள்வோம். ஹஸனின் மகன் உஸ்மான் என்று இறைவன் படைத்திருக்க, அப்துல் காதரின் மகன் உஸ்மான் என்று மனிதர்கள் மாற்றுவதை இஸ்லாம் கண்டிக்கிறது.
"யார் தம் தந்தை அல்லாத ஒருவரை - அவர் தம் தந்தை அல்லர் என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று கூறுவாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6766, முஸ்லிம் 115)
மேற்காணும் நபிமொழி, மரியாதையின் நிமித்தம் பெரியோர்களை அப்பா என்று வெறும் வார்த்தையாக அழைப்பதைத் தடுக்கவில்லை. மாறாக, இரத்த சம்பந்தமான உறவு ஏற்பட்டு விட்டது போல் தந்தை அல்லாத ஒருவரை, அவர் தந்தை அல்லர் என்று தெரிந்து கொண்டே தந்தை என்று குறிப்பிட்டுக் கூறுவதைத் தடை செய்கிறது.
இந்நபிமொழியின் அடைப்படையில் தனக்குப் பிறக்காத மகனை, அவர் தன் மகன் இல்லை என்று தெரிந்து கொண்டே மகன் என்று கூறுவதும் கண்டிக்கத்தக்கது.
இனி திருமறை வசனத்தைப் பார்ப்போம்.
"எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்." (அல்குர்ஆன் 033:004)
இந்த இறைவசனம், "எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை" எனத் துவங்கி, "உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை." எனத் தொடர்கிறது.
இன்னும்,
"உங்களில் மனைவியரைத் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றெடுத்தவர்களைத் தவிர மற்றவர் அவர்களின் தாயாக ஆக முடியாது" (அல்குர்ஆன் 058:002)
தாய் என்றால், பிள்ளையைச் சுமந்து பெற்றெடுத்திருக்க வேண்டும் அவர் தான் தாய் என்ற அந்தஸ்தைப் பெற முடியும். வெறும் வார்த்தையால் மனைவியைத் தாய் என்று சொல்லி விட்டதால் அவர் தாயாகி விடமாட்டார் .
இவ்வாறு கூறுவது,
"வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர்'' (அல்குர்ஆன் 058:002) என்ற இறைக் கூற்றை மெய்ப்பிக்கிறது.
இங்குக் குறிப்பிடப்பட்ட இறைவசனங்களிலிருந்து பெறும் படிப்பினையாவது:
தாய், தகப்பன் என்றால் அவர்கள் நம்மைப் பெற்றெடுத்திருக்க வேண்டும். மகன், மகள் என்றால் அவர்கள் நாம் பெற்றெடுத்தப் பிள்ளைகளாக இருக்க வேண்டும். சகோதரன், சகோதரி என்றால் அவர்கள் உடன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சித்தப்பா, மாமி என்றால் தந்தையுடன் பிறந்திருக்க வேண்டும். சித்தி, தாய் மாமன் என்றால் தாயுடன் பிறந்திருக்க வேண்டும். இவ்வாறு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளே இறைவனின் படைப்பில் உண்மையான உறவுகள்.
இரத்த சம்பந்தப்பட்ட உறவில், உடன் பிறந்த சகோதரி திருமணம் செய்து கொள்ள விலக்கப்பட்டவராவார். இதே தகுதியில் உடன் பிறவாத, ஒரே தாயிடம் பால் குடித்திருக்காத, வேறொரு பெண்ணைச் சகோதரி என்று சொல்லுவதால் அந்தப் பெண் மணமுடிக்க விலக்கப்பட்டவராக ஆகி விடுவதில்லை. சகோதரி என்று குறிப்பிட்டதால் மணமுடிக்க ஆகாதவர் என்று எண்ணுவது இறைவன் அனுமதித்ததை மறுப்பதாகும் என்பதை நினைவில் கொண்டு எச்சரிக்கை பெற வேண்டும்.
இப்போது 033:004வது வசனம் தொடர்ச்சியாக, ''உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் (சொந்தப்) பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை'' என்றும் கூறுகிறது.
பெற்றெடுத்தவளைத் தவிர மற்ற எவரும் தாயாக ஆக முடியாது என்பது போல் தத்தெடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் சொந்தப் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை என இறைவன் கூறுகிறான். அதாவது, வளர்ப்புப் பிள்ளைகள் பெற்றெடுத்தப் பிள்ளைகளாக ஆக முடியாது என்பது இங்கு ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயம். இஸ்லாம் அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதை ஆதரிக்கவில்லை என்று விமர்சிப்பவர்கள் இந்த வசனத்தைத் தவறாக விளங்கியே விமர்சிக்கிறார்கள்.
ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியர்க்கு அவர்கள் பெற்றெடுத்த ஒரு பெண் குழந்தை இருக்குமெனில் இந்த இருவரிடையே அண்ணன் தங்கை என இரத்த சம்பந்தப்பட்ட உறவு இல்லை. இவர்கள் பருவமடையும்போது இருவரும் மணம் புரிந்து கொள்ள நாடினால், இஸ்லாமிய அடிப்படையில் அது ஆகுமானதாகும் என்பதை மறுக்கக்கூடாது, இருவரும் ஒரே தாயிடம் பால் குடித்திருந்தாலே தவிர. அவ்வாறு மறுப்பவர்கள் இறைவன் ஹலாலாக்கியதை ஹராமாக்குகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது, தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியரின் குடும்பத்தாரோடு வளர்ப்புப் பிள்ளைக்கு எவ்விதத்திலும் இரத்த உறவு இல்லை. அதனால் சித்தி, தாய்மாமன், மாமி, சித்தப்பா போன்ற மேலே குறிப்பிட்டுள்ள இரத்த உறவுகள் ஏற்படா. அதாவது இங்கு மஹரம் ஒரு போதும் ஏற்படாது. குழந்தை பிறந்த குடும்பத்தில் தான் இரத்த உறவுகளும், மஹரமும் ஏற்படும்.
இவ்வளவு விஷயங்களையும் உள்ளடக்கியே, "உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை" என்ற வசனம் அமைந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து,
"இது உங்கள் வாய்களால் கூறும் (வெறும்) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்" என தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் என்று சொல்வது (வெறும்) வார்த்தைதானே தவிர நீங்கள் அவ்வாறு சொல்வதில் எந்த உண்மையும் இல்லையென இவ்வசனம் நிறைவடைகிறது.
அடுத்த வசனம்:
"அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ருடனே சேர்த்து அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்" (அல்குர்ஆன் 033:005)
மேலதிக விரிவுரை தேவையில்லை எனும் அளவுக்கு இந்த வசனம் தெளிவாக அமைந்திருக்கிறது. கேள்வி கேட்ட சகோதரர், "தந்தை யாரென அறியப்படாத நிலையில் எங்கள் குழந்தையாக நாங்கள் கொள்ளலாமா? என்ற ஐயத்திற்கு நேரடி விளக்கமாக ''அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் மார்க்க சகோதரராவர்'' என்று இறைவசனம் தெளிவுபடுத்துகிறது.
இந்த இறைவசனத்தின் பின்னணியைச் சற்று நோக்குவோம்:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன் தம்மிடம் அடிமையாக இருந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை விடுதலை செய்து, பின்னர் அவரை வளர்ப்பு மகனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். "எனக்கு ஸைது வாரிசாவார், ஸைதுக்கு நான் வாரிசாவேன்" என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருந்தார்கள். நபித்துவ வாழ்விற்கு முன்பு நடந்தது இச்சம்பவம். நபித்துவம் பெற்று மதீனா வந்த இரண்டாம் ஆண்டில் மேற்கண்ட வசனங்கள் அருளப்படும் வரை, வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளையாகக் கருதி, வளர்ப்புத் தந்தையின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாக வருவதும் நடைமுறையில் இருந்தது. 033:005வது வசனம் அருளப்பட்ட பின்னர் இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டது.
"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் சேர்த்து அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (033:005) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மது (முஹம்மதின் மகன் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்" (புகாரி, 4782)
வளர்ப்புப் பிள்ளை வாரிசாக்கப்பட்டும், வளர்ப்புத் தந்தையின் பெயரைச் சேர்த்தே வளர்ப்பு மகன் அழைக்கப்பட்டும் வந்த அறியாமைக் கால வழக்கத்தைத் தடை செய்து, தத்தெடுக்கும் சுவீகாரப் புத்திரர்களை வளர்ப்புப் பிள்ளை என்ற எண்ணத்தில் மகன் என அழைத்துக் கொள்ள இறைவன் அனுமதிக்கிறான். இதற்கு மாறாக, வளர்ப்புப் பிள்ளையை சொந்த மகனாகவோ, மகளாகவோ உள்ளத்தால் தீர்மானிப்பதைக் குற்றமென இறைவசனம் கூறுவதால் அதிலிருந்து விலகி விடுவதே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும்.
சுவீகாரப் பிள்ளைகள்:
எடுத்து வளர்க்கும் சுவீகாரப் பிள்ளைகளை உங்களுடைய வளர்ப்பு பிள்ளையாக மட்டுமே வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு. அக்குழந்தை உங்களிடம் பால் குடிக்கும் பருவத்தில் பால் குடித்திருந்தால் அவர் உங்கள் பால்குடிப் பிள்ளையாகவும், உங்களின் சொந்தப் பிள்ளைகளுக்குப் பால்குடி சகோதரராகவும் ஆவார். ''உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும்,'' (004:023) என பால்குடி உறவுகளையும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
மாறாக, எடுத்து வளர்க்கும் குழந்தைக்கு வளர்ப்புத் தந்தை ஒருக்காலும் சொந்தத் தந்தை ஆக முடியாது. வளர்க்கும் பிள்ளையின் தந்தையின் பெயர் தெரியா விட்டாலும் சுவீகாரப் பிள்ளைக்கு வளர்ப்பவர் தந்தை ஆக முடியாது என இறைவசனங்கள் வலியுறுக்கிறது. இதை நன்கு நினைவில் கொள்வது அவசியம்.
உள்ளங்கள் சரி காண்பதைத் தவிர்ப்போம், இறைவழி நடப்போம்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
குறிப்பு:
அரசுப் பதிவுகளிலும், பள்ளிச் சான்றிதழ்களிலும் குழந்தையின் தந்தை பெயரை அறிந்திருந்தால் அதைக் குறிப்பிடலாம். தந்தையின் பெயர் அறியாத நிலையில் எடுத்து வளர்ப்பவர், காப்பாளர் - கார்டியன் எனத் தம்மைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்..
இஸ்லாமிய பார்வையில்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அட்சி முறை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
சட்டம் law
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மாறாத இஸ்லாம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
எட்டு விதமான சொர்க்கங்கள்
முதலாவது சொர்க்கம் - ஜன்னத்துல் பிர்தௌஸ்
1) போதும் என்ற மனம் கொண்டவர்கள்.
2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள்.
3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்.
4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள்.
இரண்டாவது சொர்க்கம் - தாருஸ் ஸலாம்
1) அனாதைகளை ஆதரிப்பவர்கள்.
2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.
3) ஸலாம் சொல்பவர்கள்.
4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள்.
மூன்றாவது சொர்க்கம் - ஜன்னத் அத்னு
1) பேச்சை குறைப்பவர்கள்.
2) தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்.
3) உணவை குறைவாக உண்பவர்கள்.
4) மக்களின் தொடர்புகளை குறைத்து(இறை வணக்கம் செய்பவர்கள்.
நான்காவது சொர்க்கம் - ஜன்னத்துல் நயிம்
1) தானம் தர்மம் செயபவர்கள்.
2) நன்றி செலுத்துபவர்க.
3) சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்.
4) நற்குணம் உடையவர்கள்.
ஐந்தாவது சொர்க்கம் - தாருல் குல்து
1) திட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்.
2) அடுத்தவர்களை கேவலப்படுத்தாதவர்கள்.
3) யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்.
4) எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.
ஆறாவது சொர்க்கம் - தாருல் ரைய்யான்
1) பள்ளிவாசலை கட்டுபவர்கள்.
2) தொழுகையைக் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்.
3) துஆ மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்.
4) மார்க்கக் கல்வியை வழங்குபவர்கள்.
ஏழாவது சொர்க்கம் - மக்ஆது சித்தீகீன்
1) நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள்.
2) ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்.
3) கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் வாங்குபவர்கள்.
4) வாங்கிய கடனை உரிய காலத்தில் அழகியமுறையில் திருப்பி செலுத்துபவர்கள்.
எட்டாவது சொர்க்கம் - ஜன்னத்துல் மஃவா
1) விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்.
2) பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்.
3) அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்.
4) ஆலிம் மற்றும் அறிஞர்களை கண்ணியப்படுத்து பவர்கள்.
யா அல்லாஹ் எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், எங்கள் சந்ததிகளையும், சொந்த பந்தங்களையும், மூஃமினான அனைவர்களுக்கும் இந்த அருள் மிக்க பாக்கியத்தை தந்தருள்வாயாக!
ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! யா ரப்புல் ஆலமீன்
அநியாயம் செய்யாதீர்கள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
புத்தாண்டு new year
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அரசாங்கம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அமானிதம் என்ற கட்டளை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
குர்பானி Qurabani
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
உறவுகளை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
உயர்வு தரும் வணிகம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
உலகப் பெருந்துயரும் முஸ்லிம்களின் பொருப்பும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மஸ்ஜித் அல் அக்சாவின் புனிதம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
மானமும் ரோசமும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வறட்சியும் தீர்வும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
அநியாயம் செய்யாதீர்கள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
கெட்டகுணம் புறம் பேசுதல்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
நரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள
இன்றைய முஸ்லிம் பெண்கள் தாம் என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவதைப் பார்க்கலாம். அப்படி பேசக்கூடிய பேச்சுக்களில் பல வார்த்தைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வார்த்தைகளாக இருப்பதையும் காணலாம்.
சில காரியங்களைச் செய்தால் அதனால் தீங்கு ஏற்ப்படும் என்றும் நம்புகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் தர்மமோ, அல்லது இரவலாக பொருளோ தந்தால் வறுமை ஏற்ப்படும் என்றும் நம்புகின்றனர். இவை சரியா என்று பார்ப்போம்.
இருட்டு வந்து விட்டால் இரவல் கிடையாது...
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் திடீரென்று தமக்குத் தேவைப்படும் ஒரு பொருளைக் கேட்கின்றனர். பகலில் கேட்டால் கொடுக்கும் குணமுடையவர்கள் கூட மாலை நேரத்திலோ இரவிலோ கேட்டுவிட்டால் போதும், இவளுக்குக் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லை, நேரம் காலம் தெரியாம கேக்கரா பாரு! ஊசி, தண்ணீர், பணம், கேட்டால் மாலை நேரங்களில் கொடுக்கக் கூடாதுன்னு தெரியாதா! என்று கேட்கின்றனர். இதனால் தரித்திரம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் பணம் கொடுத்தால் நம்முடைய பரகத் (பணம்) அவங்களுக்குப் போய்விடும். அந்த நேரத்திலே தண்ணீர் கொடுத்தால் நமக்குக் கஷ்டம் வந்துவிடும் என எண்ணுகின்றனர்.
மாலை நேரத்தின் இறைவன் அல்லாஹ்!
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தான். வானம், பூமி, சூரியன், சந்திரன், காலை, மாலை, இரவு, பகல், அனைத்தையும் அவனே படைத்தான்.
''இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.'' (அல்குர்ஆன் 10:6)
''இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்” (என்றும் கூறுவீராக!)'' (அல்குர்ஆன் 3:27)
இந்த வசனத்தில் அல்லாஹ் இரவு, பகல் மாறி மாறி வருவது தன்னால் தான் என்று கூறுகிறான். இரவு நமக்கு எப்படி தீங்கு தரும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
துன்பம் தருவதும் அல்லாஹ்தான்!
''ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!'' (அல்குர்ஆன் 2:155)
''அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.'' (அல்குர்ஆன் 6:17)
மேற்கண்ட வசனங்களில் நமக்கு வறுமை, தரித்திரம், போன்ற எந்தத் துன்பம் வந்தாலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்று கூற வேண்டும். மாறாக இரவுக்கோ, அல்லது மாலை நேரத்திற்கோ, துன்பம் தரும் அதிகாரம் உண்டு என்று நம்புவது இணை வைக்கும் செயலாகும். அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனையோ, மண்ணையோ, பொருளையோ, நேரத்தையோ, கொண்டு வந்தால் அது நம்மை நரகில் தள்ளிவிடும்.அல்லாஹ் பாதுகாப்பானாக!
சமிக்கைகள் வரவு தருமா!
கண் துடித்தால் நல்லது நடக்கும், ஆறு விரல் உள்ள பிள்ளை பிறந்தால் பொருளாதாரம் பெருகும், கருநாக்கு இருந்தால் நல்லது, சிங்கப்பல் இருந்தால் யோகம், கரப்பான் பூச்சி இருந்தால் பரகத், உள்ளங்கை அரித்தால் வரவு வரும், சோத்து கற்றாலையை நடு வீட்டில் தொங்க விட்டு அது வளர்ந்தால் நாம் வளமோடு வாழ்வோம். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் பரவலாக நம் பெண்களிடத்தில் இருக்கின்றது.
இந்த வார்த்தைகளை உற்றுக் கவனித்தால் நாம் அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் நம் உடல் உறுப்புகளையும், பூச்சிகளையும், செடிகளையும், இணையாக்குகிறோம் என்பது புரிந்துவிடும்.
பொருளாதாரம் தருபவன் அல்லாஹ்
'தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.'' (அல்குர்ஆன் 17:30)
அல்லாஹ்தான் மனிதர்களுக்கு தேவையான எல்லா வசதி வாய்ப்புகளையும், தருவதாகக் கூறுகிறான்.
தன்னை இறைவனாக ஏற்க மறுத்தவர்களுக்கும் பொருளாதாரத்தை வாரி வழங்கியுள்ளான்.
''காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். "மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!'' (அல்குர்ஆன் 28:76)
''தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர்கூறினர்.'' (அல்குர்ஆன் 28:79)
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இறைவன் பொருளாதாரத்தை வாரி வழங்கியுள்ளான். சுலைமான் நபிக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று வேறு நபிமார்களுக்குச் செல்வங்கள் கொடுக்கப்படவில்லை.
"இம்மாளிகையில் நுழைவாயாக!'' என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். "அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை'' என்று அவள் கூறினாள். "நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்'' என்று அவள் கூறினாள்.'' (அல்குர்ஆன் 27:44)
''தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். "மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும்'' என்று அவர் கூறினார். ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.'' (அல் குர்ஆன் 27:16,17)
ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன்
''அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.'' (அல்குர்ஆன் 65:3)
''பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.'' (அல்குர்ஆன் 11:6)
அல்லஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''ஒரு முஃமின் அல்லாஹ்வை நம்பவேண்டிய விதத்தில் நம்பினால் அல்லாஹ் அவனுக்கு ஒரு பறவைக்கு உணவளிப்பதைப் போல உணவளிப்பான் அது காலையில் ஒட்டிய வயிற்றுடன் செல்கிறது. ஆனால் மாலையில் நிரம்பிய வயிறோடு தன் வீட்டிற்குத் திரும்புகிறது.'' (நூல் : திர்மிதி 2266)
அல்லாஹ்வை இறைவனாக ஏற்க மறுத்த காரூனுக்கும், இறைத்தூதரான சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், இன்னும் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் உணவு தருவதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் நாமோ நம் உடலில் ஒரு விரல் கூடுதலாக உள்ளதால் செல்வம் கிடைக்கிறது என்று சொல்லலாமா? நம் வீட்டில் பரக்கத்திற்கு காரணம் அல்லாஹ்வா! அல்லது சோத்து கற்றாலையா? அல்லாஹ் நம் மீது புரிந்து கொண்டிருக்கிற அருளை அனாவசியமாக மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுப் பேசலாமா? நம் உடலில் உள்ள உறுப்பினாலோ, வீட்டில் மாட்டப்படுகின்ற பொருளினாலோ, நமக்கு நல்லது நடப்பதில்லை. மாறாக அல்லாஹ்தான் உலகில் உள்ள அனைத்திற்கும் அளவில்லாமல் அருள் பாலிக்கிறான்.
இப்படி இருந்தால் அப்படி நடக்கும்
நகத்தில் வெள்ளைப் புள்ளி வந்தால் புத்தாடை வாங்கி தருவார்கள். கன்னத்தில் குழி விழுந்தவர்களும் இரட்டைச் சுழி உள்ளவர்களும் இரண்டு பொண்டாட்டிகளைக் கட்டுவார்கள் என்று கூறுகின்றனர். வீட்டில் கருப்பு எறும்பு வந்தால் அது சீறு கொண்டு வரும். அதாவது வீட்டில் விசேஷம் நடக்கும் என்று வருங்காலத்தை பற்றி நம்மில் பல பேசிவிடுகின்றனர். நாளை நடப்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்பதை மறந்து பேசுகின்றனர்.
''மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.'' (அல்குர்ஆன் 6:59)
''அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.'' (அல்குர்ஆன் 31:34)
நடந்து முடிந்தவைகளைப் பற்றி நம்மிடம் கேட்டால் சொல்லலாம். ஆனால் நடக்கக் கூடியவைகளைப் பற்றிக் கேட்டால் அதுபற்றி அல்லாஹ்வே அறிந்தவன் என்று கூறவேண்டும். ஏனென்றால் இனிமேல் நடக்க உள்ளதெல்லாம் மறைவானவை. அதை அல்லாஹ்வே அறிவான். ஆனால் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் பட்டென இரட்டைச் சுழிக்காரனும் கன்னத்தில் குழி விழுந்தவனும் ரெண்டு பொண்டாடி கட்டுவான் என்றும் இவர்களுக்கு யார் சொன்னது? அல்லாஹ்வா! அல்லது அல்லாஹ்வுடைய துதரா!
நாளைக்கோ அல்லது அடுத்த வாரத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ அல்லது அடுத்த வருடத்திலோ அல்லது மனிதனின் ஆயுளுக்குள்ளோ நடக்கலாம் என்று விளையாட்டுக்கும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்த மறைவான ஞானத்தை நாம் கையில் எடுத்த குற்றத்திற்கு ஆளாவோம்.
மவ்த் பற்றி நடக்கும் கூத்து
ஆந்தை கத்தினால் அது எந்தப் பகுதியில் கத்தியதோ அந்தப் பகுதியில் மரணம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். சனிப்பொணம் தனியே போகாது என்பார்கள். அதாவது சனிக்கிழமையில் இறந்த அவருக்காக இன்னொருவர் உயிர் போகும். அதைத் தவிர்க்க வேண்டுமானால் இறந்தவரை அடக்கம் செய்யும் இடத்திற்கருகில் கோழியோ, ஆடோ அறுத்து பரிகாரம் செய்தால் இன்னொருவர் உயிர் போகாது என்று நம்புகின்றனர்.
இறந்தவர்களின் வீட்டிற்குச் சென்று திரும்பும் போது போய் வருகிறேன் என்று கூறக்கூடாது என்கின்றனர். ஏனென்றால் இன்னொருவர் மரணம் அந்த வீட்டில் நடக்கலாம்.
மனிதனின் உயிரை கைபற்றுப்பவன் யார்?
"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 32:11)
அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி. இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம். (அல்குர்ஆன் 3:145)
இவ்வசனங்களில் அல்லாஹ்வே நம் உயிரைக் கைப்பற்றுவதாக கூறுகிறான். எனவே மரணங்களுக்கு கிழமையோ, ஆந்தையோ மற்றும் வேறு காரணங்களோ கூறினால் அது மறைமுகமான இணை வைப்பாகிவிடும். ஆதலால் இறந்தவர்கள் வீட்டிற்குச் செல்லும் போது இறந்தவருக்காக அதிகமதிகம் துஆ செய்வோம் .
தவறிப்போய் இணைவைப்பு வார்த்தைகள் வாயில் வர வேண்டாம்
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மேற்கண்ட வார்த்தைகளை விளையாட்டுக்குக் கூட சொல்லிவிட வேண்டாம். ஏன் என்றால் அல்லாஹ்விடத்தில் பாவங்களுக்கெல்லாம் பெரும் பாவமாக இருப்பது இணை வைப்புச் செயலாகும். அது போன்ற காரியங்களைச் செய்யாமல், சொல்லாமலும் உளத் தூய்மையோடு அல்லாஹ்வை வணங்கி வழிபடுவோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (6478)
சமூக சிந்தனை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
தூய்மையான உள்ளம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
நற்குணம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
இஸ்லாத்தின் சிறப்பு குணம் வெட்கம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டியது.
சட்டையில் போடும்பட்டன் எண்ணிக்கை குறையும்போதுஆண்"பொறுக்கி" என்ற பெயரையும்,
பெண்"மாடர்ன் கேர்ள்" என்ற பெயரையும்பெறுகிறார்கள்.....
வெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டியது.
வெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒன்று
வெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப்படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் .அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக நல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.
வெட்கப்படும் போது அந்த நபரின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு அவர் முகம் சிவப்பாக மாறுவதனை நாம் காண முடியும்.வெட்கப்படுவதின் செயல்முறை போது, அந்த நபரின் பரிவு நரம்பு விரிவடைவத்தின் காரணமாக இரத்தம் தோல் மற்றும் முகத்தில் ஒரு சிவப்பாக்குதல் விளைவாக, இரத்த நாளங்களின் வேலை அதிகரிக்கும்.
வெட்கப்படுவது பல காரணங்களால் ஏற்படலாம்.
காதல் சூழ்நிலைகளில் தொடர்புடையதாக இருக்கலாம் .வெட்கப்படும் போதுதான் பெண்களின் தோற்றம் காட்சிக்கு அழகாக இருக்கின்றது . வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த பாதுகாப்பு.வெட்கம், நாணம் கொள்வது பெண்களிடம் இருக்க வேண்டிய இயற்கைப் பண்பாகும்.
துணிவு இல்லாத போதும் வெட்கம் வர கால் நடுங்க உடலில் ஒரு மாற்றம் வரும்.பல பெண்கள் நிறைந்த கூட்டதில் தனியே ஒரு ஆண் நடந்து செல்லும் போது பெண்கள் தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்ற நினைப்புடம் கூச்சம் வந்து வெட்கம் வரலாம். இதே நிலை பல ஆண்கள் நிறைந்த கூட்டதில் தனியே ஒரு பெண் கடந்து செல்லும்போதும் ஏற்படும்.
மேடையில் பேசி பழக்கம் இல்லாதவருக்கும் இந்நிலை ஏற்படும். இந்த வெட்க நிலை இயல்பானது அதில் தவறுமில்லை. ஆனால் தவறான காரியங்களில் ஈடுபடுவோர் அந்த கீழ்மையான செயலுக்கு வெட்கப் படாமல் தொடர்ந்து அந்த செயலில் ஈடுபடுவதுதான் வேதனையானது. முதல் முறை அந்த செயல் செய்ய வெட்கப்பட்டோர் பின்பு அடுத்த முறை செய்வதற்கு வெட்கப்படமாட்டார்கள். இவர்களை மக்கள் வெட்கம் கெட்டோர் என்று சொல்வதனை நாம் அறிவோம்.
'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி) மதினாவாசியான ஒரு நபித்தோழர், தன் சகோதரர் அடிக்கடி வெட்கப்படுவதைக் கண்டித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள், அவரைக் கண்டிக்காதீர்கள் நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானின் (நம்பிக்கையில்) ஒரு பகுதி என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
பெண்களை கண்டால் பார்வையைத் தாழ்த்து ஆனால் வெட்கம் வேண்டாம்.
பெண்களுக்கு இஸ்லாம் ஒரு வரம்பைப் போடுகிறது.
1. பிற ஆடவரைக் கண்டால், பார்வையைத் தாழ்த்த வேண்டும்
2. ஆடைகளில் ஒழுங்கைப் பேண வேண்டும்
3. அந்நிய ஆண்களிடம் பேச்சில் நளினம் காட்டக் கூடாது
4. அந்நிய ஆணுடன் தனிமையில் இருக்கக் கூடாது
வெட்கப்படுவது ஒரு மனோவியாதிக்கு உட்பட்ட செயல். தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் முறை வேண்டாம் உன்னிடம் எதோ குறை உள்ளதாக என்று எண்ணி உன்னையே நீ தாழ்த்திகொள்ளாதே! உன்னிடம் குறை உள்ளதாக இத்தனை நாள் நீ எண்ணி இருந்தால் அதற்காக வெட்கப்படு. உன்னை காட்டிலும் கீழ் உள்ளவரை நினைத்துப் பார் . உடல் மாற்றம் ஏற்படுவது இயற்கை. தலை முடியில் நரை விழுந்துவிட்டதே! கட்டையான உயரத்தில் அதிலும் குறிப்பாக கருப்பாக உள்ளோமே என்பது உன்னை தாழ்வாக மதிப்பதால் வரும் வினைதான். சுவையும், ரசிக்கும் தன்மையும் மனிதனுக்கு மனிதன் மாறுபட்டது . வேண்டாம் இந்த மனக் கோளாறு . நம்மிடம் எல்லாம் உள்ளது இதனைக் கொண்டு எதனையும் செய்ய இயலும் என்ற உயர்ந்த நோக்கினை உன்னிடம் பொருந்திக்கொள் .வாழ்வது ஒரு முறை . வாழ்ந்து காட்டு. நல்லதை நாடு. வாழு. வாழ வழி விடு . இது போராடும் உலகம் . போராடும் பொழுது உனது உள் மனதில் உன் வெற்றிதான் உனக்கு முக்கியம். போரில் யார் முந்திக்கொள்கிறாரோ அவர்களுக்கே வெற்றி . முதல் வெற்றி அடுத்த வெற்றிக்கு ஊன்று கோல். பொருந்திகொள்ளும் வாழ்வே வாழ்வின் வெற்றியின் திறவுகோல் . ஒதுங்காதே ஒன்றிவிடு . நாம் நினைப்பது நடக்கும் என்பதில் நம்பிக்கை வை . உன்னைக் காட்டிலும் தாழ்ந்தவரை எண்ணி அமைதி அடை. உன்னை விட உயர்ந்தவரைக் கண்டு நம்மாலும் அவ்வாறு வர முடியும் என்ற எண்ணத்தில் வேகமாக விவேகமாக, காலம் தாழ்த்தாமல் செயல்படு .
புகழ் வந்த பெரியவரைக் கண்டால் ஓடி ஒளிவது அவரை கண்டு பேச வெட்கப்படுவது உனது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு.தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் உள நோய்கள் வர வாய்ப்பு உண்டாக்கிவிடும் அவருக்கு கிடைத்த புகழுக்கு நீயும் ஒரு காரணமாக இருக்கலாம். பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டு ஒதுங்கும் . நீ ஒதுங்காதே.
இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும் . அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும் . நேர்மையாக வாழும் நாம் ஏன் வெட்கப்படவண்டும் !
முயற்சி திருவினையாக்கும்.கடமையினை செய், மற்றதனை இறைவனிடம் விட்டு விடு. சுலபமாக வந்தது சுலபமாக போய்விடும் .கடின உழைப்பினால் வந்தது தங்கும்,உழைப்பின்அருமையினை,பலத்தினைஅறிந்ததால் அதனை இழக்க விட மாட்டாய் . வாழ்வே நம்பிக்கையின் அடிப்படை.
நீதிக்கு துணை நிற்போம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வழிப்போக்கன்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
கர்பலாவின் நிகழ்வும், சமுதாயத்தின் பிளவும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
துன்பங்கள் இறை நியதி
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வினோத தீர்ப்புகள்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
விருந்தின் ஒழுக்கம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
உள்ளத்தூய்மை
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
உணர்வுகளை மதிப்போம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
உணர்வுகளை மதிப்போம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
ஜூம்மாவும் சமூகப் பொருப்பும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
வரலாற்றை திரும்பி பார்ப்போம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பள்ளியின் மற்றும் மாண்பும் ஒழுக்கங்களும்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
INTEREST DESTROY WEALTH வட்டி ஏன் ஹராம்
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின் சொற்பொழிவு
பெருமானார் (ஸல்) கூறிய 5 உபதேசங்கள்
இமாம் ஹபீப் முஹம்மத் நத்வி
ஹழ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி பேராசிரியர்: ஜாமிஆ அல்- உஸ்வதுல் ஹஸனா- பள்ளப்பட்டி
அவர் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்தார்.அவர் இப்போது 17 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சுமான்-இ-தைத்துல் இஸ்லாத்தில் (பொதுவாக “கிஷக்கு பல்லி” அல்லது “கிழக்கு மஸ்ஜித்” என்று அழைக்கப்படுகிறார்), பல்லப்பட்டி, கரூர் மாவட்டத்தில் தலைமை-இமாமாக பணியாற்றி வருகிறார்.
மேலும், பல்லப்பட்டியின் உஸ்வதுன் ஹசனா அரபு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
திருச்சியின் அன்வாருல் உலூம் அரபு கல்லூரியில் 1986 இல் “ஹாபிஸ்” பட்டப்படிப்பை முடித்தார்.
ஈரோட்டின் தாவூதியா அரபு கல்லூரியில் படித்த அவர் 1995 இல் “தாவூதி” பட்டம் பெற்றார்.
மேலும், சிறந்த இந்திய இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான தாருல் உலூம் நாத்வதுல் உலமா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்த அவர் 1997 இல் “நத்வி” பட்டம் பெற்றார்.
மௌலானா ஹபீப் நத்வி அவர்களின்
முழு சொற்ப்பொழிவுகள் கேட்க கீழே கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இந்த தமிழ் பயான் அனைவரும் பயனடைய பகிரவும்
முழு அத்தியாயம்
Share this Tamil Bayan with everyone.
ஹழ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
பேராசிரியர்: ஜாமிஆ அல்- உஸ்வதுல் ஹஸனா - பள்ளப்பட்டி
வாட்ஸ்அப் பயான் குழுவில் சேர கீழ்க்காணும்
இணைப்பைக் கிளிக் செய்யவும்.



